செய்திகள் :

'நான் அவுட் ஆகியிருந்தாலும் இந்த டீம் பந்தயம் அடிச்சிருக்கும்!' - விராட் கோலி பெருமிதம்!

post image

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றிருக்கிறது ஆர்.சி.பி.

கோலி
கோலி

ஆட்டநாயகன் விருதை வென்ற கோலி பேசுகையில், 'நான் இப்படியான தருணம் பற்றி நிறைய கனவு கண்டிருக்கிறேன். போட்டியை வெல்கையில் களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுக்கும் வாய்ப்பு இன்றுதான் கிடைத்திருக்கிறது.

நிறைய இளம் வீரர்கள் வந்துவிட்டார்கள். அவர்கள் என்னுடைய ஆட்டம் மேம்படவும் காரணமாக இருக்கிறார்கள். அணிக்கு என்னுடைய பங்களிப்பை தவறாமல் கொடுக்க முடிவதில் மகிழ்ச்சி. நாங்கள் புள்ளிப்பட்டியலில் முதலில் முடிக்க நினைத்தோம். அதை செய்தோம்.

கோலி
கோலி

நீங்கள் எந்த அணியுடன் இறுதிப்போட்டியில் ஆட விரும்புகிறீர்கள் என கேட்டார்கள். நாங்கள் அப்படி எந்த அணியையும் நினைக்கவில்லை. எல்லா அணியையும் மதித்தோம். ஆனால், கவனம் முழுவதும் எங்கள் அணி மீது மட்டுமே இருந்தது. இன்றைய போட்டியில் நான் அவுட் ஆகியிருந்தாலும் மற்ற வீரர்கள் போட்டியை முடித்திருப்பார்கள். இந்த அணி அப்படித்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. வெங்கடேஷ் கொடுத்த தொடக்கம் பெரிய உதவியாக இருந்தது. எங்களுக்கு 7 ஹோம் மேட்ச்கள் இல்லை. 14 போட்டிகளுமே ஹோம் மேட்ச்களாகத்தான் இருந்தது. நாங்கள் எங்கே சென்றாலும் அங்கே எங்களின் ரசிகர்கள் இருந்தார்கள். இங்கே குஜராத்தில் கூட 90% எங்களின் ரசிகர்களே இருந்தார்கள். அவர்களின் ஆதரவு அளப்பரியது. அவர்கள் முன்பாக கோப்பையை. வெல்வதில் மகிழ்ச்சி' என்றார்.

-

'நான் விக்கெட் எடுக்கலன்னாஹேசல்வுட் எடுப்பார்... அவர் எடுக்கலன்னா...' - ரகசியம் கூறும் RCB பௌலர்கள்

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றிருக்கிறது ஆர்.சி.பி.கோலிஆர்.சி.பியின் வெற்றிக்கு உதவிய சீனியர் பௌலர்களான பு... மேலும் பார்க்க

வேட்டையாடிய விராட் கோலி; இரண்டாவது முறையாக கோப்பையை வென்று சாதித்த ஆர்.சி.பி!

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்று வரலாறு படைத்திருக்கிறது பெங்களூரு அணி. ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை சென்னை மற்றும் மும்பை அணிகள் மட்டுமே தொட... மேலும் பார்க்க

'சொந்த மைதானத்தில் ஆர்.சி.பியை எதிர்கொள்வதில் மகிழ்ச்சி!' - இறுதிப்போட்டி குறித்து கில்

ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக குஜராத் அணி இறுதி போட்டியை எட்டியுள்ளது. நாளை (மே31)அகமதாபாத் மைதானத்தில் பெங்களூரு அணியை எதிர்கொள்ள உள்ளது.நேற்று நடந்த குவாலிஃபையர் 2 போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ... மேலும் பார்க்க

RR: கேப்டன் பராக் பேச்சால் சலசலப்பு? 'அது அவர் கருத்து, எங்கள் நோக்கமல்ல!' - சங்கக்காரா தடாலடி

ஐபிஎல் தொடரில் குவாலிஃபயர் 2 வரை முன்னேறி அசத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், கேப்டன் ரியான் பராக் பேசிய கருத்து ஒன்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. "நாங்கள் பிளேஆஃப் சுற்றுக்கு வருவோம் என எதிர்பார்க்கப்... மேலும் பார்க்க

'சூர்யவன்ஷி ஒரு நாள் எங்களுக்காக கோப்பையை ஜெயிச்சு கொடுப்பான்!' - ரியான் பராக் நம்பிக்கை

ஐபிஎல் 2026-ன் நேற்றைய(மே 29) குவாலிபையர் 2 போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த விறுவிறுப்பான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில... மேலும் பார்க்க

'சூர்யவன்ஷியின் போராட்டம் வீண்; தட்டித் தூக்கிய குஜராத் டைட்டன்ஸ்! - எப்படி வென்றது கில் & கோ?

குவாலிஃபயர் - 2 இல் ராஜஸ்தான் ராயல்ஸை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருக்கிறது குஜராத் டைட்டன்ஸ். குஜராத் டைட்டன்ஸுக்கும் ராஜஸ்தான் ராயல்ஸுக்கும் இந்த சீசனில் ... மேலும் பார்க்க