செய்திகள் :

The Wedding of VIROSH: இந்தியாவின் மோஸ்ட் வான்டட் திருமணம்: விஜய் - ராஷ்மிகா வெட்டிங் டைரி!

post image

திரையில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் கெமிஸ்ட்ரி என்பது வெறும் நடிப்பு மட்டுமல்ல, அது ஒரு கவிதை என்றுதான் சொல்ல வேண்டும். தென்னிந்திய சினிமாவில் மிகச் சில ஜோடிகளுக்கு மட்டுமே அமைந்த அந்த மேஜிக் இவர்களுக்கும் அமைந்தது.

'கீதா கோவிந்தம்' படத்தில் மோதலில் தொடங்கிய காதல் இவர்களின் ஜோடிப் பொருத்தத்திற்கு திருமண பாதை அமைத்தது. 'இன்கேம் இன்கேம்' பாடலில் இருவரின் கண்களும் பேசிக்கொண்ட விதம், ஒரு புதிய காதல் ஜோடி உருவாகிவிட்டதை உறுதி செய்தது.

vijay deverakonda - rashmika
vijay deverakonda - rashmika

படப்பிடிப்புத் தளத்திற்கு வெளியேயும் இவர்கள் சிறந்த நண்பர்களாக இருந்ததால், அந்த நெருக்கம் திரையிலும் எதிரொலித்தது. "விஜய் எனக்கு ஒரு வழிகாட்டி" என்று ராஷ்மிகாவும், "ராஷ்மிகா என் வாழ்க்கையின் முக்கிய அங்கமாகிவிட்டார்" என்று விஜய்யும் பேட்டிகளில் கூறி வந்தார்கள்.

பல ஆண்டுகளாக தங்கள் காதலை பொதுவெளியில் அறிவிக்காமல் இருந்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா ஜோடி, திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன் (பிப்ரவரி 22, 2026 அன்று) அதிகாரபூர்வமாக தங்கள் திருமணத்தை அறிவித்தனர். இந்த திருமணத்தில் வழக்கமான ஆடம்பரங்களைத் தாண்டி, பல புதுமையான மற்றும் உணர்வுபூர்வமான விஷயங்களை இவர்கள் செய்துள்ளனர்:

ரசிகர்களின் பெயருக்கு மகுடம் ('The Wedding of VIROSH')

பிரபலங்கள் தங்கள் திருமணத்திற்கு ஈவென்ட் மேனேஜர்களைக் கொண்டு ஹேஷ்டேக் உருவாக்குவது வழக்கம். ஆனால், இவர்கள் தங்களது கல்யாணத்திற்கு 'தி வெடிங் ஆஃப் விரோஷ்' (The Wedding of VIROSH) என்று பெயரிட்டுள்ளனர். 'விரோஷ்' என்பது விஜய் மற்றும் ராஷ்மிகா ஆகிய பெயர்களை இணைத்து ரசிகர்களால் அன்பாக உருவாக்கப்பட்ட பெயர். "நாங்கள் எதையும் திட்டமிடுவதற்கு முன்பே, நீங்கள் எங்களுக்கு இந்த பெயரை வழங்கிவிட்டீர்கள். உங்கள் அன்பை கௌரவிக்கும் விதமாகவே இந்த பெயரை சூட்டுகிறோம்" என்று அறிவித்து ரசிகர்களுக்கு மிகப் பெரிய இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

vijay deverakonda - rashmika
vijay deverakonda - rashmika

திருமணத்திற்கு முந்தைய பார்ட்டிகளை மிகவும் கேஷுவலாக திட்டமிட்டுள்ளனர். வழக்கமான பார்ட்டிகள் போல் இல்லாமல், நீச்சல் குளத்தில் இருவீட்டாரும் 'வாட்டர் வாலிபால்' (Pool Volleyball) விளையாடி மகிழும் புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளன.

திருமணத்திற்கு முந்தைய விருந்தில் பிரத்யேகமாக 'ஜப்பானிய உணவு முறை' (Japanese dining experience) பரிமாறப்பட்டுள்ளது. உணவு மெனு கார்டுகள் மற்றும் விருந்தினர்கள் பயன்படுத்தும் நாப்கின்கள் அனைத்திலும் 'VIROSH' என்ற பெயர் எம்பிராய்டரி செய்யப்பட்டுள்ளது.

இது முற்றிலும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் 50-க்கும் குறைவான நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் மிக பிரைவேட்டான திருமணம். எனவே, திருமண நிகழ்வில் யாருடைய மொபைல் போன்களுக்கும் அனுமதி இல்லை (No-phone policy) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உதய்பூர் அரண்மனையின் பாதுகாப்பிற்காக உள்ளூர் காவலர்களுடன் இணைந்து வெளிநாட்டைச் சேர்ந்த தனியார் பாதுகாப்பு நிறுவனமும் களமிறக்கப்பட்டுள்ளது.

திருமணம் முடிந்த கையோடு, சினிமா வேலைகள் மற்றும் சமூக வலைதளங்களில் இருந்து ஒரு மாதம் முழுமையாக விலகி (One-month digital and work detox) தங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மட்டுமே நேரம் ஒதுக்க இருவரும் முடிவு செய்துள்ளனர்.

vijay deverakonda - rashmika
vijay deverakonda - rashmika

திருமண இடம்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள புகழ்பெற்ற ஐடிசி மெமெண்டோஸ் (ITC Mementos) என்ற பாரம்பரிய அரண்மனையில் திருமண நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இந்த ஹோட்டல் சாதாரணமான ஒன்று அல்ல. உதய்பூரிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில், ஆரவல்லி மலைத்தொடரின் ஒரு முழு குன்றின் மீது சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் இந்த சொகுசு விடுதி அமைந்துள்ளது. ஒரு மலை குன்றின் மீது அமைந்துள்ளதால், இங்கிருந்து பார்த்தால் உதய்பூரின் முழு அழகையும் ரசிக்க முடியும். விடுதிக்குள்ளேயே ஏரி மற்றும் குளம் போன்ற வசதிகள் உள்ளன. இந்த விடுதியில் தங்குவதற்கான கட்டணம் அதன் சொகுசுக்கு ஏற்றவாறு மிகவும் அதிகம். ஒரு சாதாரண வில்லாவின் வாடகை ஒரு இரவுக்கு சுமார் ரூ. 35,000-லிருந்து தொடங்குகிறது. பிரத்யேக நீச்சல் குளம் மற்றும் தனிப்பட்ட வசதிகள் கொண்ட மிக உயர்தர அறைகளின் (Premium Suites) வாடகை வரிகள் நீங்கலாக ரூ. 71,000 முதல் ரூ. 91,000 வரை வசூலிக்கப்படுகிறது.

பரிசுப் பெட்டியில் இருக்கும் ரகசியம்:

திருமணத்திற்கு அழைக்கப்பட்டுள்ள விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட அழைப்பிதழ் பெட்டியில் சில சுவாரசியமான பொருட்கள் உள்ளன. விஜய் தேவரகொண்டாவின் 'ரவுடி' (Rowdy) பிராண்ட் டி-ஷர்ட். ராஷ்மிகாவின் சொந்த பிராண்டான 'டியர் டைரி' (Dear Diary) வாசனை திரவியம். ஆயுர்வேத கை மற்றும் கால் பராமரிப்பு கிரீம்கள் அடங்கிய தங்க நிற பை.

vijay deverakonda - rashmika
vijay deverakonda - rashmika

பிப்ரவரி 24 அன்று மெகந்தி நிகழ்ச்சியும், பிப்ரவரி 25 அன்று ஹல்தி மற்றும் சங்கீத் நிகழ்ச்சிகளும், பிப்ரவரி 26 அன்று திருமணமும் நடைபெறுகிறது. குடும்பத்தினருக்கான திருமணம் உதய்பூரில் முடிந்த பிறகு, மார்ச் 4, 2026 அன்று ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் திரையுலக பிரபலங்களுக்கான பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

புதிய பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் இந்த நட்சத்திரத் தம்பதியினர், என்றும் மாறாத அதே குறும்புடனும், அன்போடும் ஒரு மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கையைத் தொடர வாழ்த்துவோம்!

`தாய் கிழவி’க்கு எம்.ஆர்.ராதா இன்ஸ்பிரேஷன்! - ராதிகா எமோஷனல்

`தாய் கிழவி’ படத்துக்கான விகடன் பேட்டியில், நடிப்பு அனுபவத்திற்கான இன்ஸ்பிரேஷன் குறித்து ராதிகா... “இந்தக் கதையில் வரும் பவுனுத்தாய்க்கு பாரதிராஜா சார் அம்மாவைத்தான் மனதில் வைத்திருந்தேன். அவர்களை ரொம... மேலும் பார்க்க

'The Wedding of VIROSH' - டும் டும் டும் அறிவிப்பை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா!

நடிகர்கள் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா காதல் பற்றி அவர்கள் ஓபனாக சொல்லவில்லை என்றாலும், அது ஊரறிந்த ரகசியம். கடந்த அக்டோபர் மாதம் சத்தமே இல்லாமல், ஐதராபாத்தில் விஜய் தேவரகொண்டாவின் வீட்டில் இருவ... மேலும் பார்க்க

1980 டு 2026: ரஜினியின் அதே குணம், கமலுடன் கைகோக்கும் அதே பலம்!

``கமலைப் போலவே ரஜினியிடமும் டெலிபோனிலேயே பேசி, பத்திரிகைக்கு விஷயம் வாங்கி விடலாம். சில நடிகர்களைப்போல `நேரே வாங்க, பேசலாம்’ என்று நம்மை அலைக்கழிக்க மாட்டார்.இவரிடம் நான் கவனித்த பாராட்ட வேண்டிய ஒரு க... மேலும் பார்க்க

நிகழ மறுத்த அற்புதம்! : மிகவும் வருத்தத்தை ஏற்படுத்திய `காந்தா’ திரைப்படம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

தயாரிப்பாளர் சங்க விவகாரம்: ராஜேஸ்வரியின் புகார்! - போலீஸ் நடவடிக்கைக்கு பரிந்துரைத்த மகளிர் ஆணையம்

’தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து தன்னை நீக்கியதுடன், அங்கு பல பேர் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வைத்தார்கள்' என மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்த தயாரிப்பாளர் ராஜேஸ்வரி மனு ... மேலும் பார்க்க

`அன்று திரையில் பார்த்த இடம் இன்று.!' - சினிமா ஸ்பாட்களுக்கு டைம் ட்ராவல் செய்யும் ஜெயகார்த்திக்!

சோசியல் மீடியாவில் `கோவூர் மீம்ஸ்’ ஜெயகார்த்திக் என்பவர் அன்றும் இன்றும் எனும் தலைப்பில் சினிமாவில் ஒரு படத்தின் காட்சியில் வந்த முக்கிய இடம் இன்று எப்படி இருக்கிறது என நாஸ்டாலஜியா பதிவிட்டு வருகிறார்... மேலும் பார்க்க