செய்திகள் :

RCB: "ஹாட்ரிக் கப் அடிக்கிறதுக்கு ஐடியா பண்ணப் போறோம்!" - உற்சாகத்தில் ரஜத் பட்டிதார்

post image

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி சாம்பியன் ஆகியிருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றிருக்கும் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பத்திரிகையாளர் சந்திப்பில் மகிழ்ச்சி பொங்கப் பேசியிருக்கிறார்.

RCB
RCB

ரஜத் பட்டிதார் பேசியதாவது, ''நான்கைந்து சீசன்களில் ஆடிவிட்டேன். ஆண்டி ப்ளவரை ஆகச்சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவர் என்றே மதிப்பிடுவேன். போட்டிகளில் ஆடும் வீரர்களை மட்டும் அல்ல, ஆடாமல் வெளியில் இருக்கும் புதிய வீரர்களைக் கூட அவர் நன்றாகக் கவனித்துக் கொள்வார். அவர்களோடும் அதிக நேரத்தைச் செலவிடுவார்.

கடந்த ஆண்டு எங்கள் மீது நிறைய அழுத்தம் இருந்தது. இந்தச் சீசனில் அப்படியில்லை. இந்தச் சீசன் முழுக்க நாங்கள் ஆதிக்கம் செலுத்தினோம். அணி நிர்வாகமும் வீரர்களும் என்னை முழுமையாக நம்பினார்கள். அதற்கான வெற்றி இது.

இரண்டு முறை கோப்பையை வென்றுவிட்டோம். இப்போது கொண்டாட்டத்தில் இருக்கிறோம். ஆனால், சீக்கிரமே மூன்றாவது கோப்பையை வெல்வதை நோக்கி வேலை செய்ய ஆரம்பித்து விடுவோம்.

Rajat Patidar
Rajat Patidar

நான் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் பற்றி அதிகம் யோசிப்பதில்லை. நிகழ்காலத்தில் அணிக்காக என்ன செய்ய முடியும் என்றே நினைக்கிறேன். வெற்றி, தோல்விகளைப் பற்றி எனக்கு கவலை இல்லை. என்னுடைய 100% திறனை ஆட்டத்தில் வெளிப்படுத்த முடிகிறதா என்பதே முக்கியம்.

சமீபமாக ஆர்.சி.பி அணியின் கலாசாரம் மாறியிருக்கிறது. வீரர்களின் மனநிலை மாறியிருக்கிறது. பயிற்சியாளர் குழுவுக்குதான் முழு க்ரெடிட்டையும் கொடுக்க வேண்டும். அவர்கள் எல்லா வீரர்களையும் ஒரே மாதிரியாக மதிக்கிறார்கள்.

விராட் கோலியைப் பற்றி வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அவர் ஒவ்வொரு முறையும் அசாத்தியங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். அவரிடமிருந்து கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட்டைத் தாண்டி நிறைய கற்றுக்கொள்கிறோம். வலைப்பயிற்சியின்போது கூட ஒரு போட்டியில் ஆடுவதைப் போலத்தான் கோலி ஆடுவார். அந்த ஆற்றல்தான் எனக்கான இன்ஸ்பிரேஷன்.

கடந்த சீசனின் வெற்றிக்குப் பிறகு எங்களின் ரசிகர்கள் சிலரை இழந்தோம். ரசிகர்கள்கூட அல்ல, அவர்கள் எங்களின் குடும்பத்தினர். இந்தக் கோப்பையை எங்களின் ரசிகர்களுக்குச் சமர்பிக்கிறேன்'' என்றார்.

மனு பாக்கரை ஒலிம்பிக் நாயகியாக்கிய `குரு' - கோச் ஜஸ்பால் ராணா திடீர் மரணம்; சாம்பியனை இழந்த இந்தியா

இந்தியாவின் துப்பாக்கிச் சுடுதல் ஜாம்பவானும், பாரீஸ் ஒலிம்பிக் நாயகி மனு பாக்கரின் பயிற்சியாளருமான ஜஸ்பால் ராணா (49), உடல்நலக்குறைவால் திடீரென காலமானார். டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்ச... மேலும் பார்க்க

Praggnanandhaa: நார்வே செஸ் தொடரில் கெய்மரை வீழ்த்தி பட்டம் வென்ற பிரக்ஞானந்தா; வரலாற்று சாதனை!

நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார் பிரக்ஞானந்தா. நார்வே செஸ் போட்டி மே 25 முதல் ஜூன் 5ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில் குகேஷ், பிரக்ஞானந்தா, மாக்னஸ் கால்சன் வின்சென்ட் கெய்மர்... மேலும் பார்க்க

Praggnanandhaa: நார்வே செஸ் பட்டம் வென்ற முதல் இந்தியர்; வரலாற்று சாதனை படைத்த பிரக்ஞானந்தா! |Live Updates

நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார் பிரக்ஞானந்தா. நார்வே செஸ் போட்டி மே 25 முதல் ஜூன் 5ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில் குகேஷ், பிரக்ஞானந்தா, மாக்னஸ் கால்சன் வின்சென்ட் கெய்மர்... மேலும் பார்க்க

வடகொரிய மகளிர் கால்பந்து அணி வரலாற்றுச் சாதனை! அதிபர் கிம் ஜாங் உன்னுடன் கொண்டாடிய அரிய காட்சி

உலக நாடுகளை எப்போதுமே தனது ராணுவ பலத்தால் அதிரவைக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், முற்றிலும் ஒரு மாறுபட்ட நெகிழ்ச்சியான கோணத்தில் உலகிற்கு காட்டியுள்ளனர் அந்நாட்டு மகளிர் கால்பந்து அணியினர். 'ஏஎப்ச... மேலும் பார்க்க

ஒண்ணு இல்ல, ரெண்டு! ஒரே தொடரில், கார்ல்சனின் சொந்த ஊரில் இருமுறை வீழ்த்தி பிரக்ஞானந்தா செய்த சம்பவம்

செஸ் உலகின் சக்கரவர்த்தி என வர்ணிக்கப்படும் மேக்னஸ் கார்ல்சனை, அதுவும் அவரது சொந்த மண்ணில், ஒரே தொடரில் இருமுறை வீழ்த்துவதெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத சாதனை. அந்த அசாத்திய சாதனையை நிகழ்த்திக்... மேலும் பார்க்க

'காலத்துக்கு ஏத்த மாதிரி மாறனும்!' - 38 வயதில் விராட் கோலி எப்படி சாதித்தார்?

ஆர்.சி.பி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் ஆகியிருக்கிறது. விராட் கோலியின் நீண்ட கால கனவு இது. ஆனால், அவருடைய கேப்டன்சியில் இந்த சாதனையை அவரால் நிகழ்த்தவே முடியவில்லை. ரஜத் பட்டிதார் வந்த பிற... மேலும் பார்க்க