Business-க்கு Foundation ஏன் முக்கியம், கமல், ரஜினி Cinema Business-க்கு Foundat...
"'காந்தா' படத்தின் அந்த சீனில் உண்மையிலேயே துல்கரை அடித்தேன்" - 'காந்தா' நடிகை பாக்யஶ்ரீ
அறிமுக இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா, பாக்யஸ்ரீ, நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த நவம்பர் 14ம் தேதி திரைக்கு வந்த படம் 'காந்தா'.
1950களில், தமிழ் சினிமாவில் பெரிய இயக்குநராக இருந்து சரிந்து போன ஐயா (சமுத்திரக்கனி), தன் கனவுப் படமான 'சாந்தா' படத்தை, உச்ச நடிகரும் அவரின் சிஷ்யருமான டி.கே. மகாதேவனை (துல்கர் சல்மான்) வைத்து இயக்குகிறார்.
இருவருக்கும் உள்ள அகங்கார மோதலால் என்னவெல்லாம் ஆனது, இவர்களிடையே வந்து மாட்டிக் கொண்ட நடிகை பாக்யஶ்ரீயின் நிலை என்ன ஆனாது என்பதுதான் இதன் கதைக்களம்.

காந்தா விமர்சனம்: ஆச்சர்யமூட்டும் துல்கர் - சமுத்திரக்கனி கூட்டணி; முழுமையான திரையனுபவமாகிறதா படம்?
இப்படத்தின் ஒரு காட்சியில் பாக்யஶ்ரீ துல்கரை கன்னத்தில் அறைவது போன்ற காட்சி எடுப்பார்கள். கதாநாயகி உண்மையிலேயே கன்னத்தில் அறைவதை எதிர்பார்க்காத துல்கர், தனது நடிப்பை மேலோங்கி காண்பித்து காட்சியை தன் வசப்படுத்திக் கொள்ள, தானே கதாநாயகியின் கையை பிடித்து தன் கண்ணத்தில் அடித்துக் கொள்வார். உச்ச நடிகர் காட்சியை எப்படி தன் வசப்படுத்துகிறார் என்பதை காட்டுவதாக அது இருக்கும்.
இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் நடிகை பாக்யஶ்ரீ, "அந்தக் காட்சியில் உண்மையிலேயே துல்கர் சாரை நான் அறைந்தேன். அந்தக் காட்சியைப் படித்துவிட்டு, கன்னத்தில் அறைவதை எதாவது பண்ணி போலியாக எடுத்துக் கொள்ளலாமா என்று சொன்னேன்.

ஆனால், துல்கர், 'உண்மையிலேயே கன்னத்தில் அறைந்தால்தான் முகத்தில் உண்மையிலேயே உணர்ச்சி தெரியும். அப்போதுதான் காட்சி சிறப்பாக வரும்' என்று கூறி என்னை உண்மையிலேயே அடிக்கச் சொன்னார். நானும் ரொம்ப நேரம் முயற்சித்து ஒருவழியாக உண்மையிலேயே துல்கரைக் கன்னத்தில் அறைந்துவிட்டேன்" என்று கூறியிருக்கிறார்.




















