செய்திகள் :

ISSF உலகக் கோப்பை : இந்தியாவின் பதக்க வேட்டை; தங்கம் வென்ற ஈஷா சிங்... வெண்கலம் சேர்த்த மனு பாக்கர்!

post image

சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் ISSF உலகக் கோப்பை (ரைஃபிள்/பிஸ்டல்/ஷாட்கன்) துப்பாக்கிச் சுடுதல் தொடரில், இந்திய வீராங்கனைகள் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ஈஷா சிங் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியதோடு, இரட்டை ஒலிம்பிக் பதக்க நாயகி மனு பாக்கர் வெண்கலப் பதக்கத்தையும் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இறுதிப் போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஈஷா சிங், 40 புள்ளிகள் பெற்று அபார வெற்றி பெற்றார். சீனாவின் யூயூயே ஜாங் 37 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்ற நிலையில், ஈஷா 3 புள்ளிகள் முன்னிலையில் தங்கத்தை உறுதிப்படுத்தினார்.

மற்றொரு இந்திய நட்சத்திர வீரரான மனு பாக்கர், வடகொரியாவின் ஹியோன் கியோங் பாக் உடன் நடைபெற்ற பரபரப்பான இரட்டை ‘ஷூட்-ஆஃப்’ மோதலில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார். கடைசி நொடிவரை நீண்ட இந்த மோதல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

வெற்றிக்குப் பிறகு பேசிய ஈஷா சிங், “முன்னதாக உலக சாதனை படைத்து தங்கம் வென்றிருந்ததால் இந்தப் போட்டியில் மன அழுத்தம் அதிகமாக இருந்தது. நீங்கள் உயர்ந்த நிலையை அடையும் போது, அந்தச் சாதனையைத் தொடர்ந்து நிரூபிக்க வேண்டிய பொறுப்பும் அதிகரிக்கும். அந்த அழுத்தத்தை வென்று மீண்டும் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. ஹாங்சோ எனக்கு மிகவும் பிடித்த இடம். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இங்கு நான்கு பதக்கங்கள் வென்ற நினைவுகள் இருப்பதால் இந்த மைதானம் எனக்கு கூடுதல் நம்பிக்கையை அளித்தது” என்றார்.

மனு பாக்கரும் தனது பதக்கம் குறித்து பேசுகையில், “இந்தப் பதக்கம் எனக்கு மிகவும் முக்கியமானது. இது அடுத்த கட்ட வெற்றிகளுக்கான அடித்தளமாக இருக்கும். என் ஆட்டத்தில் என்ன சிறப்பாக செயல்படுகிறது, இன்னும் எதை மேம்படுத்த வேண்டும் என்பதில் தெளிவை இந்தப் போட்டி கொடுத்துள்ளது. உலக சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டுப் போட்டி போன்ற பெரிய இலக்குகளை நோக்கிச் செல்ல இந்த அனுபவம் மிகவும் உதவும்” என்று தெரிவித்தார்.

இந்த வெற்றியால் ஹாங்சோ உலகக் கோப்பை தொடரில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சைன்யம் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் கணக்கைத் தொடங்கியிருந்தார்.

பதக்கப் பட்டியலில் தற்போது 6 தங்கம் உட்பட 14 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 3 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் தொடர்கிறது.

உலக சாம்பியன்ஷிப் மற்றும் அடுத்தாண்டு நடைபெறவுள்ள முக்கிய சர்வதேச போட்டிகளுக்கு முன்பாக, இந்திய துப்பாக்கிச் சுடுதல் அணியின் இந்த வெற்றி மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் சர்வதேச டென்னிஸ் மேடையாகும் சென்னை... நவம்பரில் தொடங்குகிறது WTA 250!

சென்னை நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி., டென்னிஸ் மைதானத்தில், வரும் நவம்பர் 2 முதல் 8-ம் தேதி வரை WTA 250 சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெறவுள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும், மொத்தத்தில் மூன்... மேலும் பார்க்க

சேலம் விறகு வியாபாரியின் மகள் காமன்வெல்த் வாள்வீச்சில் வரலாற்றுச் சாதனை! யார் இந்த கனகலட்சுமி?

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்தவர் பரஞ்சோதி. விறகு வியாபாரியான இவரின் மகள் கனகலட்சுமி வாள்வீச்சில் திறமை வாய்ந்த வீராங்கனையாக சிறு வயது முதலே களமாடி வருகிறார். தமிழ்நாடு அளவில் நடைபெற்ற வாள்வீச்ச... மேலும் பார்க்க

சீறிப்பாய்ந்த குதிரைகள்; அசரவைத்த போட்டியாளர்கள் - ஈரோட்டில் கவனம் ஈர்த்த குதிரையேற்றப் போட்டி!

ஈரோடு, திண்டலில் உள்ள ஹார்ஸ் ரைடிங் கிளப்பில் ஆகஸ்ட் 9, 10 ஆகிய இரண்டு நாள்கள் அகில இந்திய அளவிலான குதிரையேற்றப் போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது.ஈரோட்டில் முதன்முறையாக நடைபெற்ற இப்போட்டியில், ஊட்டி, ம... மேலும் பார்க்க

"`நரேந்திர' என்ற பெயர் பிடிக்கலை..!" - குத்துச்சண்டை வீரர் பகிர்ந்த சம்பவம்; உரக்கச் சிரித்த மோடி

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரர் நரேந்தர் பெர்வால், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோது தனக்கு நடந்த ஒரு வேடிக்கையான சம்பவத்தைப் பகிர்ந்து கொண்... மேலும் பார்க்க

ஈரோட்டில் குதிரையேற்றபோட்டி - சாகசம் செய்த வீரர்கள்

ஈரோடு குதிரையேற்ற போட்டி ஈரோடு குதிரையேற்ற போட்டி ஈரோடு குதிரையேற்ற போட்டி ஈரோடு குதிரையேற்ற போட்டி ஈரோடு குதிரையேற்ற போட்டி ஈரோடு குதிரையேற்ற போட்டி ஈரோடு குதிரையேற்ற போட்டி ஈரோடு குதிரையேற்ற போட்டி ... மேலும் பார்க்க

ஜார்ஜியாவில் தங்க வேட்டை – சாதனை புரிந்த திண்டுக்கல் மாணவி ரேஷ்மிக்கு உற்சாக வரவேற்பு!

மாணவி ரேஷ்மிக்கு உற்சாக வரவேற்புமாணவி ரேஷ்மிக்கு உற்சாக வரவேற்புமாணவி ரேஷ்மிக்கு உற்சாக வரவேற்புமாணவி ரேஷ்மிக்கு உற்சாக வரவேற்புமாணவி ரேஷ்மிக்கு உற்சாக வரவேற்புமாணவி ரேஷ்மிக்கு உற்சாக வரவேற்புமாணவி ரே... மேலும் பார்க்க