Business-க்கு Foundation ஏன் முக்கியம், கமல், ரஜினி Cinema Business-க்கு Foundat...
Keerthy Suresh: "அந்த மாதிரி டிரெஸ் போட்டிருந்தேனானு..." - ஏ.ஐ எடிட்கள் குறித்து கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் 'ரிவால்வர் ரீட்டா' திரைப்படம் இம்மாத ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அப்படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் இப்போது கீர்த்தி சுரேஷ் களமிறங்கிவிட்டார்.
இன்று அப்படத்திற்காக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யப்படும் எடிட்கள் குறித்து காட்டமாகப் பேசியிருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் பேசுகையில், “இப்போ பெரிய பிரச்னை ஏ.ஐதான். அது நமக்கு வரமாகவும் இருக்கும். சில சமயங்களில் அழிவை உண்டாக்கும் விஷயமாகவும் இருக்கு.
தொழில்நுட்பங்கள் மனிதர்கள் கண்டுபிடித்த விஷயம். ஆனா, அது இன்னைக்கு நம்மையே மீறி எங்கையோ போகிற மாதிரி இருக்கு.
சமூக வலைதளப் பக்கங்களில் பார்க்கும்போது, நான் இந்த மாதிரி டிரெஸ் போட்டிருந்தேனானு என்னையே யோசிக்க வைக்கிற அளவுக்கு ரியலாக இருக்கு.
சமீபத்தில் ஒரு படத்தோட பூஜையில் நான் தப்பான போஸ் கொடுத்த மாதிரியான புகைப்படத்தைப் பார்த்தேன்.
நான் அப்படியான ஒரு போஸ் கொடுக்கவே இல்லை. இது எங்க போயிட்டு இருக்குனு தெரியல. அதனால அவங்களுக்கு என்ன லாபம்னு தெரியல. இது காயப்படுத்தும் விஷயமாக இருக்கு.

ஒவ்வொரு முறையும் சமூக வலைதளப் பக்கங்களில் வர்ற விஷயங்களுக்கும் பயம் வரும். இன்னைக்கு ஏ.ஐ மேல பயம் வந்திருக்கு. ஒவ்வொரு விஷயம் வளரும்போது, பாதிப்புகளும் வளர்ந்துட்டு இருக்கு.
எனக்கு ரீல்ஸ் பார்க்கிற பழக்கம் இருக்கு. அது எனக்கே என்கிட்ட பிடிக்காத ஒரு விஷயம். அதில் சிலவற்றை என்னுடைய கணவருக்கு அனுப்புவேன்.
அவர் அதை ஏ.ஐனு கண்டுபிடிச்சிடுவார். அப்புறம், கமெண்ட்ஸ்ல பார்க்கும்போதுதான் அது ஏ.ஐனு எனக்கு தெரிய வருது.” எனக் கூறினார்.

















