ஜி.ஆர்.டியின் நன்கொடைகள்: குழந்தைகள் முதல் கோயில் வரை; ரூ.53.7 லட்சத்திற்கும் அத...
Dharmendra: "இதயம் நொறுங்கிய நிலையில்..." - ஹேமமாலினியின் உருக்கமான பதிவு
கடந்த நவம்பர் மாதம் 24-ம் தேதி பாலிவுட்டின் பிரபல நடிகர் தர்மேந்திரா இயற்கை எய்தியிருந்தார். அவருடைய 90-வது பிறந்தநாள் இன்று.
தர்மேந்திராவின் பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்கள் பலரும் அவருடைய மும்பை இல்லத்திற்கு முன்பு திரண்டிருக்கிறார்கள்.
அங்கு தர்மேந்திராவின் மகன்களான பாபி தியோலும், சன்னி தியோலும் அவர்களைச் சந்தித்து வருகிறார்கள்.
இந்நிலையில், அவருடைய பிறந்தநாளை நடிகை ஹேமமாலினி அவருடைய எக்ஸ் கணக்கில் உருக்கமான பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில் அவர், “தரம் ஜி, என் அன்பு இதயமே, பிறந்தநாள் வாழ்த்துகள்! என்னை விட்டு நீங்கள் பிரிந்து சென்று இரண்டு வாரங்களுக்கும் மேல் ஆகிவிட்டது.
இதயம் நொறுங்கிய நிலையில், மெதுவாக என் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப முயல்கிறேன்.
ஆனால் நீங்கள் எப்போதும் என்னோடு இருப்பீர்கள் என்பது தெரியும். நாம் ஒன்றாக வாழ்ந்த மகிழ்ச்சியான நினைவுகள் ஒருபோதும் அழியாதவை.
Dharam ji
— Hema Malini (@dreamgirlhema) December 8, 2025
Happy birthday my dear heart❤️
More than two weeks have passed since you left me heartbroken, slowly gathering up the pieces and trying to reconstruct my life, knowing that you will always be with me in spirit. The joyful memories of our life together can never be… pic.twitter.com/zY3QBJN0YE
அந்தத் தருணங்களை மீண்டும் நினைத்துப் பார்ப்பது மட்டுமே எனக்குப் பெரும் ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தரும்.
நமது அன்பை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் நமது இரு அழகிய பெண்களுக்காகவும், என் இதயத்தில் என்றென்றும் தங்கியிருக்கும் அனைத்து நினைவுகளுக்காகவும் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

















