செய்திகள் :

'ஜெய் ஜகந்நாத்' கோஷம்... திரண்ட கிருஷ்ணபக்தர்கள்... சென்னையில் களைகட்டிய ரத யாத்திரை!

post image

உலகப் புகழ்பெற்ற பூரி ஜகந்நாத் யாத்திரை கடந்த 16 ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை ஒட்டி உலகெங்கும் உள்ள கிருஷ்ண பக்தர்கள் ஆங்காங்கே பூரி ஜகந்நாத் ரத யாத்திரையை நடத்தி வருகிறார். சென்னையில் நேற்று ஈ.சி.ஆரில் நடைபெற்ற பிரமாண்ட ஸ்ரீ ஜகந்நாத ரத யாத்திரை நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்று பஜனை செய்து மகிழ்ந்தனர்.

ரத யாத்திரை

சென்னை இஸ்கான் அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த யாத்திரை நேற்று பிற்பகல் 2:30 மணிக்குத் தொடங்கியது. ஸ்ரீ ஜகந்நாதர், பலதேவர் மற்றும் சுபத்ரா தேவி ஆகியோர் எழுந்தருளிய அலங்கரிக்கப்பட்ட ரதம், சின்ன நீலாங்கரையில் தங்கமயில் ஜுவல்லரி அருகில் இருந்து புறப்பட்டு இஸ்கான் கோயில் ஈ.சி.ஆர்., ஈஞ்சம்பாக்கத்தை சென்றடைந்தது.

செல்லும் வழி எங்கும் இருக்கும் குடியிருப்பு வாசிகள் இந்த யாத்திரையில் ஆர்வமுடன் பங்கேற்றனர். மேலும் ஹரிநாம சங்கீர்த்தனம், கீர்த்தனம் மற்றும் நடனத்துடன் ரத ஊர்வலம் நடைபெற்றது. புனித நாமங்களைப் பாடி, ரதத்தை இழுக்கும் புனித சேவையில் நேரடியாகப் பங்கேற்றனர். அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் இருந்த பகவானின் திருவுருவங்களை பக்தர்கள் ஆர்வமுடன் தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

ரத யாத்திரை

'ரதத்தை இழுப்பது வெறும் தேரை நகர்த்துவது அல்ல. பகவானை அன்புடன் நமது இதயத்திற்குள் அழைப்பது' என்பதுதான் இதன் தாத்பர்யம். 'பக்தர்களில் எந்த வேறுபாடும் இல்லை. அனைவரும் பகவான் கிருஷ்ணன் முன்பாக சமம்' என்பதை உணர்த்தும்விதமாக இந்த ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

மேலும் இதில் கலந்துகொண்ட பக்தர்களிடம் பேசியபோது, 'எல்லோராலும் பூரி ஜகந்நாதர் யாத்திரையில் கலந்துகொள்ள முடிவதில்லை. அப்படிப்பட்டவர்களின் வருத்தம் போக்கும்விதமாக சென்னையில் இந்த ரதயாத்திரை நடைபெறுகிறது. எனவே தவறாமல் இதில் கலந்துகொள்கிறோம்' என்றனர்.

இந்த விழாவில் பூஜ்யஸ்ரீ ஜயபதாகா ஸ்வாமி மகாராஜ் மற்றும் பூஜ்யஸ்ரீ பானு ஸ்வாமி மகாராஜ் ஆகியோர் கலந்துகொண்டு ஆசி வழங்கினர். கலந்துகொண்ட பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதங்களும் வழங்கப்பட்டன.

திருமணத் தடை நீக்கும் அற்புதமான சுயம்வர பார்வதி ஹோமம்! - நாளை சேலம் காவடி பழநி ஆண்டவர் சந்நிதியில்!

வாழ்க்கை அர்த்தப்படவும், வாழையடி வாழையாக வாரிசுகள் தொடர்ந்து வளரவும் திருமணம் ஒவ்வொருவருக்கும் அவசியமாகிறது. அழகு, திறமை, அந்தஸ்து, ஐஸ்வர்யம் எல்லாம் இருந்தும் சிலருக்குத் திருமணப் பாக்கியம் கிடைக்காம... மேலும் பார்க்க

The Secrets of Murugan Worship | அமெரிக்க பக்தைக்கு அற்புதம் நிகழ்த்திய திருப்புகழ் வரி | விஜயகுமார்

'அரோகரா' என்று பக்தியுடன் உச்சரிப்பதால் என்ன பலன்? திருப்புகழ் பாடுவதால் வாழ்க்கையில் நிகழும் ஆன்மிக மாற்றங்கள் என்ன? முருகப்பெருமானின் அருளைப் பெற பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய எளிய வழிமுறைகள், திரு... மேலும் பார்க்க

Kandhar Anuboothi- 1 | கிளியாய் மாறி அருணகிரிநாதர் கந்தர் அனுபூதி பாடியது எப்படி? | வாரியார் சுவாமி

திருமுருக கிருபானந்த வாரியாரின் தம்பி மகன் ஐயா வாதவூரன். பேச்சுக்கலையில் வாரியார் சுவாமிகளின் பரிபூரண ஆசியும் பெற்று உலகெங்கும் ஆன்மிக சொற்பொழிவுகள் ஆற்றிவருபவர். இந்த வீடியோவில் கந்தர் அனுபூதி குறித்... மேலும் பார்க்க

Sani Maha Pradosham | பரிகாரம் செய்ய நேரமில்லையா... இதைச் செய்யுங்கள்... ஈசனின் அருள் நிச்சயம்!

பிரதோஷவேளையில் செய்யும் சிவ வழிபாடும் நந்தி வழிபாடும் சிறப்பானது. அதிலும் சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் விசேஷமானது. அப்படிப்பட்ட சனிமகாபிரதோஷ நாளில் நாம் செய்யும் வழிபாடு எப்பேற்பட்ட பலன்களை வ... மேலும் பார்க்க

கால் பந்து விளையாட்டும் கடவுள் வழிபாடும்! - சுவாமி விவேகானந்தர்

இது கால்பந்து சீசன். கால்பந்து விளையாடுவது தெய்விகப் பிரார்த்தனைகளுக்கு இணையானது என்று சொன்னார் சுவாமி விவேகானந்தர். காரணம், நீங்கள் விளையாட்டில் முழுமையாக ஈடுபடாத வரை, உங்களால் கால்பந்து விளையாட முடி... மேலும் பார்க்க