செய்திகள் :

OPS : `நான் ரெடி... டிடிவி தினகரனும், எடப்பாடியும் ரெடியா?'- தேனியில் பன்னீர்செல்வம் பேட்டி

post image

தேர்தலுக்காக பல கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன. கொள்கைகளையும், காரசாரமான விவாதங்களையும், குற்றச்சாட்டுகளையும் கடந்து கூட்டணிகள் உருவாகி வருகின்றன. அதே நேரம், அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் தொடர் மவுனம் சாதித்து வருகிறது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் தனித்து விடப்பட்டுள்ளார். தை பிறந்ததும் கூட்டணியை அறிவிப்பேன், நாங்கள் அரசியல் கட்சி அல்ல என்று ஒவ்வொரு நேரத்திலும் வெவ்வேறு பதில்களை கூறி அரசியல் களத்தை குழப்பி வந்தார்.

இந்த நிலையில், இன்று தேனியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``நாங்கள் நடத்திக் கொண்டிருப்பது அ.தி.மு.க அடிப்படை தொண்டர்களின் உரிமைகளை மீட்டெடுக்கின்ற பாதுகாக்கின்ற கழகமாக நாங்கள் உருவாக்கி, சட்டப் போராட்டத்தை நீதிமன்றத்தில் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

எந்த முடிவையும் இன்னும் நாங்கள் எடுக்கவில்லை

எங்கள் பக்கம் தொண்டர்கள் இருக்கிறார்களா என்பதனை நிரூபித்து காண்பிப்பதற்காக, ராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட முக்கிய காரணம். என்னுடன் கட்சியும், தொண்டர்களும், மக்களும் இல்லை என்ற சூழலை கட்டமைக்க செய்த சூழ்ச்சிகள் அவை. இன்றுவரை எங்களுடைய நோக்கம் சட்ட போராட்டம் நடத்தி தொண்டர்களின் அடிப்படை உரிமைகளை மீட்டு தருவதுதான். தனிக்கட்சி துவங்குவது என்றோ, தேர்தலில் போட்டியிடுவது என்ற எந்த முடிவையும் இன்னும் நாங்கள் எடுக்கவில்லை.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை முதல்வராக அரியணை ஏற்றியது தேனி மாவட்டம். எனவே, இந்த மாவட்டத்தை சார்ந்தவன் என்ற முறையில், கழகத்தினுடைய சட்டவிதிக்கு ஊறு ஏற்பட்டிருக்கிறது என்பதால், 88 கழக ரீதியான மாவட்டங்களில் இருக்கின்ற மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் அனைவரும் போராடிக் கொண்டிருக்கின்றோம். அ.தி.மு.க பிரிந்திருக்கிறதா சேர்ந்திருக்கிறதா என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள்.

டிடிவி தினகரன் - எடப்பாடி பழனிசாமி
டிடிவி தினகரன் - எடப்பாடி பழனிசாமி

நான் என்.டி.ஏ கூட்டணியில் இணைவேன் என்பது டிடிவி தினகரனின் ஆசை அவ்வளவுதான். அதைத் தாண்டி அதில் பேச ஒன்றுமில்லை. இன்று டிடிவி தினகரனும், எடப்பாடியும் பங்காளிகளாக இணைந்திருக்கிறார்களே, நாங்கள் ஏற்கெனவே இணைய வேண்டும் எனப் பேசியிருந்தோம். அதில் அவருக்கு மாற்றுக்கருத்து இல்லை எனக் கருதுகிறேன். டிடிவி தினகரன் நினைத்தால் அதை சாத்தியமாக்கலாம். நான் ரெடி... டிடிவி தினகரனும், எடப்பாடியும் ரெடியானு கேட்டுச் சொல்லுங்கள்" என்றார்.

`டிடிவி-க்கு சித்தியின் மீது குறையாத கோபம்' - சசிகலாவின் `திடீர்' ஆதரவாளர்கள் சந்திப்பு ஏன்?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தன் இல்லத்தில் ஆதரவாளர்களைச் சந்தித்து, 2026 தேர்தலில் களமிறங்குவது குறித்து தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருகிறார். ஜெயலலிதா நினைவுநாளான பிப்ரவரி 24-ம... மேலும் பார்க்க

பழனி முருகன் கோயிலில் ஒலித்த 'உங்க விஜய்' பாடல்; இளைஞர் அட்ராசிட்டி - போலீஸில் புகார்!

பழனி முருகன் கோயிலில் ஒவ்வொரு தைப்பூசத்தின் போதும் ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசிக்க வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் முருகன் கோயிலுக்கு எளிதாகச் செல்வதற்கு யானை பாதையைத்தான் பயன்படுத்துவார்... மேலும் பார்க்க

'96 க்குப் பின் ஒற்றை இலக்க வாக்கு வங்கி மட்டுமே!' - தமிழகத்தில் காங்கிரஸின் பலம்தான் என்ன?

திமுக காங்கிரஸ் இடையே மூன்று மாதங்களுக்கு முன்பாக புகைய தொடங்கிய நெருப்பு இன்னும் அணையவில்லை. 'அமைச்சரவையில் பங்கு கிடையாது' என முதல்வர் ஸ்டாலின் ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன பிறகும் காங்கிரஸார் விடுவதாக இல்லை... மேலும் பார்க்க

நாடாளுமன்றம்: `இடைநீக்கங்கள், பதில் இல்லா கேள்விகள்' - முடங்குகிறதா ஜனநாயகத்தின் இதயம்?

நாடாளுமன்றம்இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல, உலகிலேயே மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பைக் கொண்ட நாடாகவும் திகழ்கிறது. நமது ஜனநாயகத்தின் இதயமாகத் திகழும் நாடாளுமன்றம், மக்களவை மற்றும் ... மேலும் பார்க்க

"2 அரசுகளும் அலைக்கழித்தால் எங்கே போவது?" - நயினார் நாகேந்திரனிடம் குமுறிய அங்கன்வாடி ஊழியர்கள்

காலமுறை ஊதியம், பதவி உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே 10வது நாளாக தொடர் காத்திருப்பு... மேலும் பார்க்க

பாஜக வானதி சீனிவாசன் vs அதிமுக சந்திரசேகர்; கோவை வடக்கு தொகுதி யாருக்கு? தகிக்கும் தேர்தல் களம்!

சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே கோவை வடக்கு தொகுதியில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. பாஜக-வின் சிட்டிங் எம்எல்ஏவான வானதி சீனிவாசன், அதிமுகவில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நிழலான சந்திர... மேலும் பார்க்க