செய்திகள் :

RCB: 'விக்கெட்டுகள் விழுந்தபோது பதற்றமாக இருக்கிறேனா ன்னு வெங்கடேஷ் ஐயர் கேட்டார், ஆனா.!'- படிக்கல்

post image

19-வது ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டியில், தனது இரண்டாவது சாம்பியன் பட்டத்தைக் குறிவைத்து குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் அஹமதாபாத் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற பெங்களூரு அணி, துல்லியமான பந்துவீச்சின் மூலம் குஜராத் அணியை முதல் இன்னிங்ஸிலேயே கட்டுப்படுத்தியது.

Rcb
Rcb

20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்த குஜராத் அணியின் இலக்கை, பெங்களூரு அணி சிரமமின்றி விரட்டியதன் மூலம் தனது இரண்டாவது ஐபிஎல் கோப்பையை வென்று, மீண்டும் சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தியுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

இந்நிலையில் அணியின் வெற்றி குறித்து பேசிய படிக்கல்,"இது நம்ப முடியாத ஒரு பயணமாக இருந்தது. சிறந்த வீரர்களுடன் இருக்கும் போது, நீங்களும் மேலும் முன்னேறுவீர்கள். எங்கள் பந்துவீச்சாளர்கள் இந்த சீசன் முழுவதும் அற்புதமாக செயல்பட்டனர்.

விக்கெட்டுகள் விழுந்தபோது நான் பதற்றமாக இருக்கிறேனா என்று வெங்கடேஷ் ஐயர் கேட்டார்.

படிக்கல்
படிக்கல்

ஆனால் விராட் கோலி மறுமுனையில் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது பதற்றப்பட வேண்டிய அவசியமே இல்லை. அவர் இந்த சீசனில் அபாரமாக விளையாடினார்.

கோப்பையை வெல்வது என்பது நாங்கள் நீண்ட காலமாக ஏங்கிய ஒன்று. இறுதியாக அந்த கனவு நனவாகியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும், எந்த காயமும் இல்லாமல் இந்த சீசனை நிறைவு செய்ததும் எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது" என்று பேசியிருக்கிறார்.

GT vs RCB : 'ஆர்.சி.பி அந்த சவாலை திறம்பட சமாளித்திருக்கிறது' - சச்சின் பாராட்டு

2026 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி இரண்டாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றி இருக்கிறது.Rcbஇந்நி... மேலும் பார்க்க

GT vs RCB: ' கோலிக்கு இது உச்ச மகிழ்ச்சியை கொடுக்கக்கூடிய நல்ல தருணம் ' - க்ரூணால் பாண்ட்யா

19-வது ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டியில், தனது இரண்டாவது சாம்பியன் பட்டத்தைக் குறிவைத்து குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் அஹமதாபாத் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.டாஸ் வென்ற பெங்களூரு அணி, துல்லியமான ... மேலும் பார்க்க

GT vs RCB: "கடந்த சீசனை போல இந்த சீசனில் அழுத்தம் இல்லை, ஆனால்.!" - விராட் கோலி

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த, ஐ.பி.எல். 19-வது சீசனின் இறுதிப்போட்டியில், குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் அகமதாபாத் மைதானத்தில் மோதின.டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்... மேலும் பார்க்க

RCB: "இந்திய அணித் தேர்வு பத்தி யோசிக்கல; என் கவனம் இதுலதான் இருக்கு..." - கேப்டன் ரஜத் பட்டிதார்

நடப்பு ஐபிஎல் சாம்பியனான பெங்களூரு அணியும், குஜராத் அணியும் இறுதிப் போட்டியில் இன்று (மே. 31) மோத இருக்கின்றன.போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கும் பெங்களூரு கேப்டன் ரஜத் பட்டி... மேலும் பார்க்க

IPL 2026: ''அப்ப கிளவுசில பசை தடவிட்டு ஆடுங்க..." - சாய் சுதர்சனின் Hit Wicket-ஐ விமர்சித்த சேவாக்

2026 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. அந்த அணியின் தொடக்க வீரர் சாய் சுதர்சன் இந்தச் சீசனில் அபாரமாக விளையாடி ஆரஞ்சு தொப்பிக்கான பட்டியலில் முதலிடத்தில் இருக... மேலும் பார்க்க

Sooryavanshi: சதம் மிஸ்... ஆனால் சாதனைகள் மிஸ் ஆகாது! - ரெக்கார்டுகளை நொறுக்கிய 15 வயது சூரியவன்ஷி!

ஐபிஎல் 2026 சீசனின் குவாலிஃபயர் 2 போட்டி. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இந்த வாழ்வா சாவா ஆட்டத்தில், பீகாரைச் சேர்ந்த 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி சதம் அடிக்கத் தவறினாலும், எண்ணற்ற சாதனைகளை ... மேலும் பார்க்க