செய்திகள் :

Madhuri Dixit: `சினிமா வேண்டாம்!’ - ஆப்பிள் நிறுவனத்தில் மாதுரி தீட்சித்தின் மகன்!

post image

இந்தியத் திரையுலகின் `புன்னகை அரசி' என்று வர்ணிக்கப்படுபவர் மாதுரி தீட்சித். நடிப்பைத் தாண்டி நவரசங்களையும் தன் கண்களிலேயே கடத்தும் அசாத்திய கலைஞர். தனது காந்தப் புன்னகையாலும், நளினமான நடன அசைவுகளாலும் 80 மற்றும் 90களின் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர், இன்றும் அதே வசீகரத்துடன் ஜொலிக்கிறார்.

நடனம் என்பது வெறும் அசைவு அல்ல, அது ஒரு மொழி என்பதை நிரூபித்தவர். தற்போதுகூட மாதுரி தீட்சித் நடிப்பில் கிரைம் த்ரில்லர் வெப் சீரிஸ் `மிஸஸ் தேஷ்பாண்டே' வெளியாகியுள்ளது. அப்படிப்பட்டவரின் மூத்த மகன், தனது தாயின் வழியில் சினிமாவில் நடிக்க வராமல், தொழில்நுட்பத் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார் என்பதுதான் சமீபத்திய ட்ரெண்டிங் செய்தி.

மாதுரி தீட்சித்

மாதுரி தீட்சித் மற்றும் டாக்டர் ஸ்ரீராம் நேனேவின் மூத்த மகனான அரின் நேனே (Arin Nene), உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் (Apple) நிறுவனத்தில் `மெஷின் லேர்னிங் இன்ஜினியராக' பணியாற்றி வருகிறார். குறிப்பாக, `நாய்ஸ் கேன்சலேஷன்' (Noise Cancellation) தொடர்பான திட்டங்களில் அவர் ஈடுபட்டுள்ளதாக மாதுரி தீட்சித் தெரிவித்துள்ளார்.

ரியான், ஸ்ரீராம், மாதுரி, அரின்

அரின் நேனே அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (USC) கணினி அறிவியல் மற்றும் வணிக நிர்வாகம் ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றுள்ளார். தொழில்நுட்பத்தில் மட்டுமன்றி, அரினுக்கு இசையிலும் மிகுந்த ஆர்வம் உண்டு. கல்லூரியில் படிக்கும்போதே இசையை ஒரு துணைப் பாடமாக எடுத்துப் படித்துள்ளார். அவர் சொந்தமாக இசையமைக்கவும் செய்கிறார். முன்னதாக, கரண் ஜோஹரின் Rocky Aur Rani Kii Prem Kahaani என்ற திரைப்படத்தில் உதவி இயக்குநராகவும் சிறிது காலம் பணியாற்றி சினிமா அனுபவம் பெற்றுள்ளார். இருப்பினும், தனது முழுநேர பணியாக தொழில்நுட்பத் துறையையே தேர்ந்தெடுத்துள்ளார்.

ஸ்ரீராம், மாதுரி, அரின்

மாதுரியின் இளைய மகன் ரியானும் (Ryan) சினிமாவில் ஆர்வம் காட்டாமல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (STEM) சார்ந்த துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

சினிமா வாரிசுகள் பெரும்பாலும் சினிமா துறையையே தேர்ந்தெடுக்கும் சூழலில், மாதுரி தீட்சித்தின் மகன்கள் கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறையில் தங்களின் தனித்துவமான பாதையை அமைத்துக்கொண்டது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Dhurandhar: `அழகே அழகே...' - சாரா அர்ஜுன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

Sara ArjunSara ArjunSara ArjunSara ArjunSara ArjunSara ArjunSara ArjunSara ArjunSara ArjunSara Tendulkar: `சுற்றுலா பிரசாரத்துக்கு ரூ.1140 கோடி' - ஆஸ்திரேலியா பிராண்ட் தூதராக சச்சின் மகள் மேலும் பார்க்க

ஐஸ்வர்யா ராய்: "பொறுத்துக்கொள்ள முடியாது" - விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு அபிஷேக் பச்சன் பதிலடி

நடிகை ஐஸ்வர்யா ராயும், நடிகர் அபிஷேக் பச்சனும் காதலித்து கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய்சில ஆண்டுகளாக அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் திரு... மேலும் பார்க்க

``25 வருடங்களாக ஷூட்டிங், வீடு என்றுதான் வாழ்ந்து வருகிறேன்'' - மனம் திறந்த நடிகர் சல்மான்

சவூதி அரேபியாவில் தற்போது ரெட் சீ சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் உலகம் முழுவதிலுமிருந்து பல பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்வில் நேற்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மா... மேலும் பார்க்க

Dharmendra: "இதயம் நொறுங்கிய நிலையில்..." - ஹேமமாலினியின் உருக்கமான பதிவு

கடந்த நவம்பர் மாதம் 24-ம் தேதி பாலிவுட்டின் பிரபல நடிகர் தர்மேந்திரா இயற்கை எய்தியிருந்தார். அவருடைய 90-வது பிறந்தநாள் இன்று. தர்மேந்திராவின் பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்கள் பலரும் அவருடைய மும்பை இல்... மேலும் பார்க்க

Aamir Khan: ``அதை நினைத்து அப்போது வீட்டிற்கு வந்ததும் அழுவேன்!'' - மனம் திறந்த ஆமிர் கான்

ஆமிர் கான் தற்போது அவருடைய அடுத்தப் படத்திற்கான பணிகளில் இருக்கிறார். இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியுடனான படத்தில் அடுத்ததாக நடிக்கவிருக்கிறார் என்ற பேச்சுகளும் இருந்து வருகின்றன. கூடிய விரைவில் அதன் அத... மேலும் பார்க்க

LK7: "அவர் மும்பைக்கும் வரும்போது நரேஷன்" - லோகேஷ் கனகராஜ் உடனான படம் குறித்து ஆமிர் கான்

ஆமிர் கான் நடிப்பில் இந்த ஆண்டு 'சித்தாரே ஜமீன் பர்' திரைப்படம் திரைக்கு வந்திருந்தது.அப்படத்தைத் தொடர்ந்து பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் ஒரு பயோபிக் படத்தில் நடிக்கவிருப்பதாகவு... மேலும் பார்க்க