செய்திகள் :

Lok Sabha: `நிச்சயம் அதை சொல்வேன்; அந்த வரிக்குத்தான் மோடியும்' - ராகுல் பேச்சும், பாஜக எதிர்ப்பும்!

post image

இன்று (பிப்.2) நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ​​எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.-பியுமான ராகுல் காந்தி, 2020-ம் ஆண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதல் குறித்து முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவனே எழுதி வெளியிடப்படாதப் புத்தகம் குறித்த ஒரு பத்திரிகைக் கட்டுரையை கையில் ஏந்தியபடி பேசத் தொடங்கியிருக்கிறார்.

இது பாஜக தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

ராகுல் காந்தி அந்தப் புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டத் தொடங்கிய உடனேயே, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறுக்கிட்டு, வெளியிடப்படாத புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டுவது சபையின் விதிகளுக்கு எதிரானது என்று கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி

பதறிய பாஜக

"முன்னாள் ராணுவ தளபதி நரவனே எழுதிய புத்தகத்தில் இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இது தொடர்பாக ராணுவ தளபதி நரவனே எழுதிய சுயசரிதை புத்தகத்தை வெளியிட விடாமல் அரசு தடுக்கிறது" என்று ராகுல் காந்தி மத்திய அரசுக்கு எதிராக பேச முற்பட்டப்போது, அவரது மைக் அணைக்கப்பட்டிருக்கிறது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் மட்டுமல்லாமல், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரும் ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் பேச விடாமல் கடுமையாக எதிர்த்திருக்கின்றனர்.

"அதில் அப்படி என்ன இருக்கிறது, அந்தப் புத்தகம் ஏன் இவர்களை இவ்வளவு பயமுறுத்துகிறது? அவர்களுக்குப் பயம் இல்லையென்றால், நான் தொடர்ந்து படிக்க அனுமதிக்கப்பட வேண்டும். நான் மேற்கோள் காட்டிய கட்டுரையும் புத்தகமும் "100% உண்மையானவை" என்று ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.

எதிர்க்கும் அமித் ஷா
எதிர்க்கும் அமித் ஷா

அந்த ஒரு வரி.!

நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரே ஒரு வரிக்குதான் பிரதமர் மோடியும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பயப்படுகிறார்கள். அந்த வரியை நான் நாடாளுமன்றத்திற்குள் சொல்லுவேன், அதை யாரும் தடுக்க முடியாது…”என்று கூறியிருக்கிறார்.

சு.வெ பதிவு

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக எம்.பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி நரவானே எழுதிய “விதியின் நான்கு நட்சத்திரங்கள்” (Four Stars of Destiny) என்ற புத்தகத்தின் ஐந்து வரிகளை வாசிக்கவிடாமல் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரும் உள்துறை அமைச்சரும் கடந்த ஒன்றரரை மணி நேரமாக நாடாளுமன்றத்தில் போராடினர்.

நாடளுமன்ற கூட்டத்தொடர்
நாடளுமன்ற கூட்டத்தொடர்

ஒரு புத்தகத்தின் ஐந்து வரிகளுக்கு முன்னால் மோடி அரசின் கதறல் நாடே எதிரொலிக்கும் படி கேட்கிறது. உண்மைகள் அதிகாரத்தை எவ்வளவு கதறவைக்கும் என்பதற்கு இன்றைய நாளே மிகச்சிறந்த எடுத்துக்காட்டு" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

`பட்டா இருந்தும் மின்சாரம் இல்லை' - 31 ஆண்டுகளாக இருளில் வாழும் 138 அருந்ததியர் குடும்பங்கள்!

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், வடஆண்டிப்பட்டு கிராமம், கௌதம புத்தர் நகரில் வசித்து வரும் 138 அருந்ததியர் சமூக குடும்பங்களுக்கு அரசால் பட்டா வழங்கப்பட்டிருந்தாலும், இதுவரை அந்த பட்டாக்க... மேலும் பார்க்க

கேரளா: தலைநகர் தொகுதிகளை குறிவைக்கும் பா.ஜ.க தலைவர்கள் - என்.டி.ஏ கூட்டணியில் களேபரம்!

கேரள மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி, பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி ஆகியவை தேர்தலுக்கு தயாராகி வர... மேலும் பார்க்க

"அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று என்று கேட்பதில் தவறு கிடையாது!" - சொல்கிறார் தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அரியலூரில் நடைபெற உள்ள நிகழ்வில் பங்கேற்க செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம்... மேலும் பார்க்க

ராகுலா, பிரியங்காவா? - கேரளா, அஸ்ஸாம் தேர்தலில் வெற்றிபெற்று செல்வாக்கை நிரூபிக்கப்போவது யார்?

கேரளா, அஸ்ஸாம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த இரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தல் காங்கிரஸ் தலைமைக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாக கரு... மேலும் பார்க்க

"அந்த போன்கால் வரட்டும்!" - காத்திருக்கும் அறிவாலயம்

நேற்று பிப்.17-ம் தேதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னை முகப்பேரில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாள... மேலும் பார்க்க

DMK - ADMK : `6 இடங்களுக்குதான் இத்தனை அக்கப்போரா?' - கலக்கத்தில் தவிக்கும் கழகங்கள்! | மாநிலங்களவை

தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களிலிருந்து, காலியாக உள்ள 37 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். பிப்ரவரி மாதம் 26-ம் தேதி வேட்புமனு துவங்கி, மாரச் 16-ம் தேதி... மேலும் பார்க்க