"பாஜக-வின் சி டீம் தான் விஜய்; ஸ்லீப்பர் செல்" - சாடும் அமைச்சர் ரகுபதி
BB Tamil 9: இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்றவர்கள் யார் யார்?
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர்.
நேற்று (நவ.23) பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கெமி வெளியேறினார்.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற இரண்டு நபர்களைத் தேர்வு செய்க என பிக் பாஸ் சொல்ல, ஹவுஸ் மேட்ஸ் ஒவ்வொரு காரணங்களுடன் சக போட்டியாளர்களை நாமினேட் செய்கின்றனர்.

"கணவன் மனைவியா விட்டுக்கொடுக்காம விளையாடுறாங்க" என சிலர் சாண்ட்ராவையும், " தேஞ்ச டேப்ரிகாட் ரெக்காடர் மாதிரி ஒரு விஷயத்தை சொல்லுவாங்க என திவ்யாவையும், "எல்லாரையும் திசை திருப்பி விடுறாங்க" என பார்வதியையும், "ஒருதலைபட்சமா இருக்காரு" என FJ-வையும், "இதுவரைக்கும் அவர் ஒண்ணுமே பண்ணல" என கனி திருவையும் நாமினேட் செய்திருக்கின்றனர்.


















