செய்திகள் :

Doctor Vikatan: சித்த மருந்துகள் எடுக்கும்போது மலச்சிக்கல் ஏற்படுவது ஏன்?

post image

Doctor Vikatan: வயிற்றுப் பிரச்னை முதல், சளி, இருமல் என உடல்நலம் பாதிக்கப்படும்போதெல்லாம் நான் ஆங்கில மருந்துகள் எடுக்க மாட்டேன். சித்த மருந்துகள் எடுத்துச் சரியாக்கிக் கொள்வதுதான் வழக்கம். 

ஆனால், எப்போது சித்த மருந்துகள் சாப்பிட ஆரம்பித்தாலும் எனக்கு மலச்சிக்கல் பிரச்னையும் கூடவே வந்துவிடுகிறது. சித்த மருந்துகள் உடல் சூட்டைக் கிளப்புமா... மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க என்ன செய்வது?

பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்

சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார்
சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார்

சித்த மருந்துகள் மலச்சிக்கலை உண்டாக்கும் என்பது  தவறான  கருத்து. பெரும்பாலான சித்த மருந்துகள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, நோயைக் குணப்படுத்தும் தன்மை கொண்டவை என்பதுதான் உண்மை.

சித்த மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது மலச்சிக்கல் ஏற்படுவதற்குப் பல காரணங்களைச் சொல்லலாம். உங்கள் கேள்வியைப் படிக்கும்போது, உங்களுக்கு உடல்நலமில்லாத போதெல்லாம் நீங்களாகவே சித்த மருந்துகள் வாங்கிப் பயன்படுத்துவீர்கள் என்று தெரிகிறது.

இப்படி முறையான மருத்துவ ஆலோசனை இன்றி, நீங்களாகவே மருந்துகளை எடுத்துக் கொள்வது முக்கிய காரணமாக இருக்கும். 

எந்தப் பிரச்னைக்கு எந்த மருந்தை, எந்த அளவில், எப்படி எடுக்க வேண்டும் என்று தெரியாமல், தவறான வீட்டு வைத்திய முறைகளைப் பின்பற்றுவது, பயிற்சி பெறாத, மருத்துவர்கள் அல்லாதவர்கள், பகிரும் மருத்துவக் குறிப்புகளைப் பார்த்துச் சுய மருத்துவம் செய்வது போன்றவையும் இதுபோன்ற விளைவுகளை ஏற்படுத்தலாம். 

பித்தம் அதிகமாக உள்ள உடல்வாகு கொண்டவர்களுக்கு, அதைக் கவனிக்காமல் சித்த மருந்துகளை எடுக்கும்போது மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் முக்கிய மருந்தான திரிபலா சூரணம், மலச்சிக்கலை குணமாக்கக்கூடியது.

சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் முக்கிய மருந்தான திரிபலா சூரணம், மலச்சிக்கலைக் குணமாக்கக்கூடியது. இது சிறந்த கழிவுநீக்கியாகச் செயல்பட்டு மலத்தை வெளியேற்றும். அதேபோல, சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் பெரும்பாலான லேகியங்களும் மலத்தை இளக்கி வெளியேற்றும் தன்மை கொண்டவை.

சித்த மருந்துகள் உடல் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் கொண்டவை, எனவே, அவை உடலைச் சூடாக்கும் என்பதும்  தவறான கருத்தாகும்.

சித்த மருந்துகளை எடுப்பதென முடிவு செய்தால், அவற்றை எப்படி உட்கொள்ள வேண்டும் எனத் தெரிந்திருக்க வேண்டியது அடிப்படை. மருந்துகளைச் சரியான அனுபானத்துடன் (துணை மருந்து) எடுத்துக் கொள்ள வேண்டும் என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.

நோயாளியின் உடல்நிலை மற்றும் நாடித் துடிப்பைப்  பரிசோதித்து, வெந்நீர், பால், மோர், வெண்ணெய் அல்லது நெய் என ஏதேனும் ஒன்றோடு மருந்து எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படும். வாதம், பித்தம், கபம் எப்படி இருக்கிறது என்பதையும் பார்த்தே மருத்துவர்கள் சிகிச்சை கொடுப்பார்கள்.  எனவே, சரியான மருத்துவ ஆலோசனையுடன் மருந்துகளை உட்கொள்ளும்போது  சிக்கல்கள் ஏற்படாது

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

நெருங்கிய தொடர்பால் பரவும் புது ஆபத்து: உலகின் ஆபத்தான 'ஹான்டா வைரஸ்' குறித்து WHO எச்சரிப்பது என்ன?

அர்ஜென்டினாவிலிருந்து ஏப்ரல் 1-ம் தேதி 149 பயணிகளுடன் புறப்பட்ட ‘எம்.வி ஹோண்டியஸ்’ சுற்றுலா கப்பலில், அதிபயங்கர ‘ஹண்டாவைரஸ்’ தொற்று பரவியுள்ளது. அர்ஜென்டினாவில் பறவைக் கழிவுகளின் தூசியைச் சுவாசித்ததே ... மேலும் பார்க்க

அட்லாண்டிக்: சொகுசு கப்பலில் 'ஹண்டாவைரஸ்' தாக்குதல் - சிக்கிய 2 இந்தியர்கள்! - என்ன நடந்தது?

'ஓஷன்வைட் எக்ஸ்பெடிஷன்ஸ்' நிறுவனத்திற்குச் சொந்தமான எம்.வி ஹோண்டியஸ் (MV Hondius) என்ற கப்பல், கடந்த ஏப்ரல் 1-ம் தேதி அர்ஜென்டினாவிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கியது. இந்தக் கப்பலில் 23 நாடுகளைச் சேர்... மேலும் பார்க்க

Doctor Vikatan: சம்மரில் கூந்தலைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? தினமும் தலைக்குக் குளிக்கலாமா?

Doctor Vikatan: சம்மர் நாள்களில் சருமப் பராமரிப்பைப் போலவே, கூந்தல் பராமரிப்பும் பெரிய பிரச்னையாகவே இருக்கிறது. வியர்வை, அதனால் உண்டாகும் வாடை, முடி உதிர்வது என இந்த நாள்களில் நிறைய பிரச்னைகள் வருகின்... மேலும் பார்க்க

வெயிலை வெல்லும் வித்தை: தீர்வாகுமா ORS கரைசல்?

கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே உடல் சூடு, சோர்வு மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்றவை நம்மை வாட்டத் தொடங்கும். இதற்காக அவசர கதியில் மருந்தகங்களில் கிடைக்கும் ORSகரைசலையோ அல்லது கடைகளில் விற்கப்படும் செயற... மேலும் பார்க்க

Doctor Vikatan: கொளுத்தும் வெயில்; ஜூஸ், ஐஸ் வாட்டரால் தணியாத தாகம்... எப்படித்தான் சமாளிப்பது?

Doctor Vikatan: வழக்கத்தைவிட இந்த வருட வெயில் கொடுமையாக வாட்டி வதைக்கிறது. திட உணவுகளைத் தவிர்த்து நாள் முழுவதும் திரவ உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ளலாம் போலிருக்கிறது. ஆனால், ஐஸ் வாட்டர், ஐஸ் க்ரீம்,... மேலும் பார்க்க

Doctor Vikatan: கோடையில் அசைவ உணவுகளைத் தவிர்க்கச் சொல்வதற்கு என்ன காரணம்?

Doctor Vikatan: கோடையில் அசைவ உணவுகளைச் சாப்பிடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற அறிவுரையைப் பரவலாகக் கேட்க முடிகிறது. இதற்கு ஏதேனும் மருத்துவக் காரணங்கள் உண்டா... கோடைக்காலத்தில் சாப்பிட வேண்டிய, தவிர்... மேலும் பார்க்க