``இந்தியாவின் 2-வது ஏஐ டீச்சிங் அசிஸ்டன்ட்'' -துணிக்கடை பொம்மையில் அரசு பள்ளி மா...
BB Tamil 9: "வினோத்துக்கு டைட்டில் வின்னர் பட்டம் கொடுக்குறதை ஏத்துக்கவே முடியாது"- காட்டமான ஆதிரை
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 60 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை.
மேலும் ஹவுஸ்மேட்ஸுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆதிரை பிக் பாஸ் வீட்டிற்கு ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார்.
பல நாள்கள் வெளியே இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆதிரை பார்த்துவிட்டு வந்ததனால் அவரது ஆட்டம் திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் முதல் புரொமோவில் எந்த இரண்டு நபர்கள் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மேடையில் ஃபைனல் ரிசல்ட்டிற்காக நிற்பார்கள் என்று கேட்கப்பட்டிருக்கிறது.
"கேம்மை புரிஞ்சுகிட்டு விளையாடுற விக்கல்ஸ் விக்ரம் இருப்பாங்க" என விக்ரமை கனியும், அரோராவும் சொல்கின்றனர்.
விக்கல்ஸ் விக்ரம் பார்வதியையும், ரம்யா பிரஜினையும் சொல்கின்றனர்.
அதேபோல "என் கூட 20 வருஷமா இருக்கிற என்னோட கோ கன்டஸ்டன்ட் சாண்ட்ரா அந்த மேடையில இருப்பாங்க" என பிரஜின் சொல்கிறார்.

தவிர பார்வதி, கம்ருதீன், வியானா மூவரும் வினோத்தை சொல்கின்றனர். "காமெடி பண்றாருங்கிறதுக்காக டைட்டில் வின்னர் பட்டத்தை வினோத்துக்கு கொடுக்குறதை என்னால ஏத்துக்கவே முடியாது" என ஆதிரை காட்டமாக பேசுகிறார்.





















