செய்திகள் :

Doctor Vikatan: பழங்களை உணவோடு சேர்த்துச் சாப்பிட்டால் செரிமானம் ஆகாதா?

post image

Doctor Vikatan: பழங்களை உணவோடு சேர்த்துச் சாப்பிட்டால் செரிமானம் பாதிக்கப்படும் என்கிறார்களே, அது உண்மையா... அப்படி உணவோடு சேர்த்துச் சாப்பிட்டால் என்ன பாதிப்பு வரும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர், சௌந்தர்யா சுப்ரமணியன்

 ஊட்டச்சத்து ஆலோசகர், சௌந்தர்யா சுப்ரமணியன்
ஊட்டச்சத்து ஆலோசகர், சௌந்தர்யா சுப்ரமணியன்

பழங்கள் பொதுவாக 20-30 நிமிடங்களில் செரிமானமாகிவிடும். ஆனால், சமைத்த உணவுகள் அல்லது புரதம் நிறைந்த உணவுகள் செரிமானமாக 2 முதல் 3 மணி நேரம் ஆகும்.

இதனால், உணவோடு சேர்த்து, பழங்களைச் சாப்பிடும்போது, பழங்களில் உள்ள ஊட்டச்சத்துகள் முழுமையாக உறிஞ்சப்படாமல் போகலாம் அல்லது மிகக் குறைவாகவே உறிஞ்சப்படலாம். இப்படிச் சாப்பிடும் பழங்களால் உடலுக்கு எந்த நன்மையும் ஏற்படாது.

'இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்' (IBS) அல்லது சென்சிட்டிவ்வான குடல் பாதிப்பு (sensitive gut) உள்ள சிலருக்கு, உணவோடு சேர்த்து பழங்களைச் செரிப்பது கடினமாக இருக்கும். இது வயிற்றில் பழங்கள் நொதித்துப்போக (ferment) வழிவகுத்து, வயிற்று உப்புசம் அல்லது  வாயுத் தொல்லையை ஏற்படுத்தலாம்.  

அதிக கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து) உள்ள உணவோடு பழங்களையும் சேர்த்துச் சாப்பிடுவது, அந்த உணவின் கிளைசெமிக் குறியீட்டை (Glycemic index) அல்லது கிளைசெமிக் சுமையை (Glycemic load) அதிகரிக்கலாம்.  

அதாவது, சாப்பிட்ட உணவானது, எவ்வளவு சீக்கிரம் ரத்தச் சர்க்கரையாக மாறுகிறது என்பதே கிளைசெமிக் இண்டெக்ஸ்.   இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிக வேகமாக உயரும்.

சாப்பிட்ட உணவானது, எவ்வளவு சீக்கிரம் ரத்தச் சர்க்கரையாக மாறுகிறது என்பதே கிளைசெமிக் இண்டெக்ஸ்.

வயிறு நிறைந்த உணவுக்குப் பிறகு ஏற்படும் மந்தநிலை அல்லது கனமான உணர்வைத் தவிர்க்க, பழங்களைத் தனியாக ஓர் உணவாகச் சாப்பிடுவதே சிறந்தது என்று உணவுமுறைகள் அறிவுறுத்துகின்றன. 

பழங்களில் வைட்டமின்கள் (முக்கியமாக வைட்டமின் சி) மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. வெறும் வயிற்றில் சாப்பிடும்போது இவை  நன்றாக உறிஞ்சப்படலாம். இவற்றை உணவோடு சேர்த்து எடுக்கும்போது ஊட்டச்சத்துகள் உறிஞ்சப்படுவது தடைப்படலாம்.

உணவுக்கு முன் பழங்களைச் சாப்பிடுவது, அதிலுள்ள நார்ச்சத்து (fiber) மற்றும் நீர்ச்சத்து காரணமாக நாம் அதிகமாக உண்பதைத் தடுக்கிறது. இது உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு மிகவும் ஏற்றது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Doctor Vikatan: பிரசவித்த பெண்களுக்கு பத்திய உணவு... ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்தாதா?

Doctor Vikatan:பிரசவத்திற்குப் பிறகு கிராமங்களிலும் நகரங்களில் சிலரும் பெண்களுக்கு பத்தியச் சாப்பாடு கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். பத்தியச் சாப்பாடு கொடுப்பது பிரசவித்த பெண்களுக்கு உண்மையிலே... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஏசி அறையில் வேலை... சரும வறட்சி, தொடர் தும்மல்... தப்பிப்பது எப்படி?

Doctor Vikatan: ஏசி அறையிலேயே 8 மணி நேரம் வேலை செய்யும் எங்களைப் போன்ற ஐடி ஊழியர்களுக்கு, அடிக்கடி சருமத்தில் வறட்சியும் தும்மலும் ஏற்படுவது ஏன்.. இதிலிருந்து எப்படித் தப்பிப்பது?பதில் சொல்கிறார் இங்க... மேலும் பார்க்க

எல்-நினோ தாக்கம்... அதிகரிக்கும் மாரடைப்பு நிகழ்வுகள்! - பாதுகாத்துக்கொள்வது எப்படி? | El Nino

பொதுவாக குளிர்காலத்தில் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் அதிகமாக ஏற்படும் என்கின்றன புள்ளி விவரங்கள். ஆனால் சமீபமாக கோடைக்காலத்திலும் இந்த பாதிப்புகள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கி... மேலும் பார்க்க

Doctor Vikatan: தாய்ப்பால் இல்லாத குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பது சரியா?

Doctor Vikatan: குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பதை ஒரு வயது வரை தவிர்க்க வேண்டும் என்று பெரும்பலான மருத்துவர்கள்சொல்வதைக் கேட்கிறோம். தாய்ப்பால் இல்லாத நிலையில் பசும்பால் அதற்கான மாற்றாகாதா.... அதைக் ... மேலும் பார்க்க

Doctor Vikatan: சீயக்காயா... ஷாம்பூவா... தலைக்குக் குளிக்க ஏற்றது எது?

Doctor Vikatan: தலைக்குக் குளிக்க சீயக்காய்த் தூள்தான் சிறந்தது, காலங்காலமாக அதைத்தான் உபயோகித்து வந்தோம் என ஒரு பிரிவினர் சொல்கிறார்கள். சீயக்காய் எல்லாம் வேஸ்ட்... ஷாம்பூதான் பெஸ்ட் என்று சொல்கிறார்... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஆஸ்பிரின் அலர்ஜி உள்ள இதய நோயாளிகளுக்கு மாற்று மருந்து உண்டா?

Doctor Vikatan: ஆஸ்பிரின் (Aspirin) மற்றும் குளோபிடோக்ரல் (Clopidogrel) மாத்திரைகள் இரண்டிற்கும் ஒவ்வாமை (Allergy) உள்ள நோயாளிகளுக்கு மாற்று மருந்துகள் என்ன?-m.mohamed Rafic, விகடன் இணையத்திலிருந்து ப... மேலும் பார்க்க