பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்குமா? - திருமாவளவன் சொன்ன பதில் என்ன?
T 20 World Cup: வங்கதேச அணியைத் தொடர்ந்து பாகிஸ்தானும் விலகுகிறதா?- PCB தலைவர் அளித்த பதில் என்ன?
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்க இருக்கிறது.
இப்போட்டிகளுக்கான அட்டவணைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.
ஆனால், இந்த தொடரில் இருந்து கடைசி நேரத்தில் வங்கதேச அணி விலகியது.

அதாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை பிசிசிஐ நீக்கியதை தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம் என வங்கதேசம் அணி தெரிவித்து ஐசிசிக்கு கடிதம் எழுதியது.
அதை பரிசீலனை செய்த ஐசிசி பாதுகாப்பு ஆலோசனைக்கு குழு இந்தியாவில் வங்கதேச வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் பாதுகாப்பு பிரச்னை இல்லையென்றும், வங்கதேசம் இந்தியாவிற்கு வந்து விளையாட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தது.
ஆனால் தங்களுடைய முடிவில் இருந்து வங்கதேசம் பின்வாங்காத நிலையில், பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு 2026 டி20 உலகக்கோப்பையிலிருந்து வங்கதேசத்தை நீக்கி, அதற்குபதிலாக ஸ்காட்லாந்து விளையாடும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில் ஐசிசியின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி, பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பையை புறக்கணிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கிறார்.
இதுதொடர்பாக பேசியிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி, " வங்கதேசத்திற்கு ஐசிசி அநியாயம் செய்துள்ளது. ஐசிசி கூட்டத்திலும் நான் இதையேதான் சொன்னேன்.
ஒரு அணி எப்போது வேண்டுமானாலும் என்ன முடிவு வேண்டுமானலும் எடுக்கலாம், அதற்கு சரி என்று அனுமதிப்பீர்கள். ஆனால் மற்றொரு அணி அதைசெய்தால் அதற்கு அனுமதி கிடையாது.
அதனால்தான் நாங்கள் வங்கதேச அணியின் பக்கம் நிற்கிறோம், அவர்கள் விளையாட அனுமதிக்கப்பட வேண்டும்.

வங்கதேசம் ஒரு முக்கியமான அணி, அவர்களுக்கு இப்படியான ஒரு அநீதியைச் செய்யக்கூடாது.
வங்கதேசத்தின் வழியை பின்பற்றி பாகிஸ்தானும் டி20 உலகக்கோப்பையிலிருந்து விலகுமா? என்பது பாகிஸ்தான் அரசாங்கத்தின் முடிவில் தான் இருக்கிறது. அரசு என்ன சொல்கிறதோ அதை நாங்கள் பின்பற்றுவோம்" என்று தெரிவித்திருக்கிறார்.











