BB TAMIL 9: DAY 44: பாருவிடம் வில்லங்க கேள்வி கேட்ட கம்ரூதீன்; ரைமிங் ஓகே, என்டர...
Nivin Pauly: 'கம்பேக் எப்போ சேட்டா?' - ஒரே நேரத்தில் 5 நிவின் பாலி படங்கள் டிராப்பா?
இந்தாண்டின் தொடக்கம் முதல் அடுத்தடுத்து பல படங்களை தனது லைன் அப்பில் அடுக்கி வைத்து வந்தார் நடிகர் நிவின் பாலி.
அப்படி பல படங்களை கைவசம் வைத்திருக்கும் நிவின் பாலி இந்தாண்டு பாக்ஸ் ஆபீஸில் கம்பேக் கொடுத்துவிடுவார் என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அதிலும் இப்போது சில சிக்கல்களில் எழுந்திருக்கிறது.
தமிழில் 'ஏழு கடல் ஏழு மலை', 'பென்ஸ்' ஆகியப் படங்களும், மலையாளத்தில் 'டியர் ஸ்டுடென்ட்ஸ்', 'டால்பி தினேஷன்', 'பேபி கேர்ள்', 'சர்வம் மாயா', 'பெதெல்கம் குடும்ப யூனிட்', 'கேங்ஸ்டர் ஆஃப் முண்டன்மல', 'சேகர வர்மா ராஜாவு', 'தாரம்', 'பிஸ்மி ஸ்பெஷல்', 'பார்மா (வெப் சீரிஸ்) ஆகிய படைப்புகளை கமிட் செய்திருந்தார் நிவின் பாலி.
இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தாண்டி தமிழில் அவர் நடிக்கும் 'பென்ஸ்' படத்தின் படப்பிடிப்பு ஒரு புறம் நடந்துக் கொண்டிருக்கிறது.
அதிரடி வில்லனாக அப்படத்தில் நிவின் பாலி நடித்து வருகிறார். மலையாளத்தில் நிவின் பாலி, நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் 'டியர் ஸ்டுடென்ட்ஸ்' திரைப்படம் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் டீசர் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகியிருந்தது.

அஜு வர்கீஸுடன் நிவின் பாலி நடித்திருக்கும் 'சர்வம் மாயா' திரைப்படம் அடுத்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகை வெளியீடாக திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டிருக்கிறது. இதை தாண்டி அவர் நடித்திருக்கும் 'பேபி கேர்ள்' திரைப்படம் கூடிய விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.
மேலும், ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளிவர இருக்கும் 'பார்மா' என்கிற வெப் சீரிஸிலும் நிவின் பாலி நடித்து வருகிறார். 'ப்ரேமலு' வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் கிரீஷ் ஏ.டி இயக்கும் 'பெதெல்கம் குடும்ப யூனிட்' படத்தின் நிவின் பாலி நடிக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி இருந்தது.
இந்தப் படங்களைத் தொடர்ந்து அவர் கமிட் செய்து வைத்திருந்த 'டால்பி தினேஷன்', 'கேங்ஸ்டர் ஆஃப் முண்டன்மல', சேகர வர்மா ராஜாவு', 'தாரம்', 'பிஸ்மி ஸ்பெஷல்' ஆகியத் திரைப்படங்களின் அறிவிப்பு போஸ்டரை தனது சமூக வலைதளப் பக்கங்களிலிருந்து நீக்கி இருக்கிறார்.
அந்தப் படங்களின் லேட்டஸ்ட் அப்டேட்கள் எதுவும் வெளிவராத காரணத்தினாலும், போஸ்டர்களை நிவின் பாலி நீக்கியதனாலும் அப்படங்கள் டிராப் ஆகிவிட்டன எனப் பேச்சுகள் இப்போது எழுந்திருக்கின்றன.

'ஒரே சமயத்தில் இத்தனை படங்களின் போஸ்டர்களை அவர் நீக்கியிருப்பது எதனால்' என்கிற கேள்விகளும் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. 'நரிவேட்டா' படத்தை இயக்கிய அனுராஜ் மனோகர்தான் 'சேகர வர்மா ராஜாவு' படத்தை இயக்கவிருந்தார். வரலாற்று கதைகளத்தில் ப்ரீயட் படமாக அது உருவாக இருந்தது.
அந்தப் படம் டிராப் ஆகவில்லை எனவும், தற்சமயம் அப்படத்தை தள்ளி வைத்திருப்பதாகவும் இயக்குநர் 'ஓடிடி ப்ளே' ஊடகத்திடம் நேற்று தெரிவித்திருக்கிறார். 'டால்பி தினேஷன்' பட இயக்குநர், " அந்தப் படத்தை இப்போது நிறுத்தி வைத்திருக்கிறோம்.
அந்தப் பட கதையின் ஐடியாவை மையமாக வைத்து மற்றொரு படத்திற்காக நான் வேலைகள் செய்து வருகிறேன்." எனக் கூறியிருக்கிறார்.
இந்த இரண்டு படங்களின் இயக்குநர்கள் அதிகாரப்பூர்வமாக, அந்தப் படம் குறித்தான அப்டேட்களை பகிர்ந்திருக்கிறார்கள். இந்த இரண்டு படங்களுடன் எதற்காக 'கேங்ஸ்டர் ஆஃப் முண்டன்மல', 'தாரம்', 'பிஸ்மி ஸ்பெஷல்' ஆகியப் படங்களின் போஸ்டர்களை நீக்கினார் என்பதற்கு எந்தவொரு விளக்கத்தையும், தகவலையும் நிவின் பாலியின் குழுவினர் தரவில்லை.




















