செல்போன் வெடித்து 27 பேர் பலியானதாக பரவும் ஆடியோ - எச்சரித்த தூத்துக்குடி போலீஸா...
Rain Update: 'வளிமண்டல கீழடுக்கு சுழற்சி' - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை? வானிலை மையம் தகவல்
இன்று (ஜன.24) அதிகாலை முதலே சென்னை மற்றும் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால் இன்று (ஜன.24) கடலோரத் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல நாளை (ஜன.25) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.


















