'சாரிடான் மாத்திரைதான் மிச்சம்' - பராசக்தி படத்தைக் கலாய்த்த கார்த்தி சிதம்பரம்
Lokesh Kanagaraj: அல்லு அர்ஜூனை இயக்கும் லோகேஷ் கனகராஜ் - வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!
‘லியோ’ படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து 'கூலி' படத்தை இயக்கி இருந்தார்.
இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ‘கைதி 2’ படத்தை இயக்குவார் என கூறப்பட்டது.
ஆனால், லோகேஷ் கனகராஜ் தற்போது அல்லு அர்ஜூனின் 23வது படத்தை இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.

இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இந்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும் என்று மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
A Collaboration that will be Eternal in Indian Cinema
— Mythri Movie Makers (@MythriOfficial) January 14, 2026
Icon Star @alluarjun X @Dir_Lokesh X @MythriOfficial X @anirudhofficial
STRIVE FOR GREATNESS
▶️ https://t.co/AGCi8q89x2
Shoot begins in 2026 #AALoki#AA23#LK7pic.twitter.com/op2vnureqp
இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப் பதிவில், " உங்களுடன் இந்தப் பயணத்தைத் தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன் அல்லு அர்ஜூன் சார். இதைக் கோலாகலமான, மிகப் பெரிய வெற்றியாக மாற்றுவோம்.
மீண்டும் ஒரு முறை எனது சகோதரர் அனிருத்துடன் இணைகிறேன்" என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
Blessed with the best @alluarjun#AALoki
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) January 14, 2026
Looking forward to kicking off this journey with you sir
Let's make it a massive blast
Once again with my brother @anirudhofficial#AA23#LK7@MythriOfficialpic.twitter.com/AZpufiNI2t



















