செய்திகள் :

கோவையில் மகாருத்ர ஹோமம்: சங்கல்பித்த 48 நாள்களில் வேண்டுதல்கள் பலித்த அதிசயம்! சங்கல்பியுங்கள்

post image

கோவையில் மகாருத்ர ஹோமம்! சங்கல்பித்த 48 நாள்களில் வேண்டுதல்கள் பலித்த அதிசயம்! சங்கல்பியுங்கள்! ஜனவரி 2-ம் தேதி மார்கழி ஆருத்ரா அபிஷேக நன்னாளில் விகடன் வாசகர்கள் நல்வாழ்வுக்காக கோவை ஆர்.எஸ்.புரம் ஸ்ரீஅண்டவாணர் திருக்கோயிலில் மகாருத்ர ஹோமம் நடைபெற உள்ளது.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

ருத்ர ஹோமம்

மார்கழி என்றாலே இறைவனைக் கொண்டாடும் புண்ணிய மாதம் என்பார்கள். அதிலும் மார்கழியின் சிறப்பாக கொண்டாடப்படுவது ஆருத்ரா அபிஷேகமும் திருவாதிரை நன்னாளுமே. இந்த புண்ணிய நாள்களைக் கொண்டாடவும் வரும் 2026 புத்தாண்டை உங்களுக்கான அதிருஷ்ட ஆண்டாகவும் மாற்ற சிறப்பானதொரு வழிபாட்டு பரிகார ஹோமம் ஒன்றை நடத்த விரும்பினோம். அதற்காகவே ஹோமங்களில் சிறப்பான மகாருத்ர ஹோமத்தை செய்ய முடிவெடுத்தோம். அப்போது நினைவுக்கு வந்தது கோவை ஆர். எஸ். புரத்தில் உள்ள ஸ்ரீஅண்டவாணர் ஆலயம்.

சென்ற ஆண்டு 2024 ஜூலை 21-ம் நாள் இங்கு நடைபெற்ற மகாருத்ர ஹோமத்தில் கலந்து கொண்டவர்கள் பலரது வாழ்வில் பல அற்புதங்கள் நடைபெற்றன என்று வாசகர்களாலேயே சொல்லப்பட்டது உண்மை. வெகு பிரமாண்டமாக அப்போது நடைபெற்ற ஸ்ரீருத்ர ஹோமத்தில் கலந்து கொண்டவர்கள் பலரின் கடன் பிரச்னைகள் நீங்கின; திருமண வரன் தேடி வந்தன; நீங்காத நோய்கள் நீங்கின; வழக்குகள் தீர்ந்தன என்று பலராலும் அப்போது பேசப்பட்டது. அதனால் இந்த ஆண்டும் மார்கழி திருவாதிரை அபிஷேக நாளில் அதாவது ஜனவரி-2-ம் நாள் மகாருத்ர ஹோமம் நடத்த உள்ளோம்.

அரிதான அரிதான இந்த மகாருத்ர ஹோமம் பெரும் பொருட்செலவு செய்து செய்யக்கூடியது. அதிலும் இது கோயில் மற்றும் திருமடங்களில் மட்டுமே செய்ய வேண்டியது. அத்தகைய சிறப்பான ஸ்ரீருத்ர ஹோமம் கோவை ஆர்.எஸ்.புரம் ஸ்ரீஅண்டவாணர் திருக்கோயிலில் 2026 ஜனவரி 2-ம் தேதி மார்கழி ஆருத்ரா அபிஷேக நன்னாளில் லோக க்ஷேமத்துக்காகவும் சக்தி விகடன் வாசகர்கள் நல்வாழ்வுக்காகவும் நடைபெற உள்ளது. . சென்ற ஆண்டு வெகு பிரமாண்டமாக நடைபெற்ற இந்த ஹோமம் பலரின் வரவேற்பை பெற்றது. கோவை ஆர்.எஸ். புரத்தில் வசிக்கும் சிவஸ்ரீ செந்தில்குமார் அவர்கள், சேக்கிழார்பெருமான் காட்டிய வழியில் தனக்குச் சொந்தமான பூர்வீக இல்லத்தையே அண்டவாணர் அருட்துறை என்ற பெயரில் கோயிலாக அமைத்துள்ளார். இங்குள்ள அம்மையப்பருக்கு ஸ்ரீஅன்பில்பிரியாள் சமேத ஸ்ரீஸ்ரீ அண்டவாணர் பெருமான் என்பது திருநாமம். இவர்களுடன் மிகப்பெரிய வடிவில் ஸ்ரீ சிவகாமி உடனாய ஞானக்கூத்தப் பெருமான், சோமாஸ்கந்தர், மற்றும் 63 நாயன்மார்கள் என சிவாலய பரிவார தெய்வங்களைப் பிரதிஷ்டை செய்து நித்ய வழிபாடுகளை நிகழ்த்தி வருகிறார்.

ருத்ர ஹோமம்

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

இவர் அண்டவானப்பெருமானுக்கு வைரத்திருத்தேர் செய்து கோவையில் உலா வர வேண்டும் என்பது இவரது பல நாள் கனவு. இவரது கடைசி சொத்து வரை விற்று, பெரும் சிரமங்களுக்கு இடையே வரும் 2026 ஜனவரி 3-ம் தேதி மார்கழி திருவாதிரை நன்னாள் அதிகாலை தேரோட்டம் நடத்தவும் உள்ளார். தில்லைக்குப் பிறகு நடராஜப்பெருமான் வீதி உலா வருவது இங்கு மட்டுமே என்பதும் அதிசயம். வரும் டிசம்பர் 25-ம் தேதி தொடங்கவிருக்கும் ஸ்ரீஅண்டவாணர் திருவாதிரைத் திருவிழா அடுத்த 2026 ஜனவரி மாதம் 8-ம் தேதி வரை பல்வேறு அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெற உள்ளது. அதன் சிறப்பம்சமாக நடைபெறுவதே ஜனவரி 2 அன்று நடைபெறும் ஸ்ரீருத்ர ஹோமம். மார்கழி ஆருத்ரா அபிஷேக நன்னாளில் நடைபெறும் மகாருத்ர ஹோமத்தில் பங்குகொள்ள அனைவரையும் அழைக்கிறோம். இந்த ஸ்ரீருத்ர ஹோமத்தினால் பயம், கவலை போன்றவை நீங்கி, ஆயுள், ஆரோக்கியம், அபிவிருத்தி, ஐஸ்வர்யம் யாவும் பெருகும் என்பது உறுதி.

ஆண்டுக்கு ஒருமுறை ஸ்ரீருத்ர ஹோமத்தில் சங்கல்பித்தவர் வீட்டில் எந்த தீமைகளும் வராது. அவர் வேண்டுதலும் விருப்பமும் பலிக்கும் என்பதும் ஐதிகம். இந்த துடியான ருத்ர ஹோமத்தால் தீமைகள் விலகி முன்னேற்றம் உருவாகும். இதுவரை தடைப்பட்டிருந்த சகல காரியங்களும் நடைபெறும். வெற்றி வரும். உங்கள் கவலைகளும் அச்சங்களும் நீங்கி வாழ்வில் புதிய இன்பம் மலரும். வேதங்கள் போற்றும் ஸ்ரீருத்ர மந்திரம் ஒலிக்கும் இடத்தில் தோஷங்களும் பாவங்களும் நீங்கும். நிச்சயம் இந்த ஹோமத்தில் உங்கள் விருப்பங்களை சமர்ப்பித்து சங்கல்பம் செய்து கொண்டால் 48 நாளிலேயே நிறைவேறும் என்பது சென்ற ஆண்டு கலந்து கொண்ட வாசகர்களே சாட்சி என்று பெருமையாகச் சொல்வோம். எனவே நீங்களும் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு வாழ்வில் முன்னேற்றமும் சுபீட்சமும் பெறுங்கள்.

ருத்ர ஹோமம்

வாசகர்களின் கவனத்துக்கு!

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், சங்கல்பக் கட்டணம் (ரூ.500/-மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், இந்த வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும்.

அத்துடன், அவர்களுக்குப் பிரசாதமாக ஆகர்ஷண குங்குமம், விசேஷ ரட்சை, அட்சதை அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது, பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும். குறிப்பிட்ட நாளில் வாசகர்கள், சக்தி விகடன் முகநூல் பக்கத்தில் இந்த வழிபாட்டு வைபவங்களை வீடியோ வடிவிலும் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும

ருத்ர ஹோமம்


முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மறக்காமல் இந்த வழிபாட்டை செய்தால் உங்கள் கஷ்டங்கள் யாவும் தீரும்! சித்தர்கள் சொன்ன ராசி தீப வழிபாடு!

மறக்காமல் இந்த வழிபாட்டை செய்தால் உங்கள் கஷ்டங்கள் யாவும் தீரும்! சித்தர்கள் சொன்ன ராசி தீப வழிபாடு! 2025 டிசம்பர் 3-ம் புண்ணிய நாளில் நீங்களும் உங்கள் தலைமுறைகளும் நலமும் வளமும் பெற திருவண்ணாமலை அம்ம... மேலும் பார்க்க

தஞ்சையில் ஸ்ரீஐயப்ப ஆராதனை விழா: களப பூஜை; அத்தி மர ஐயப்பன்; விசேஷ படி பூஜை; கலந்து கொள்ளுங்கள்!

2025 நவம்பர் 29-ம் நாள் தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் சாலையில் உள்ள மங்களபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள 'அருள்மிகு சுந்தர விநாயகர் - ஸ்ரீதர்ம சாஸ்தா' ஆலயத்தில் அதிகாலை 6 மணி தொடங்கி இரவு 9 மணி வரை ஸ்ர... மேலும் பார்க்க

கவிஞர் பொன்மணி | கொடைக்கானலில் சுவாமி நிகழ்த்திய அற்புதம் | Sathya Saibaba 100th BirthDay Special

சத்தியசாய்பாபாவின் அவதரித்த 100 தின விழா உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் அவரின் பெருமைகளை நமக்கு எடுத்துச் சொல்கிறார் கவிஞர் பொன்மணி. 100th Day of Sathya Sai Baba’s Divine Advent | Spe... மேலும் பார்க்க

Sivapuranam | சிவபுராணம் - ஒவ்வொரு வார்த்தைக்கும் இவ்வளவு அர்த்தங்களா? | Secretes of Sivapuranam

மாணிக்க வாசகர் அருளிய சிவபுராணம் திருவாசகத்தில் முக்கியமான துதி. அதன் ஒவ்வொரு வார்த்தையும் பெரும் பொருள் உடையது. அப்படிப்பட்ட சிவபுராணத்தின் தன்மையையும் ரகசியங்களையும் நம்மோடு விரிவாகப் பேசுகிறார் காள... மேலும் பார்க்க

கேட்டாலே புண்ணியம்... தீய சக்திகள் விலகும்... தினமும் அவசியம் கேட்க வேண்டிய லலிதா சகஸ்ரநாமம்!

ஜகன்மாதாவான லலிதாம்பிகை உலக உயிர்கள் இன்புற்று வாழும் பொருட்டுத் தன்னுடைய நாமாவளிகளில் சிறந்தவற்றை வெளிப்படுத்த விரும்பினாள். அவளின் விருப்பத்தைப் புரிந்துகொண்ட, வாக் தேவியரான மோதினீ, சர்வேஸ்வரி, கௌலி... மேலும் பார்க்க

`சுவாமியே... சரணம் ஐயப்பா’ - ஐயப்ப பக்தர்கள் அவசியம் சொல்ல வேண்டிய 108 சரண கோஷம் | சபரிமலை

1. சுவாமியேசரணம் ஐயப்பா2. ஹரிஹர சுதனேசரணம் ஐயப்பா3. கன்னிமூல கணபதி பகவானேசரணம் ஐயப்பா4. சக்தி வடிவேலன் ஸோதரனேசரணம் ஐயப்பா5. மாளிகப்புரத்து மஞ்சம்மாதேவி லோகமாதவேசரணம் ஐயப்பா6. வாவர் சுவாமியேசரணம் ஐயப்ப... மேலும் பார்க்க