செய்திகள் :

`Honourable CM' - ஜன நாயகன் பட போஸ்டரைப் பகிர்ந்த விஜய்

post image

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ மற்றும் பலர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் "ஜனநாயகன்". இப்படம் கடந்த ஜனவரி 9-ம் தேதியே வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, தயாரிப்பு தரப்பு நீதிமன்றத்தை நாடியது. இதனால் படத்தின் வெளியீடு மேலும் தள்ளிப்போனது.

நடிகர் விஜய்யின் கடைசிப் படம் என அறிவிக்கப்பட்ட இப்படம், தேர்தலுக்கு முன்பாகவே சென்சார் சான்றிதழ் பெற்று வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கவில்லை. இதற்கிடையில் தேர்தல் முடிந்து, அதில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகாவது சென்சார் சான்றிதழ் கிடைக்குமா என்று திரையுலகமே எதிர்பார்த்து வந்த நிலையில், ஜூலை 9-ம் தேதி இப்படத்திற்கு "ஏ" (A) சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் போஸ்டரை முதல்வர் விஜய், அவரின் Actorvijay என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த போஸ்டரில் A சான்றிதழ் பெற்றது குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், விரைவில் என்பதும் மாண்புமிகு தமிழ்நாட்டின் முதல்வர் சி.ஜோசப் விஜய் (The Honourable Chief Minister Of Tamilnadu C.Joseph Vijay) என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

`இன்றைக்கும் அவர் என்னை ஜெயித்துவிட்டார்..!'- ஒளிப்பதிவாளர் செழியன் குறித்து விஜய் மில்டன் உருக்கம்

பிரபல ஒளிப்பதிவாளரும், தேசிய விருது பெற்ற இயக்குநருமான செழியன் இன்று (ஜூலை 10) காலமானார். தமிழ் சினிமாவின் ஜாம்பவானான ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராகச் சேர்ந்து தனது சினிமா பயணத்தைத் தொடங்க... மேலும் பார்க்க

Idhayam Murali Review: நம் இதயத்துக்கு நெருக்கமாகின்றனவா இந்த இதயாவின் ஒரு தலை ராகங்கள்?!

பெற்றோர் அரவணைப்பின்றி வளரும் இதயாவுக்கு (அதர்வா), அவனுடைய மாமாவும் நண்பர்களும்தான் எல்லாம்! பள்ளிப் பருவத்தில் இதயா, டியூஷன், டென்னிஸ் பயிற்சி எனச் சுற்றி, சமந்தாவை (ப்ரீத்தி முகுந்தன்) ஒருதலையாகக் க... மேலும் பார்க்க

Gatta Kusthi 2: ``மோக்ஷாவா இருந்த என்னை மீனு டீச்சரா மாத்திட்டாரு" - எமோஷ்னலான நடிகை மோக்ஷா

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டா குஸ்தி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் திரைப்படம் ஜூலை 3 அன்று வெளியானது. 2022, டிசம்ப... மேலும் பார்க்க

Gatta Kusthi 2: ``விஷ்ணுவுடன் 3 படங்கள் பண்ணதுக்கு எனக்கு 3 அவார்டுகள் கொடுக்கலாம்" - செல்லா அய்யாவு

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் கட்டா குஸ்தி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஜூலை 3 அன்று வெளியானது. 2022, டிசம்பர் 2 அன்று வெளியான 'கட்டா குஸ்தி' முதல் ப... மேலும் பார்க்க

Gatta Kusti 2: ``என் வாழ்க்கையில் நான் நினைத்துக்கூட பார்க்காத.!" - கண்கலங்கிய ஐஸ்வர்ய லட்சுமி

விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டா குஸ்தி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் திரைப்படம் ஜூலை 3 அன்று வெளியானது. 2022, டிசம்பர... மேலும் பார்க்க

Gatta Kusthi 2: ``மக்கள் நம்மை மறந்துவிட்டார்களோ என்ற பயம்" - நடிகர் விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி!

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டா குஸ்தி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் திரைப்படம் ஜூலை 3 அன்று வெளியானது. 2022, டிசம்ப... மேலும் பார்க்க