செய்திகள் :

SIR: ``திமுக ஆலோசனை கூட்டத்தில் ஆட்சியர், ஆணையர் பங்கேற்றது நிர்வாக சீர்கேடு'' - ராஜன் செல்லப்பா

post image

"ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்தபோது 2011-ல் ஆட்சிக்கு வர முடியவில்லை, அதேபோல தற்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக உள்ளதால் 2026-ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது" என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா பேசியுள்ளார்.

ராஜன் செல்லப்பா
ராஜன் செல்லப்பா

திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு தொகுதிகளுக்கான அதிமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கிய புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா பேசும்போது,

"தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையத்தால் எஸ்.ஐ.ஆர் பணி நடைபெற்று வருகிறது. நாளையும், நாளை மறுநாளும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 'பாக முகவர்கள் 2' பங்கேற்க வேண்டும்.

தற்போது பி.எல்.ஒ பணியில் பணிபுரியும் அலுவலர்கள் சரியாக நியமிக்கப்படவில்லை. காலை உணவு திட்டத்தில் உள்ளவர்கள், சுய உதவி குழுவினரை நியமித்துள்ளனர், இவர்களுக்கு சரியான பயிற்சி இல்லாதால், அவர்களை திமுக சாதகமாக பயன்படுத்துகிறது.

ஆகவே, 'பாக முகவர்கள் 2' தற்போது நடைபெறும் முகாமில் பங்கேற்று மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய விஷயங்களை அவர்களுக்கு சொல்லித் தர வேண்டும்.

ராஜன் செல்லப்பா
ராஜன் செல்லப்பா

இன்றைக்கு எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய ஆதரவு அலை உருவாகி உள்ளது. 172 தொகுதிகளிலும் எழுச்சி பயணம் செல்லும்போது மக்கள் சிறப்பான வரவற்பை அளித்தனர். 172 தொகுதிகளில் இப்போதே பிரசாரத்தை சிறப்பாக நடத்திவிட்டார்.

இதுபோன்று யாரும் செய்யவில்லை, அதேபோல முதலமைச்சர் ஸ்டாலின் ரோடு ஷோ சென்றபோது ரோட்டில் மக்கள் இல்லாமல் காலியாகத்தான் இருந்தது.

இதன் மூலம் அதிமுகவின் வெற்றி நிச்சயம் ஆகிவிட்டது, அதனால் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் தவறை சுட்டிக்காட்டும் அதிகாரம் உங்களிடத்தில் உள்ளது. அலுவலர்கள் தவறு செய்தால் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியிடம் முறையிட வேண்டும்.

எஸ்.ஐ.ஆர் பணியை திமுக எதிர்க்கிறது, ஆனால், திமுக அமைச்சர் மூர்த்தி கிழக்குத் தொகுதியில் சமீபத்தில் நடத்திய 'திமுக பாக முகவர்கள் 2' ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பங்கேற்றுள்ளனர்.

இது நிர்வாக சீர்கேடுக்கு சான்று, தவறான முன் உதாரணம். இதில் பங்கேற்றது தவறு இல்லை என்றால் அடுத்த முறை நாங்கள் நடத்தும் 'பாக முகவர்கள் 2' ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியருக்கு அழைப்பு விடுவோம், அதில் பங்கேற்க வேண்டும்.

அமைச்சர் மூர்த்தி
அமைச்சர் மூர்த்தி

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தைக் கூட 36 மாதம் கழித்துதான் வழங்கினார்கள். எடப்பாடி பழனிசாமி 2026-ல் ஆட்சிக்கு வரும்போது மகளிர் உரிமைத்தொகையை 1,500 ரூபாயாக வழங்குவார்.

ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்தபோது 2011-ல் மீண்டும் ஆட்சிக்கு வர முடியவில்லை. அதேபோல தற்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக உள்ளதால், 2026-ல் திமுக ஆட்சிக்கு வர முடியாது.

திமுக ஒருமுறை ஆட்சிக்கு வந்தபின் மறுமுறை வந்தது கிடையாது. ஆனால், அதிமுக பல முறை வந்துள்ளது, 2026 ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார்" எனப் பேசினார்

``விவசாயிகளுக்காக பிரதமர் மோடி கோவை வருவதை வரவேற்கிறேன்'' - பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் திண்டுக்கல்லில் நேற்று வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.பின்னர் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித... மேலும் பார்க்க

``மதுரைக்கும், கோவைக்கும் NO METRO; இப்படி பழிவாங்குவதா!" - பாஜக அரசை விமர்சிக்கும் ஸ்டாலின்

மதுரை மற்றும் கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ள தமிழக அரசு, அதற்கான திட்ட விரிவாக்க அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தது.இவ்வாறிருக்க மத்திய அரசு, மேல... மேலும் பார்க்க

பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருகை; வேளாண் மாநாட்டில் பங்கேற்பு, எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம் மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். காலை ஆந்திராவில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, மதியம் 1 ... மேலும் பார்க்க

மதுரை, கோவை மெட்ரோ: நிராகரித்த மத்திய அரசு: "அங்கெல்லாம் அனுமதி வழங்கியது எப்படி?" - எதிர்க்கட்சிகள்

மதுரை மற்றும் கோவை மாநகரங்களுக்கு முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்திருக்கிறது. இரண்டு நகரங்களிலும் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருப்பதனால் இந்த முடிவு... மேலும் பார்க்க

"இயற்கையை நேசிக்க மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்" - K.K.S.S.R. ராமச்சந்திரன்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு வனத்துறை - ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் இணைந்து நடத்தும் 'வனமும் வாழ்வும்' என்ற தலைப்பிலான ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம்... மேலும் பார்க்க