செய்திகள் :

Killer: எஸ்.ஜே.சூர்யா படத்தின் படப்பிடிப்பில் விபத்து; ஒருவர் உயிரிழப்பு; மூவர் காயம்; என்ன நடந்தது?

post image

எஸ்.ஜே. சூர்யாவின் 'கில்லர்' திரைப்பட படப்பிடிப்பின்போது சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்திருக்கிறார். மேலும் 3 பேர் காயம் அடைந்திருக்கின்றனர்.

இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தற்போது 'கில்லர்' என்ற படத்தை இயக்கி அதில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

வெடி விபத்து | represental images
வெடி விபத்து | represental images

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரம்பூர் பின்னி மில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்தான் வெடிகுண்டு வெடிப்பது போன்ற காட்சியை எடுப்பதற்காக சிலிண்டரில் காஸ் நிரப்பியபோது வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கிறது.

இன்று (ஜூன்.3) அதிகாலை 5.30 மணிக்கு நடந்த இந்த விபத்தில் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த மதன் என்ற நபர் உயிரிழந்து இருக்கிறார்.

தினகரன், சூர்யா, சக்திவேல் ஆகிய 3 பேருக்கு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Double Occupancy Review: 6-6 ஆண்; 6-6 பெண் சுவாரஸ்யமான ஒன்லைன் - படமாக பாஸாகிறதா?

பல வருடங்களாகக் குழந்தையில்லாமல் தவிக்கிறது ஒரு தம்பதி (போஸ் வெங்கட் - வினோதினி). கடவுளை நம்பாத போஸ் வெங்கட், கைகூப்பி கடவுளை வணங்கி வேண்டுகிறார். கடவுளின் அருளால் ஆண் குழந்தை பிறக்கிறது. ஆனால், பிறந்... மேலும் பார்க்க

Habeebi Review: தமிழ் இஸ்லாமிய வாழ்வியல் பின்னணியில் ஓர் அழகான காதல் கதை; ஆனால், படமாகக் கவர்கிறதா?

தென் தமிழகத்தில் தலைமுறை தலைமுறையாக நெசவுத் தொழிலை யூசுஃப் கானின் (கஸ்தூரி ராஜா) குடும்பம் கவனித்து வருகிறார்கள். கைத்தறித் தொழில் நலிவடைந்து வருவதால், யூசுஃப் கானின் தம்பி வளைகுடா நாட்டிற்குப் பணிக்க... மேலும் பார்க்க

Bharathiraja: "துயரத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி" - பாரதிராஜா மனைவி சந்திர லீலா

இயக்குநர் இமயம் பாரதிராஜா நேற்று முன்தினம் (ஜீன்.10) உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் நேற்று சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள காட் ரோட்டில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலைய... மேலும் பார்க்க

பாரதிராஜா: ``உங்கள் மகனை உங்கள் மடியில் ஒப்படைத்துவிட்டோம்" - கவிஞர் வைரமுத்து உருக்கம்

இயக்குநர் இமயம் பாராதிராஜா மறைந்த நிலையில், அவரின் உடல் அவரின் சொந்த கிராமத்தில் அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கவிஞர் வைரமுத்து தன் எக்ஸ் பக்கத்தில்,``பிறந்த... மேலும் பார்க்க

What To Watch: 'கருப்பு', 'டபுள் ஆக்குபன்சி', ஹபீபி' - இந்த வார ரிலீஸ்கள் என்னென்ன?

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வெளியாகியிருக்கும் படங்கள்.டபுள் ஆக்குபென்சி - தமிழ்குஷ்பு தயாரிப்பில், அறிமுக இயக்குநரான அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்... மேலும் பார்க்க

Bharathiraja: 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பாரதிராஜா உடல் நல்லடக்கம் | Photo Album

பாரதிராஜாவுக்கு மக்கள் மரியாதைபாரதிராஜாவுக்கு மக்கள் மரியாதைபாரதிராஜாவுக்கு மக்கள் மரியாதைபாரதிராஜாவுக்கு மக்கள் மரியாதைபாரதிராஜாவுக்கு மக்கள் மரியாதைபாரதிராஜாவுக்கு மக்கள் மரியாதைபாரதிராஜாவுக்கு மக்க... மேலும் பார்க்க