செய்திகள் :

Pa. Ranjith: "மாற்றம் இருக்கணும்!" - இயக்குநர் பா. ரஞ்சித் சொல்வதென்ன?

post image

இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் வருடந்தோறும் பி.கே. ரோஸி திரைப்பட விழாவை நடத்தி வருகிறது.

ஐந்தாவது முறையாக இந்த ஆண்டும் அந்தத் திரைப்பட விழா நடைபெற்றிருக்கிறது.

Director Pa Ranjith - Vaanam Art Festival
Director Pa Ranjith - Vaanam Art Festival

இந்த ஆண்டின் பி.கே. ரோஸி திரைப்பட விழா கடந்த ஏப்ரல் 8-ம் தேதி தொடங்கி, நேற்றோடு முடிவடைந்திருக்கிறது.

இந்தத் திரைப்பட விழாவின் இறுதி நாளான நேற்று, இயக்குநர் பா. ரஞ்சித் செய்தியாளர்களிடையே பேசியிருக்கிறார்.

‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியானது குறித்து இயக்குநர் பா. ரஞ்சித், “ரொம்பக் கவலையான விஷயம் இது. தவறான செயல் இது.

நிறைய கோடி இந்தப் படத்திற்காக செலவழித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, பலரும் இந்தப் படத்திற்காகப் பெரும் உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

படத்தை லீக் செய்வதற்கு எப்படி அவர்களுக்கு மனம் வந்தது என்றே தெரியவில்லை. படத்தை லீக் செய்தவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும்” என்றார்.

இளைஞர்கள் அரசியலில் பங்கெடுப்பது குறித்து பா. ரஞ்சித், “இப்போது கட்சி சார்பற்று யோசிக்கும் இளைஞர்கள் பலர் இருக்கிறார்கள். சமூக நலத்தின் மீது அக்கறை கொண்ட நிறைய இளைஞர்களை நாம் இப்போது பார்க்கிறோம்.

Director Pa Ranjith - Vaanam Art Festival
Director Pa Ranjith - Vaanam Art Festival

நிறைய இளைஞர்களுக்கு பொறுப்பும் வந்திருக்கிறது. பாண்டிச்சேரியில் 96 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது.

இதன் மூலமாக நிறைய இளைஞர்கள் ஓட்டு போடுவதற்கு முன் வந்திருப்பது தெரிகிறது” என்றவரிடம் ‘மாற்றம் இருக்குமா?’ எனக் கேட்கப்பட்டது. இதற்கு பா. ரஞ்சித், “மாற்றம் இருக்க வேண்டும்” என்றார்.

Asha Bhosle: "அவரின் இசை இந்த பூமியில் மனிதர்கள் இருக்கும் வரை இருக்கும்" - ஷங்கர் மகாதேவன்

பிரபல பின்னணிப் பாடகியான ஆஷா போஸ்லே உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். இவருக்கு 92 வயது. 12,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கும் இவருக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருக... மேலும் பார்க்க

Asha Bhosle: "அவர் என்னிடம் காட்டிய பாசமும் அன்பும்"- உருக்கமாக வீடியோ வெளியிட்ட இளையராஜா

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே நேற்று (ஏப்ரல். 12) உடல்நல பாதிப்பால் காலமாகியிருக்கிறார். அவருக்கு வயது 92. மறைந்த பாடகி லதா மங்கேங்கேஷ்கரின் சகோதரியான ஆஷா போஸ்லே 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் 12,000 ப... மேலும் பார்க்க

'நானும், அவரும் இரவு முழுவதும் பேசிக்கொண்டிருப்போம்' சிவாஜி - ஆஷா போஸ்லேவின் 'ராக்கி'மலர்

இன்று பிரபல பாடகி ஆஷா போஸ்லே காலமாகியுள்ளார். மகாராஷ்டிராவில் பிறந்த ஆஷா போஸ்லே தமிழ் திரைப்படங்களில் பாடி மட்டும் தமிழ்நாடு ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கவில்லை. 'நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தங்கை'... மேலும் பார்க்க

'செண்பகமே செண்பகமே' டு 'செப்டம்பர் மாதம்': PAN இந்தியா பாடகி ஆஷா போஸ்லேவின் தமிழ் ஹிட்ஸ்

1970, 80-களில் இந்திய இசை உலகில் உச்சத்தில் இருந்தவர் பாடகி ஆஷா போஸ்லே. இன்று இயற்கை எய்தியிருக்கிறார். இதுவரை 20,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள ஆஷா போஸ்லேயின் கடைசி பாடல் கடந்த பிப்ரவரி மாத... மேலும் பார்க்க

Asha Bhosle: `இந்திய திரையிசையின் முடிசூடா அரசி!' - ஆஷா போஸ்லே காலமானார்

இந்தியத் திரையிசையின் முடிசூடா அரசியாகத் திகழ்ந்த பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். ஏப்ரல் 11-ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக, ஆஷா போஸ்லே மும்பை... மேலும் பார்க்க

ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: உதயநிதி மீது குற்றச்சாட்டு; ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன?

தமிழகத்தில் தேர்தல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. இன்று காலை இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார். இதற்கிடையில... மேலும் பார்க்க