செய்திகள் :

Bharathiraja: "துயரத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி" - பாரதிராஜா மனைவி சந்திர லீலா

post image

இயக்குநர் இமயம் பாரதிராஜா நேற்று முன்தினம் (ஜீன்.10) உடல்நலக் குறைவால் காலமானார்.

அவரது உடல் நேற்று சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள காட் ரோட்டில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் பாரதிராஜாவின் மனைவி சந்திர லீலா துயரத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

மறைந்தார் இயக்குநர் இமயம் பாரதிராஜா
மறைந்தார் இயக்குநர் இமயம் பாரதிராஜா

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "எனது கணவர் இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்கள் ஜூன் 10 அன்று காலமான நிலையில் எங்கள் துயரத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி.

எனது கணவர் இறுதிச் சடங்கில் முழு அரசு மரியாதை வழங்க உத்தரவிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. விஜய் அவர்களுக்கும் ஆறுதலாய் நின்ற அனைத்து அமைச்சர் பெருமக்கள், தேவையான ஏற்பாடுகள் செய்த தேனி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் சென்னை மற்றும் தேனியைச் சேர்ந்த அரசு அதிகாரிகள், இரங்கல் செய்தி வெளியிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பல்துறை பிரமுகர்கள், செய்தி அறிந்து ஓடோடி வந்து துணை நின்ற திரையுலகினர், ரசிகப் பெருமக்கள், உறவுகள், நண்பர்கள் மற்றும் அவரின் இனிய தமிழ் மக்கள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பாரதிராஜா: ``உங்கள் மகனை உங்கள் மடியில் ஒப்படைத்துவிட்டோம்" - கவிஞர் வைரமுத்து உருக்கம்

இயக்குநர் இமயம் பாராதிராஜா மறைந்த நிலையில், அவரின் உடல் அவரின் சொந்த கிராமத்தில் அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கவிஞர் வைரமுத்து தன் எக்ஸ் பக்கத்தில்,``பிறந்த... மேலும் பார்க்க

What To Watch: 'கருப்பு', 'டபுள் ஆக்குபன்சி', ஹபீபி' - இந்த வார ரிலீஸ்கள் என்னென்ன?

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வெளியாகியிருக்கும் படங்கள்.டபுள் ஆக்குபென்சி - தமிழ்குஷ்பு தயாரிப்பில், அறிமுக இயக்குநரான அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்... மேலும் பார்க்க

Bharathiraja: 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பாரதிராஜா உடல் நல்லடக்கம் | Photo Album

பாரதிராஜாவுக்கு மக்கள் மரியாதைபாரதிராஜாவுக்கு மக்கள் மரியாதைபாரதிராஜாவுக்கு மக்கள் மரியாதைபாரதிராஜாவுக்கு மக்கள் மரியாதைபாரதிராஜாவுக்கு மக்கள் மரியாதைபாரதிராஜாவுக்கு மக்கள் மரியாதைபாரதிராஜாவுக்கு மக்க... மேலும் பார்க்க

தேனி: பாரதிராஜா உடலுக்கு திரைத்துறை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி | Photo Album

பாரதிராஜா மறைவுக்கு பாரதிராஜா மறைவுக்கு பாரதிராஜா மறைவுக்கு பாரதிராஜா மறைவுக்கு பாரதிராஜா மறைவுக்கு பாரதிராஜா மறைவுக்கு பாரதிராஜா மறைவுக்கு பாரதிராஜா மறைவுக்கு பாரதிராஜா மறைவுக்கு பாரதிராஜா மறைவுக்கு ... மேலும் பார்க்க

விடைபெற்றார் இயக்குநர் இமயம் பாரதிராஜா! — இறுதிச் சடங்கு செய்த மகள்

இயக்குநர் இமயம் என போற்றப்படுகிற பாரதிராஜா நேற்று காலமானார். பாரதிராஜவின் உடல் சென்னை, நீலங்கரையில் உள்ள அவருடைய இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. பாரதிராஜாவுடைய மகள் ஜ... மேலும் பார்க்க

சொந்த ஊர் தேனியில் இயக்குநர் பாரதிராஜாவின் உடல்; கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தும் மக்கள்

இயக்குனர் இமயம் என்று போற்றப்படுகிற பாரதிராஜா நேற்று காலமானார். பாரதிராஜாவின் உடல் சென்னை, நீலங்கரையில் உள்ள அவருடைய இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது.தன் மகள் ஜனனியிடம்... மேலும் பார்க்க