Indigo: `தொடரும் விமான ரத்து, தாமதம்' - பயணிகள் ஆர்ப்பாட்டம்; இண்டிகோ நிறுவனத்து...
BB Tamil 9: ``நீ யார் என்னைப் பத்தி பேசுறதுக்கு'' - FJ பார்வதி மோதல்; கலவரமான பிக் பாஸ் வீடு
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 59 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை.
மேலும் ஹவுஸ்மேட்ஸுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆதிரை பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்திருந்தார்.
பல நாள்கள் வெளியே இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆதிரை பார்த்துவிட்டு வந்ததனால் அவரது ஆட்டம் திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் முதல் புரொமோவில் பார்வதி, கம்ருதீன்,fJ மூவருக்கும் சண்டை நடக்கிறது.
"மூணு நாள் தான் தூங்குனேன்'னு சொல்றீங்க, கேம்-ல அப்படி என்ன பண்ணிடீங்க. உன்னை மாதிரி நான் ஒண்ணும் பார்வதிக்கு சப்போர்ட் பண்ணிட்டு இல்ல" என FJ கம்ருதீனிடம் சண்டைப் போடுகிறார்.
"என்னை வச்சு சண்டைப் போடுறதுக்கு உனக்கு எந்த உரிமையும் கிடையாது. நீ யார் என்னைப் பத்தி பேசுறதுக்கு. நான் என்ன பண்ணனும்'னு எனக்கு தெரியும்" என்று பார்வதி FJ-விடம் கோபப்பட்டு கத்துகிறார்.

















