செய்திகள் :

GT vs RCB: 'நான் கனவிலும் இதை நினைக்கவில்லை, இந்த கோப்பை.!' -ரஜத் பட்டிதர் நெகிழ்ச்சி

post image

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த, ஐ.பி.எல். 19-வது சீசனின் இறுதிப்போட்டியில், குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் அகமதாபாத் மைதானத்தில் மோதின.

டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார், குஜராத் அணியின் பேட்டிங் வரிசையைக் கட்டம்கட்டித் தூக்கி, முதல் இன்னிங்ஸிலேயே வெற்றியைத் தன் பக்கம் கொண்டுவந்தார்.

GT vs RCB Match
GT vs RCB Match

குஜராத் அணி 20 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்துத் திணற, இந்த இலக்கை எளிதாக விரட்டிய பெங்களூரு அணி, விராட் கோலியின் அதிரடி ஆட்டதால்,அபார வெற்றி பெற்று தனது இரண்டாவது சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

இந்நிலையில் வெற்றி குறித்து பேசிய ரஜத் பட்டிதர்," இந்த வெற்றி மிகவும் அற்புதம் வாய்ந்தது. நாங்கள் இந்த மைதானத்திற்கு வந்தபோதே கடந்த ஆண்டின் பல நினைவுகள் மனக்கண்ணில் வந்து போயின.

இப்போது என் மகிழ்ச்சியை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை, அவ்வளவு நன்றாக உணர்கிறேன். எங்களிடம் மிகத் தெளிவான திட்டமிடல் இருந்தது. ஆர்சிபி அணியின் கேப்டனாகி, கோப்பையை உயர்த்துவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. இது என் தலையெழுத்தில் எழுதப்பட்ட ஒன்று என்றுதான் நினைக்கிறேன், இதற்கு நான் என்றும் நன்றிக்கடன்பட்டவன்.

Rcb
Rcb

கடந்த ஆண்டை விட இந்த முறை நாங்கள் சற்று கூடுதல் நம்பிக்கையுடன் இருந்தோம். மைதானத்திற்குள் ரசிகர்கள் திரண்டு வந்த விதம், நாங்கள் எங்கு விளையாடினாலும் அது எங்களது சொந்த மைதானம் போன்ற உணர்வையே தந்தது.

இந்தத் தொடருக்கு முந்தைய எனது ஆயத்தங்கள் எனக்குப் பெரிதும் உதவின. எந்தெந்த ஷாட்டுகள் எனக்குச் சிறப்பாக வரும் என்பதை நானே பகுப்பாய்வு செய்து கொண்டேன்.

தினேஷ் கார்த்திக்கிடம் இருந்து எனக்குக் கிடைத்த ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன, அவர் எப்போதும் அணிக்காக முன்னிற்கக்கூடியவர். இந்த வெற்றி மீண்டும் உங்களுக்கானது ஆர்சிபி ரசிகர்களே! ஈ சாலா கப் நமதே," என அவர் தெரிவித்தார்.

GT vs RCB : 'ஆர்.சி.பி அந்த சவாலை திறம்பட சமாளித்திருக்கிறது' - சச்சின் பாராட்டு

2026 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி இரண்டாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றி இருக்கிறது.Rcbஇந்நி... மேலும் பார்க்க

RCB: 'விக்கெட்டுகள் விழுந்தபோது பதற்றமாக இருக்கிறேனா ன்னு வெங்கடேஷ் ஐயர் கேட்டார், ஆனா.!'- படிக்கல்

19-வது ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டியில், தனது இரண்டாவது சாம்பியன் பட்டத்தைக் குறிவைத்து குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் அஹமதாபாத் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பெங்களூரு அணி, துல்லியமான... மேலும் பார்க்க

GT vs RCB: ' கோலிக்கு இது உச்ச மகிழ்ச்சியை கொடுக்கக்கூடிய நல்ல தருணம் ' - க்ரூணால் பாண்ட்யா

19-வது ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டியில், தனது இரண்டாவது சாம்பியன் பட்டத்தைக் குறிவைத்து குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் அஹமதாபாத் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.டாஸ் வென்ற பெங்களூரு அணி, துல்லியமான ... மேலும் பார்க்க

GT vs RCB: "கடந்த சீசனை போல இந்த சீசனில் அழுத்தம் இல்லை, ஆனால்.!" - விராட் கோலி

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த, ஐ.பி.எல். 19-வது சீசனின் இறுதிப்போட்டியில், குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் அகமதாபாத் மைதானத்தில் மோதின.டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்... மேலும் பார்க்க

RCB: "இந்திய அணித் தேர்வு பத்தி யோசிக்கல; என் கவனம் இதுலதான் இருக்கு..." - கேப்டன் ரஜத் பட்டிதார்

நடப்பு ஐபிஎல் சாம்பியனான பெங்களூரு அணியும், குஜராத் அணியும் இறுதிப் போட்டியில் இன்று (மே. 31) மோத இருக்கின்றன.போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கும் பெங்களூரு கேப்டன் ரஜத் பட்டி... மேலும் பார்க்க

IPL 2026: ''அப்ப கிளவுசில பசை தடவிட்டு ஆடுங்க..." - சாய் சுதர்சனின் Hit Wicket-ஐ விமர்சித்த சேவாக்

2026 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. அந்த அணியின் தொடக்க வீரர் சாய் சுதர்சன் இந்தச் சீசனில் அபாரமாக விளையாடி ஆரஞ்சு தொப்பிக்கான பட்டியலில் முதலிடத்தில் இருக... மேலும் பார்க்க