செய்திகள் :

T20 WC: ஆஸ்திரேலியா ஆல் அவுட்; சம்பவம் செய்த ஜிம்பாப்வே! - கொழும்புவில் என்ன நடந்தது?

post image

கொழும்புவில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அதிர்ச்சியளித்திருக்கிறது ஜிம்பாப்வே அணி.

Zimbabwe
Zimbabwe

டாஸை ஆஸ்திரேலிய அணியே வென்றிருந்தது. முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தது. கொழும்பு மைதானம் கொஞ்சம் மெதுவான மைதானம். சராசரி ஸ்கோரே 150-160 க்குள்ளாகத்தான் இருக்கும். இதை புரிந்து வைத்துக் கொண்டு ஜிம்பாப்வே அணி கால்குலேட்டிவாக ஆடியிருந்தது.

பென்னட்டும் மருமணியும் ஓப்பனர்கள்.

160 மார்க்கை எட்டினால் போதும் என்கிற மனநிலையில் நிதானமாக ஆடினர். பவர்ப்ளேக்குள் ஆஸ்திரேலிய அணி வார்சூயிஸ், மேக்ஸ்வெல், நேதன் எல்லீஸ் என 5 பௌலர்களை பயன்படுத்தியது. ஆனாலும் விக்கெட் கிடைக்கவில்லை. முதல் விக்கெட்டுக்கு இந்த கூட்டணி 61 ரன்களை சேர்த்தது. மருமணி அவுட் ஆனவுடன் ரியான் பர்ல் உள்ளே வந்தார். அடுத்ததாக ராசா. எல்லாருமே நிலைமையையும் சூழலையும் உணர்ந்து சௌகரியமாக ஒரு டார்க்கெட்டை எட்ட வேண்டும் என்கிற மனநிலையுடனேயே ஆடினர். விளைவு, ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 169 ரன்களை எட்டியது. பென்னட் அரைசதத்தை அடித்திருந்தார்.

Zimbabwe
Zimbabwe

ஆஸ்திரேலியாவுக்கு டார்கெட் 170. பவர்ப்ளே முடிவதற்குள்ளாகவே 4 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி கொடுத்தது ஆஸ்திரேலியா. முசரபாணியும் எவன்ஸூம் விக்கெட் வேட்டை நடத்தினர். கீரனும் டிம் டேவிட்டும் டக் அவுட் ஆகினர். ஆஸ்திரேலிய அணி 29-4 என தடுமாறியது.

இதன்பிறகு கூட்டணி சேர்ந்த ரென்சாவும் மேக்ஸ்வெல்லும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் இணைந்து 77 ரன்களை சேர்த்தனர். ஆனால், இவர்களாலும் ஆட்டத்தை முடிக்க முடியவில்லை. ஜிம்பாப்வேயின் ஸ்பின்னர்கள் சுழல் ஜாலம் நடத்தினர். வேகப்பந்து வீச்சாளர்கள் நக்கிள் பால் போன்ற வேரியேஷன்களில் கலக்கினர். மேக்ஸ்வெல் 31ரன்களில் பர்லின் பந்தில் போல்டாகினார்.

கடைசி 5 ஓவர்களில் ஆஸ்திரேலியாவுக்கு 56 ரன்கள் தேவை. 5 விக்கெட்டுகள் கையில் இருந்தது. ஆனால், இந்த 5 ஓவர்களை மசகட்சா, முசரபாணி, க்ரீமர் போன்றோர் லாவகமாக வீச, ஜிம்பாப்வேயின் பீல்டிங்கும் தீவிரமாக இருந்தது.

இதனால் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 23 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வென்றது.

2007 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையிலும் ஜிம்பாப்வே ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

'தீப்பொறியாக நமீபியா; ஊதி அணைத்த மென் இன் ப்ளூ! - எப்படி வென்றது இந்தியா?

உலகக்கோப்பைப் போட்டிகளின் முதல் சுற்றில் இந்தியா போன்ற பெரிய அணிகளுக்கு பெரும்பாலும் சிக்கல் இருக்காது. ஆனால், இந்த உலகக்கோப்பையில் சின்னச்சின்ன அணிகளெல்லாம் சிறப்பாக ஆடுகின்றன. அதனால் நமீபியாவுக்கு எ... மேலும் பார்க்க

T20 WC: `என்னா மேட்ச்!' - இரண்டு சூப்பர் ஓவர்; ஆனாலும் லாஸ்ட் பால் த்ரில்லர்! SA-வை பதற வைத்த AFG!

டி20 உலகக் கோப்பையின் 13-வது லீக் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ரசிகர்களை நாற்காலியின் நுனியில் அமர வைத்த பரபரப்பான திரில்லராக மாறியது.தென் ஆப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய இந்தப்... மேலும் பார்க்க

CSK: சிஎஸ்கே அணியுடன் கைகோக்கும் ஸ்கைபேக்ஸ் - இளைஞர்களைச் சென்றடைய எடுத்த முடிவு!

ஐபிஎல் 2026 சீஸனை முன்னிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடன் பிரபல லக்கேஜ் பிராண்டான ஸ்கைபேக்ஸ் அதிகாரபூர்வ கூட்டணியில் இணைந்துள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம், வரும் சீஸனில் சிஎஸ்கே அணியின் அதிகாரப்... மேலும் பார்க்க

Shubman: 'அவரின் எளிமையைக் கண்டு வியந்தேன்'- சுப்மன் கில்லை பாராட்டிய இங்கிலாந்து கால்பந்து வீரர்

இங்கிலாந்து முன்னாள் கால்பந்து வீரர் ரியோ பெர்டினாண்ட், சுப்மன் கில்லை நேரில் சந்தித்தது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கில்லை பாராட்டி பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில... மேலும் பார்க்க

'சூர்யாக்கிட்ட இருந்து போன் வந்த உடனே ஜோக்குனு நினைச்சேன்!' - கடைசி நிமிட வாய்ப்பு குறித்து சிராஜ்!

உலகக்கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் அமெரிக்காவை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது. இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். டி20 உலகக்... மேலும் பார்க்க

T20: 'இது' தான் என்னை மீண்டும் சூர்யாவாக்கியது! - IND Vs USA வெற்றிக்குப் பின்‌ சூர்யகுமார்‌ யாதவ்

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற T20 உலகக்கோப்பை தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் இந்தியா – அமெரிக்கா அணிகள் நேருக்கு நேர் மோதின. டாஸ் வென்ற அமெரிக்க அணியின் கேப்டன் மோனாங்க் படேல், சூழ்நிலையை கணி... மேலும் பார்க்க