Women's Blind T20 World Cup: உலகக்கோப்பை வென்ற பார்வைசவால் கொண்ட இந்தியப் பெண்கள...
Women's Blind T20 World Cup: உலகக்கோப்பை வென்ற பார்வைசவால் கொண்ட இந்தியப் பெண்கள்; ஸ்டாலின் பாராட்டு
நேற்று பார்வை சவால் கொண்ட பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நடைபெற்றது. அதில் இந்திய அணி வெற்றி வாகையைச் சூடியுள்ளது.
கொழும்பில் உள்ள பி சாரா ஓவலில் நடந்த இந்தப் போட்டியில் நேபாள அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியுள்ளது.
டாஸில் வென்ற இந்திய அணி பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தது. நேபாள அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 114 ரன் எடுத்து இந்திய அணிக்கு 115 ரன்கள் என இலக்கை நிர்ணயித்தது.
வெறும் 12 ஓவர்களில் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளுடன் 117 ரன்களைக் குவித்து வெற்றியை கைப்பற்றியது.
ஸ்டாலின் பதிவு
இந்தியப் பெண்கள் அணியின் வெற்றியைப் பாராட்டி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது...
"தைரியம் வழிநடத்தும்போது வரலாறு உருவாகும்!
முதல் டி20 உலகக் கோப்பையை வென்ற நமது பார்வை சவால் கொண்ட பெண்கள் அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
நீங்கள் இந்தியாவின் பெருமையாகவும், உலகிற்கு ஒரு ஊக்கமாகவும் உயர்ந்து நிற்கிறீர்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த அணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலர் பாராட்டியுள்ளனர்.
வாழ்த்துகள் டீம்!
History rises when courage leads!
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) November 23, 2025
Warm wishes to our phenomenal Women’s Blind Cricket Team on winning the inaugural T20 World Cup.
You stand tall as India’s pride, and an inspiration to the world! https://t.co/n0kVXhZkn5



















