செய்திகள் :

கோபி: அதிமுக கூட்டத்தில் தொண்டர் பலி; "ரூ.20 லட்சம் இழப்பீடு" - எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி

post image

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' எனும் பெயரில் தமிழகம் முழுவதும் பிரசாரப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

அவ்வகையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை கோபிசெட்டிபாளையத்தில் இப்பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அதிமுக தொண்டரான அர்ஜுன் (33) என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இன்று அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்திருக்கும் பழனிசாமி, "அதிமுகவிற்காக பல ஆண்டுகள் உழைத்த தொண்டர் அர்ஜுன். கோபிசெட்டிபாளையத்தில் அன்றைய அதிமுக கூட்டத்திற்கு வந்திருந்த அவர், கூட்டத்திற்கு முன்பாகவே வந்து நீண்ட நேரம் காத்திருந்து பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்ததால் மயங்கி விழுந்திருக்கிறார். அங்கிருந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்திருக்கிறார்.

இந்தத் தகவல் அறிந்து உண்மையிலேயே மிகவும் வருத்தப்பட்டிருக்கிறேன். இன்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி, அவரது தாயாருக்கு ஆறுதல் தெரிவித்தேன்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மேலும், கோபிசெட்டிபாளையம் அதிமுக மாவட்டம் சார்பாக ரூ.10 லட்சமும், அதிமுக தலைமை சார்பாக ரூ.10 லட்சமும் வழங்கவிருக்கிறோம். மகனை இழந்து வாடும் அர்ஜுனின் தாயாருக்கு இந்த இழப்பீடு தொகையைக் கொடுக்கிறோம்" என்று பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

திருப்பத்தூர் பேருந்து விபத்து: ஸ்டாலின் முதல் பிரேமலதா வரை இரங்கல்

காரைக்குடி - திருப்பத்தூர் சாலையில் பிள்ளையார்பட்டி அருகே காங்கேயத்திலிருந்து காரைக்குடி நோக்கி வந்த அரசுப்பேருந்தும், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் ம... மேலும் பார்க்க

Aadhaar Card: 2 கோடி ஆதார் கார்டுகள் நீக்கம்; மத்திய அரசு சொல்லும் காரணம் என்ன?

மத்திய அரசு ஆதார் தகவல்களை மாற்றியமைத்துள்ளது. இறந்துபோனவர்களின் லட்சக்கணக்கான ஆதார் எண்கள் அகற்றப்படாமல் இருந்துவந்தன. அதன் மூலம் உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் ஆள்மாறாட்டம் மற்றும் சட்டவிரோதமாக நலத... மேலும் பார்க்க

பான் கார்டு முதல் பென்சன் வரை: நெருங்கும் கடைசி தேதி; உடனே `இவற்றை' செஞ்சுடுங்க!

இந்த ஆண்டின் இறுதி மாதத்தை நெருங்கிவிட்டோம். சில நடைமுறைகளுக்கும் இறுதி நாள்கள் நெருங்குகின்றன. அவை என்னென்ன என்பதை வரிசையாக பார்த்துவிடலாமா? 1. பான் - ஆதார் இணைப்பு: வரும் டிசம்பர் 30-ம் தேதிக்குள் ப... மேலும் பார்க்க

``சேகர் பாபுவை சந்தித்துவிட்டுதான் செங்கோட்டையன் தவெக-வில் சேர்ந்தார்'' - பாஜக நயினார் நகேந்திரன்

அதிமுகவில் 50 ஆண்டுகளாக இருந்த மூத்த தலைவர் செங்கோட்டையன், கடந்த வியாழக்கிழமை (நவ. 27) அன்று பனையூரில் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.அன்றைய செய்தியாளர் சந்திப்பில், "தமிழ்நாடு அரசியலில் மாற்றம... மேலும் பார்க்க

பழைய குற்றாலம் அருவி: சீரமைப்பு பணிகள் எப்போது நிறைவடையும்? - சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்ப்பு

தென்காசி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் பழைய குற்றால அருவி அமைந்துள்ளது.இங்கு அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளப்பெருக்கு காரணமாக தடுப்புக் கம்பிகள், கழிவறைகள், தார் சாலைகள் முற்றிலு... மேலும் பார்க்க

Ditwah: தமிழகம் நோக்கி டிட்வா புயல்; எந்தெந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

வங்கக் கடலில் உருவாகியுள்ள 'டிட்வா' புயல் காரணமாக அடுத்த 2 நாள்களுக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, நாளை (நவம்பர் 29) ... மேலும் பார்க்க