செய்திகள் :

மின் இணைப்பு: திருப்பூர் மேயருக்கு ரூ.42,500 அபராதம் - மின்வாரியம் நடவடிக்கை ஏன்?

post image

திருப்பூர் தெற்கு கே.என்.பி. சுப்பிரமணிய நகரில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரின் வீடு உள்ளது. இந்த வீட்டைப் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதற்காக தற்காலிக மின் இணைப்புக் கேட்டு கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி தினேஷ்குமார் மின்வாரியத்தில் விண்ணப்பித்திருந்தார்.

அதற்குரிய கட்டணம் ரூ.16,935-த்தையும் மேயர் தினேஷ்குமார் தரப்பில் செலுத்தியதாக தெரிகிறது. ஆனால் தற்காலிக மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், வீடு புதுப்பிக்கும் பணிக்கு ஏற்கெனவே இருந்த வீட்டு மின் இணைப்பையே தினேஷ்குமார் பயன்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் தினேஷ்குமார் வீட்டில் ஆய்வு செய்தபோது, முன்னிருந்த வீட்டு மின் இணைப்பை பயன்படுத்தி புதுப்பிப்பு பணிகள் செய்யப்பட்டதை கண்டறிந்தனர். இதையடுத்து, அவர் பயன்படுத்திய மின்சாரத்துக்காக ரூ.42,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மேயர் தினேஷ்குமார்
திருப்பூர் மேயர் தினேஷ்குமார்

இதுகுறித்து மின்வாரிய கண்காணிப்புப் பொறியாளர் சுமதி கூறுகையில், “கடந்த 8-ஆம் தேதியே மேயர் தினேஷ்குமார் தற்காலிக மின் இணைப்புக்கு விண்ணப்பித்து பணம் செலுத்தியுள்ளார். ஆனால் மின்வாரிய தரப்பில் தற்காலிக மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே வீட்டு இணைப்பை பயன்படுத்தியதால், அவர் பயன்படுத்திய மின்சாரத்திற்கான தொகை விதிக்கப்பட்டுள்ளது,” என்றார்.

மேயர் தினேஷ்குமார் கூறும்போது,

“வீட்டைப் புதுப்பிக்கும் பணி மேற்கொண்டுள்ளேன். அதற்காக கடந்த அக்டோபர் மாதம் மின் இணைப்புக் கேட்டு மின்வாரியத்தில் விண்ணப்பித்திருந்தேன். அவர்கள் 8-ஆம் தேதி டிமாண்ட் கோரியிருந்தனர்.

நான் அக்டோபர் 13-ஆம் தேதி அதற்குரிய கட்டணத்தை செலுத்திவிட்டேன். எனினும் தற்காலிக மின் இணைப்பை வழங்கவில்லை. இந்நிலையில் வீடு புதுப்பிக்கும் பணிக்கு பயன்படுத்திய மின்சாரத்திற்கு தொகையை செலுத்தும்படி தெரிவித்தனர். அந்த தொகையை நான் செலுத்தினேன்,” என்றார்.

திருப்பரங்குன்ற மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம்; அரசின் மேல்முறையீட்டை கண்டிக்கும் பாஜக!

நேற்று (டிச.1) சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை "இந்த ஆண்டு முதல் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, கார்த்திகை ... மேலும் பார்க்க

``தேமுதிக தொண்டர்களை பதவியில் அமரவைத்து அழகு பார்க்க வேண்டுமென்பது என் ஆசை'' - பிரேமலதா விஜயகாந்த்

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன.அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூக... மேலும் பார்க்க

கோபி: அதிமுக கூட்டத்தில் தொண்டர் பலி; "ரூ.20 லட்சம் இழப்பீடு" - எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்'எனும் பெயரில் தமிழகம் முழுவதும் பிரசாரப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.அவ்வகையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை கோபிசெட்டிபாளையத்... மேலும் பார்க்க

திருப்பத்தூர் பேருந்து விபத்து: ஸ்டாலின் முதல் பிரேமலதா வரை இரங்கல்

காரைக்குடி - திருப்பத்தூர் சாலையில் பிள்ளையார்பட்டி அருகே காங்கேயத்திலிருந்து காரைக்குடி நோக்கி வந்த அரசுப்பேருந்தும், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் ம... மேலும் பார்க்க

Aadhaar Card: 2 கோடி ஆதார் கார்டுகள் நீக்கம்; மத்திய அரசு சொல்லும் காரணம் என்ன?

மத்திய அரசு ஆதார் தகவல்களை மாற்றியமைத்துள்ளது. இறந்துபோனவர்களின் லட்சக்கணக்கான ஆதார் எண்கள் அகற்றப்படாமல் இருந்துவந்தன. அதன் மூலம் உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் ஆள்மாறாட்டம் மற்றும் சட்டவிரோதமாக நலத... மேலும் பார்க்க

பான் கார்டு முதல் பென்சன் வரை: நெருங்கும் கடைசி தேதி; உடனே `இவற்றை' செஞ்சுடுங்க!

இந்த ஆண்டின் இறுதி மாதத்தை நெருங்கிவிட்டோம். சில நடைமுறைகளுக்கும் இறுதி நாள்கள் நெருங்குகின்றன. அவை என்னென்ன என்பதை வரிசையாக பார்த்துவிடலாமா? 1. பான் - ஆதார் இணைப்பு: வரும் டிசம்பர் 30-ம் தேதிக்குள் ப... மேலும் பார்க்க