Career: வெளிநாட்டில் 'ஆசிரியர்' பணி; ரூ.1.25 லட்சம் சம்பளம் - யார், எப்படி விண்ண...
BB Tamil 9: "பார்வதி பேட் டச்சுன்னு சொன்னா, ஆனா அம்மா சத்தியமா எதுவும் பண்ணல" - காட்டமான கம்ருதீன்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. நேற்று நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர்.
இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார்.
பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் டாஸ்க் நடக்க இருக்கிறது.
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் கம்ருதீனுக்கும், பார்வதிக்கும் வாக்குவாதம் நடக்கிறது.

"மறுபடியும் என்னை ஏமாத்திடுவான்னு எனக்கு பயமா இருக்கு. ஏற்கனவே திவாகர் பேச்சைக்கேட்டு என் பேரை கெடுத்திட்டா. பேட் டச்சுன்னு சொன்னா. ஆனா அம்மா சத்தியமா நான் எதுவும் பண்ணல" என்று கம்ருதீன் பார்வதி பற்றி வினோத் மற்றும் அமித்திடம் சொல்ல,
"என்னென்னமோ பேசுறான். பேமிலி வரதுக்காக இதெல்லாம் மறுபடியும் பேசுறான்" என்று பார்வதி கூறுகிறார். " என் வாழ்க்கையை பத்தி நீ யோசிச்சியா" என கம்ருதீன் பார்வதியை கேள்வி கேட்கிறார்.


















