தரவு, திரை, மனநிலை - நவீன தேர்தல் யுக்தியின் மூன்று முகங்கள் செயல்படுவது எப்படி?
Job Interview: "என்னை நேர்காணல் செய்தவர் மனிதரே இல்லை" - AI குழப்பத்தில் ரெட்டிட் பயனர்!
ரெட்டிட் வலைத்தளப் பயனாளர் ஒருவர் தன்னை வேலைக்காக ஒரு செயற்கை நுண்ணறிவு நேர்காணல் செய்ததாகவும், அது விசித்திரமான அனுபவமாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.
r/interviews என்ற சப்ரெடிட்டில் நேர்காணல்கள் (Job Interview) குறித்தும் அதில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன. அதில் ஒரு பயனர் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

நேர்காணலுக்குச் சென்றுவந்த அவருக்கு நேர்காணல் செய்தது யார் என முழுதாகத் தெரியாத சூழலில், அது செயற்கை நுண்ணறிவாக இருக்கலாமோ எனத் தனது பதிவின் மூலம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
நேர்காணல்களில் கலந்துகொள்ளும் பலர் தங்கள் டாஸ்குகளைச் செய்ய AI-யைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. சில நிறுவனங்கள் புதிதாக வேலைக்குச் சேருபவர் துறைசார்ந்த செயற்கை நுண்ணறிவுகளைப் பயன்படுத்துகிறாரா என்பதைக் கேட்கின்றன. ஆனால் AI நேர்காணல் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவது இதுவே முதன்முறை.
My interviewer wasn't even human?
byu/Most_Audience_8105 ininterviews
வீடியோ காலில் நடந்த அந்த நேர்காணலில் தோன்றிய நேர்காணல் செய்யும் பெண் வித்தியாசமான முறையில் ரிப்பீட்டிங்கில் இருப்பதுபோல தலை அசைத்ததாக அந்த ரெட்டிட் பயனர் எழுதியிருக்கிறார். சில நேரங்களில் அசைவுகள் நின்று இழுத்து (twitching) வருவதாகவும் உணர்ந்துள்ளார்.
முதலில் வித்தியாசமான நடவடிக்கைகளை இணையதள சிக்கலாக இருக்கும் என நினைத்தவர், கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது மிகவும் கச்சிதமாகப் பேசியதனால் அதன் மீது சந்தேகம் வந்ததாகக் கூறியுள்ளார்.
எந்தத் தயக்கமும் சந்தேகமும் இல்லாமல் சீராகப் பேசியது இவருக்கு விசித்திரமாக இருந்துள்ளது. தனது பதிவில், தான் AI பணிகளைச் செய்வதற்கு எதிரானவன் இல்லை என்றும் அதுதான் நேர்காணல் செய்கிறது என்றால் அதை முன்கூட்டியே தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கமெண்டில் மற்றொரு நபர் தானும் மொபைலில் AI-ஆல் நேர்காணல் செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார்.
















