செய்திகள் :

Doctor Vikatan: Flax Seeds எனப்படும் ஆளி விதை; அப்படியே சாப்பிடுவது சரியானதா?

post image

Doctor Vikatan: என்னுடைய தோழி ஃபிளாக்ஸ் சீட்ஸ் எனப்படும் ஆளி விதைகளைப் பொடித்துவைத்துக்கொண்டு தினமும்  சமையலில் சேர்ப்பதாகச் சொல்கிறாள். ஆனால், ஆளி விதைகளை அப்படியே சாப்பிடுவதாக நிறைய பேர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இவை இரண்டில் எது சரி... எப்படி, எவ்வளவு சாப்பிட வேண்டும்... ஆளி விதைகளால் ஆரோக்கியம் மேம்படுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரான ஷைனி சுரேந்திரன். 

உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரான ஷைனி சுரேந்திரன்
உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரான ஷைனி சுரேந்திரன்

ஃபிளாக்ஸ் சீட்ஸ் (Flax Seeds) எனப்படும் ஆளி விதைகள் இன்று மிகச்சிறந்த 'சூப்பர் ஃபுட்' ஆக கொண்டாடப்படும் உணவாக இருக்கிறது. இதிலுள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் (omega 3 fatty acid)  இதய ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது. 

நார்ச்சத்து நிறைந்தது என்பதால் செரிமானத்தைச் சீராக்கி, மலச்சிக்கலைத் தடுக்க உதவும். மிகச் சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாகச் செயல்படுவதால் புற்றுநோய் உள்ளிட்ட ஆபத்துகள் குறைகின்றன. 

சைவ உணவுக்காரர்களுக்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கிடைக்கும்படியான உணவுகளே இல்லை என்ற பெருங்கவலை உண்டு. அவர்களுக்கெல்லாம் 'ஃபிளாக்ஸ் சீட்ஸ்' எனப்படும் ஆளிவிதைகள் பெஸ்ட் சாய்ஸ்.

விதைகள் வடிவில் கிடைக்கும் ஃபிளாக்ஸ் சீட்ஸை எப்படிச் சாப்பிட வேண்டும் என்ற கேள்வியும் பலருக்கு உண்டு.  செரிமானத் தொந்தரவுள் இல்லாமலிருக்க, ஃபிளாக்ஸ் சீட்ஸைப் பொடித்துச் சாப்பிடலாம். இந்தப் பொடியை நீங்கள் தினமும் உங்கள் உணவுகளில் வெவ்வேறு விதங்களில் 3 டீஸ்பூன் அளவுக்கு எடுத்துக்கொள்ளலாம்.

மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள், வாய்வு தொந்தரவால் அவதிப்படுவோர், வயிற்று உப்புசத்தால் பாதிக்கப்படுவோர் எல்லாம் ஃபிளாக்ஸ் சீட்ஸ் பவுடரைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.

சைவ உணவுக்காரர்களுக்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கிடைக்கும்படியான உணவுகளே இல்லை என்ற பெருங்கவலை உண்டு. அவர்களுக்கெல்லாம் 'ஃபிளாக்ஸ் சீட்ஸ்' எனப்படும் ஆளிவிதைகள் பெஸ்ட் சாய்ஸ்.

சிலருக்கு எப்போதும் குடல் தொடர்பான ஏதோ ஒரு பிரச்னை இருந்துகொண்டே இருக்கும். எதையாவது செய்து அந்தப் பிரச்னையிலிருந்து வெளியே வர வேண்டும் என நினைத்தால், ஃபிளாக்ஸ் சீட்ஸ் பவுடரை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து, சிறிதளவு தயிரில் கலந்து சாப்பிடுவது ஆகச் சிறந்த தீர்வாக அமையும்.

இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலமும் நார்ச்சத்தும் குடல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைச் சரியாக்கும். தவிர, குடலுக்கு நன்மை செய்கிற புரோபயாடிக் அதிகமிருப்பதால், உடனடி நிவாரணம் கிடைக்கும். 

தீவிரமான குடல் பிரச்னை உள்ளோர், மோரில் ஃபிளாக்ஸ் சீட்ஸ் பவுடரைக் கலந்தும் எடுத்துக்கொள்ளலாம். தவிர, இதற்கு ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தன்மையும் உண்டு.

நமது குடல் ஆரோக்கியத்திற்கு (Gut Health) ப்ரீபயாடிக் (Prebiotic) மற்றும் புரோபயாடிக் (Probiotic) ஆகிய இரண்டிற்கும் இடையே சரியான சமநிலை இருப்பது மிகவும் அவசியம். இந்தச் சமநிலையைத் தக்கவைப்பதிலும் ஃபிளாக்ஸ் சீட்ஸ் பெரிய அளவில் உதவும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

Workout செய்ய நினைச்சாலே ஸ்ட்ரெஸ் ஆகுதா? இருக்கவே இருக்கு சிம்பிள் டெக்னிக்ஸ்!

பலருக்கும் உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த ஆர்வம் அதை செயல்படுத்துவதில் காணாமல் போய்விடும். இதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் நிறைந்து வழியும் ஜிம... மேலும் பார்க்க

'உங்கள் உடல் steady-ஆக இருக்கிறதா?' தெரிந்துகொள்ள ஒற்றைக்காலில் நில்லுங்கள்! |#Flamingo balance test

சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களாக டிரெண்டாகி வருகிறது 'ஃபிளமிங்கோ பேலன்ஸ் டெஸ்ட்' (Flamingo balance test).வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்களுக்கு ஒற்றைக்காலில் நின்றிருப்பீர்கள், வென்றிருப்பீர்கள். உங்... மேலும் பார்க்க

Doctor Vikatan: சோஷியல் மீடியாவில் டிரெண்டாகும் peel-off மாஸ்க்... இளமைத் தோற்றம் தருமா?

Doctor Vikatan: சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வரும் பீல்-ஆஃப் (Peel-off) மாஸ்க்குகள் உண்மையில் பயனுள்ளவையா... அவற்றை இரவு முழுவதும் முகத்திலேயே வைத்திருப்பது பாதுகாப்பானதா... மேலும், அவை 'கிளாஸ் ஸ்கின்... மேலும் பார்க்க

`பறவைக் காய்ச்சல் பரவுதே, இறைச்சி, முட்டை, பால் சாப்பிடலாமா?' பயமா இருக்கா? | Q&A

தமிழ்நாட்டில் இப்போது பெரிய அலாரமாக இருக்கிறது 'பறவைக் காய்ச்சல்'. இதனால், 'சிக்கன் சாப்பிடக் கூடாது..', 'பால், முட்டை மூலமும் பறவைக் காய்ச்சல் பரவலாம்' போன்ற செய்திகள் மக்களிடையே இருந்து வருகிறது. மக... மேலும் பார்க்க

Doctor Vikatan: சூயிங்கம் மெல்வதால் ஸ்ட்ரெஸ் குறையும் என்பது உண்மையா?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக சூயிங்கம் மெல்லும் பழக்கம் ஆரம்பித்திருக்கிறது. தினமும் ஒன்றிரண்டு மெல்கிறேன். இப்படி தினமும் சூயிங்கம் மெல்வது ஒரு கட்டத்தில் அடிக்ஷனாக மாறும் என்றும், அதை ... மேலும் பார்க்க

Doctor Vikatan: உடலில் பல இடங்களிலும் வலி... கெட்ட கொழுப்பு அதிகமானதன் அறிகுறி என்பது உண்மையா?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக உடல் வலி இருக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமானால், இப்படித்தான் உடலின் பல பகுதிகளிலும் வலி வரும் என்று கேள்விப்பட்டேன். அதுஉண்மையா... கெட்ட கொலஸ்ட்ரால் அதிகர... மேலும் பார்க்க