செய்திகள் :

``DMK is an emotion; இது நான் சேர வேண்டிய இடம்தான்; உதயம் வரும்" - உதயநிதி விழாவில் கமல்

post image

தமிழக அரசியலில் அ.தி.மு.க, தி.மு.க என இரு பிரதான கட்சிகளையும் எதிர்த்து 2018-ல் மக்கள் நீதி மய்யம் எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி தனது முதல் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட கமல்ஹாசன், கட்சி ஆரம்பித்த ஐந்தே ஆண்டுகளில் தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்தார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராஜ்ய சபா சீட்டுக்காக தி.மு.க-வுடன் ஒப்பந்தம் போட்டு தேர்தலிலேயே மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை.

அந்த ஒப்பந்தத்தின்படி தற்போது மாநிலங்களவையில் எம்.பி-யாக இருக்கிறார் கமல்.

ஸ்டாலின் - கமல்
ஸ்டாலின் - கமல்

இவ்வாறிருக்க 10 நாள்களுக்கு முன்பு நிகழ்ச்சியொன்றில் கமல், ``எதுக்காக நீங்க தி.மு.க-வோடு சேர்ந்தீங்க, நீங்கதான் டிவி மேல ரிமோட் தூக்கி போட்டீங்களே, ஏன் மறுபடியும் அங்க போனீங்களேன்னு கேட்டீங்கனா... ஆமா ரிமோட் தூக்கி போட்டேன்.

விமர்சிக்கும் உரிமை ஜனநாயகத்துக்கு உண்டு. ஒருத்தருக்கொருத்தர் அடிச்சிக்க வேணாம் இனிமே, எவனோ வந்து ரிமோட்ட தூக்கிட்டு போயிட்றான்... அப்படின்னு எடுத்த முடிவு இது. இந்தக் கூட்டணி புரிஞ்சா புரிஞ்சிக்கோங்க, புரியலன்னா சும்மா இருங்க" என்று தி.மு.க-வுடனான கூட்டணி குறித்து பேசியிருந்தார்.

இந்த நிலையில் சென்னையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி தி.மு.க சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தி.மு.க-வுடன் சேர்ந்தது பற்றி கமல் மீண்டும் விளக்கியிருக்கிறார்.

நிகழ்ச்சியில் பேசிய கமல், ``இது அரசியல் இக்கட்டுக்காகவோ சூழலுக்காகவோ நான் சேர்ந்த இடமல்ல. நான் சேரவேண்டிய இடம்தான் இது. எங்கள் கொள்கைகள் எல்லாம் ஒரேமாதிரியானது.

நாங்கள் இதை நிகழ்த்தியே ஆகவேண்டும் என்று போர்க்குரல் கொடுப்பது இவர்களோடு அல்ல.

இதனை நடத்த வேண்டும் என்று போட்டியாகத் தேர்தலில் போட்டியிட்டபோது நாங்கள் சொன்ன ஐடியாவாக இருந்தாலும் அதை எடுத்துக்கொண்டு செயல்படுத்திக் காட்டியவர்கள் இவர்கள். இவர்களோடு சேர்வதா இல்லை யாரென்றே தெரியாதவர்களுடன் சேர்வதா...

உதயநிதி ஸ்டாலின் - கமல்ஹாசன்
உதயநிதி ஸ்டாலின் - கமல்ஹாசன்

கலைஞருக்கு ஓய்வு கொடுத்தது சரிதான். எங்களுக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் அந்த ஓய்வுகூட கொடுக்கலனா 90 வயதுக்கு மேல அவர் வாழ்ந்திருக்க மாட்டார். அந்த ஓய்வுக்கு நன்றி.

அதேபோல் அவருடைய பேரனும் நீண்ட நாள் வாழ்ந்து இந்த அமைப்புக்கு நன்மை சேர்க்க வேண்டும். தி.மு.க என்பது ஒரு உணர்வு.

என் வயது என்னவோ அதுதான் தி.மு.க-வைப் பற்றிய என் புரிதல். நான் கண்திறந்தபோது பார்த்த சூரியன் இதான். இருட்டு வரும், நாளை சூரியன் வரும்.

இருட்டைப் பார்த்து நான் பயப்பட மாட்டேன். ஏனென்றால் விடியும், உதயம் வரும். உதயநிதியும் வருவாரு, முதலமைச்சரும்... இன்னொரு பாராட்டு விழாவுக்கு இந்த அரங்கம் பத்தாது" என்று சிரித்தவாறே கூறினார்.

``சுடுகாட்டுக்கு சாலை இல்லை, சேறு சகதியில் நடந்து போகிறோம்'' - நான்கு தலைமுறையாக திண்டாடும் மக்கள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆலாலசுந்தரம் ஊராட்சியில், திருஞானசம்பந்தம் வள்ளுவர் தெருவில் இருபதுக்கும் மேற்பட்ட வள்ளுவ சமுதாய குடும்பங்கள் வசிக்கின்றனர்.இங்கு இறந்தவர்களின் உடலை சுடுகாட்டிற்கு ... மேலும் பார்க்க

அபாய கட்அவுட்கள்; நடைபாதை பேனர்கள்; உத்தரவை மீறும் உடன்பிறப்புகள்! - உதயநிதி பர்த்டே காட்சிகள்

நவம்பர் 27 ஆம் தேதியான இன்று துணை முதல்வரும் திமுகவின் இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தனது 48 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அறிவாலயத்தில் வெகு விமர்சையாக கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ... மேலும் பார்க்க

TVK: தவெக-வில் இணைந்த செங்கோட்டையனுக்கு இரண்டு பொறுப்புகள் - அறிவித்த விஜய்!

தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு இரண்டு பதவி பொறுப்புகளை வழங்கி இருக்கிறார் விஜய். கழக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், ஈரோடு திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக... மேலும் பார்க்க

TVK : 'விசுவாசம், தவிப்பு, சங்கடம்.!' - பனையூரில் தயங்கி நின்ற செங்கோட்டையன்!

இரண்டு நாட்களாக சென்னையை ரவுண்ட் அடித்து பரபரப்பை கிளப்பிக் கொண்டிருந்த செங்கோட்டையன், இன்று பனையூருக்கு வண்டியை திருப்பிவிட்டார். விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்திருக்கிறார். அதிமுகவிலிருந்து நீக்க... மேலும் பார்க்க