செய்திகள் :

GT vs RCB: "கடந்த சீசனை போல இந்த சீசனில் அழுத்தம் இல்லை, ஆனால்.!" - விராட் கோலி

post image

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த, ஐ.பி.எல். 19-வது சீசனின் இறுதிப்போட்டியில், குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் அகமதாபாத் மைதானத்தில் மோதின.

டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார், குஜராத் அணியின் பேட்டிங் வரிசையைக் கட்டம்கட்டித் தூக்கி, முதல் இன்னிங்ஸிலேயே வெற்றியைத் தன் பக்கம் கொண்டுவந்தார்.

GT vs RCB Match
GT vs RCB Match

குஜராத் அணி 20 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்துத் திணற, இந்த இலக்கை எளிதாக விரட்டிய பெங்களூரு அணி, விராட் கோலியின் அதிரடி ஆட்டதால்,அபார வெற்றி பெற்று தனது இரண்டாவது சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

இந்நிலையில் போட்டிக்கு பிறகு பேசிய விராட் கோலி, " கடந்த சீசனை போல அழுத்தம் இந்த சீசனில் இல்லை. நம்முடைய திறன்களிலும் நம்முடைய திட்டங்களிலும் மட்டும் கவனமாக இருந்தால் போதும் என வீரர்களிடம் கூறினோம். இடையில் கொஞ்சம் தோற்றோம்.

விராட் கோலி

மும்பைக்கு எதிரான வெற்றி எங்களுக்கு மீண்டும் நம்பிக்கை கொடுத்தது. எங்கள் அணி எந்த ஒரு வீரரையும் நம்பி இல்லை. அணியில் நிறைய ஆட்டநாயகர்கள் இருந்தார்கள். எங்கள் அணி ஒரு முழுமையான அணியாக இருந்தது." என்றார்

.

GT vs RCB : 'ஆர்.சி.பி அந்த சவாலை திறம்பட சமாளித்திருக்கிறது' - சச்சின் பாராட்டு

2026 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி இரண்டாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றி இருக்கிறது.Rcbஇந்நி... மேலும் பார்க்க

GT vs RCB: ' கோலிக்கு இது உச்ச மகிழ்ச்சியை கொடுக்கக்கூடிய நல்ல தருணம் ' - க்ரூணால் பாண்ட்யா

19-வது ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டியில், தனது இரண்டாவது சாம்பியன் பட்டத்தைக் குறிவைத்து குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் அஹமதாபாத் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.டாஸ் வென்ற பெங்களூரு அணி, துல்லியமான ... மேலும் பார்க்க

RCB: "இந்திய அணித் தேர்வு பத்தி யோசிக்கல; என் கவனம் இதுலதான் இருக்கு..." - கேப்டன் ரஜத் பட்டிதார்

நடப்பு ஐபிஎல் சாம்பியனான பெங்களூரு அணியும், குஜராத் அணியும் இறுதிப் போட்டியில் இன்று (மே. 31) மோத இருக்கின்றன.போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கும் பெங்களூரு கேப்டன் ரஜத் பட்டி... மேலும் பார்க்க

IPL 2026: ''அப்ப கிளவுசில பசை தடவிட்டு ஆடுங்க..." - சாய் சுதர்சனின் Hit Wicket-ஐ விமர்சித்த சேவாக்

2026 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. அந்த அணியின் தொடக்க வீரர் சாய் சுதர்சன் இந்தச் சீசனில் அபாரமாக விளையாடி ஆரஞ்சு தொப்பிக்கான பட்டியலில் முதலிடத்தில் இருக... மேலும் பார்க்க

Sooryavanshi: சதம் மிஸ்... ஆனால் சாதனைகள் மிஸ் ஆகாது! - ரெக்கார்டுகளை நொறுக்கிய 15 வயது சூரியவன்ஷி!

ஐபிஎல் 2026 சீசனின் குவாலிஃபயர் 2 போட்டி. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இந்த வாழ்வா சாவா ஆட்டத்தில், பீகாரைச் சேர்ந்த 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி சதம் அடிக்கத் தவறினாலும், எண்ணற்ற சாதனைகளை ... மேலும் பார்க்க

LSG: கேப்டன் பதவியில் இருந்து விலகிய ரிஷப்; லக்னோ அணி வெளியிட்ட அறிவிப்பு என்ன?

லக்னோ அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரிஷப் பண்ட் விலகி இருக்கிறார். இதனை அணி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்தத் தொடரில் ரிஷப் பண்ட் த... மேலும் பார்க்க