DMK : அடுத்தடுத்த அறிவிப்புகள், திட்டங்கள்! `தோல்வி பயமா... தேர்தல் நேர எதார்த்த...
Parasakthi : "என் வாழ்க்கையில நானும் சுயமரியாதைய திரும்ப பெறுவதற்கு போராடுனேன்!" - ரவி மோகன்
சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான 'பராசக்தி' திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரைக்கு வருகிறது.
சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார்.
ஶ்ரீலீலா, அதர்வா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜீ.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100-வது திரைப்படம் இது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது.
படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்கள்.
ரவி மோகன் பேசுகையில், "ஹாப்பி நியூ இயர் எல்லாருக்கும். ஹாப்பியா சொல்லுங்க! ஏன்னா நான் படம் பார்த்துட்டேன்.
இந்த ஆண்டின் தலைசிறந்த படமா இது மாறும்னு கண்டிப்பா எங்களுக்கு தெரியும். எஸ்.கே எவ்வளவு கடின உழைப்பு போட்டிருக்காரு.
இங்க இருந்து அங்க வரைக்கும் வந்துருக்காருனா அது சாதாரண விஷயமில்லை. அவரோட ரசிகர்கள் இதே மாதிரி அவர்கூட ஓடிக்கிட்டே இருங்க.
ஜி.வி இது நூறு னு நினைக்காதீங்க. இதை முதல் படம் னு நினைச்சுக்கோங்க. இன்னும் 100 படம் நீங்க பண்ணனும்!

இந்த படத்துல ஒரு தீயை அழிக்கணும்னு நான் முயற்சி பண்றேன். ஆனா இந்த தீயை வெளிய சில பேர் அழிக்க பார்க்கிறாங்க. இந்த படம் பண்ணதுக்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கு. ஒன்னே ஒன்னுதான்.
இந்த படம் சுயமரியாதையை காப்பாத்துறதைப் பற்றின படம். என் வாழ்க்கையில நானும் சுயமரியாதைய திரும்ப பெறுவதற்கு போராடுனேன். எல்லோருக்கும் ஒன்னு சொல்றேன். சுயமரியாதைய மட்டும் விட்டறாதீங்க!" எனப் பேசினார்.



















