Samantha: 'ஆழமான பிணைப்பை ஏற்படுத்தும்' - பூதசுத்தி விவாஹா முறையில் திருமணம் செய...
`வாட்ஸ்அப், டெலிகிராம், அரட்டை பயன்பாட்டுக்கு சிம் கார்டு கட்டாயம்' - புதிய விதிகள் என்ன சொல்கிறது?
வாட்ஸ்அப், டெலிகிராம், அரட்டை மொபைல் போன்ற செயலிகளை ஒரு முறை சிம் கார்டை கொண்டு பதிவிறக்கம் செய்து கொண்ட பிறகு அந்த சிம் கார்டை எடுத்துவிட்டாலும், வேறு சிம் கார்டு அல்லது இன்டர்நெட் மூலம் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியும். ஆனால் இது போன்ற ஒரு வசதியால் அடையாளம் தெரியாத நபர்கள் மோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து மத்திய அரசு புதிய விதிகளை கொண்டு வந்திருக்கிறது. இது தொடர்பாக கடந்த ஆண்டே டெலிகாம் சைபர் பாதுகாப்பு விதிகள் வெளியிடப்பட்டன. அந்த விதிகள் இப்போது மீண்டும் கடந்த மாத இறுதியில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த விதிகள் வரும் பிப்ரவரி மாதத்தில் இருந்து அமலுக்கு வர இருக்கிறது. இதன்படி இனி வாட்ஸ்அப் போன்ற செயலிகள் இனி சிம் கார்டு இல்லாமல் செயல்படாது என்று மத்திய அரசு அதில் குறிப்பிட்டுள்ளது.

நவம்பர் 28ஆம் தேதி இது தொடர்பாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு வெளியானதிலிருந்து அடுத்த 90 நாட்களுக்குள் சிம் கார்டு இல்லாமல் வாட்ஸ்அப் போன்ற செயலிகள் செயல்படுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று மொபைல் செயலி நிறுவனங்களுக்கு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேபோன்று, 6 மணி நேரத்திற்கு ஒரு முறை வாட்ஸ்அப் தானாகவே லாக் ஆவுட் ஆகிவிடும். அதன் பிறகு க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து மீண்டும் பயன்படுத்த முடியும். எனவே வாட்ஸ்ஆப், ஷேர்-ஷாட், ஸ்னாப்-ஷாட், அரட்டை, ஜியோசாட், சிக்னல் போன்ற செயலிகளைப் பயன்படுத்த மொபைல் போனில் சிம் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சிம் கார்டை ஒரு முறை எடுத்துவிட்டால் அதன் பிறகு அந்த மொபைல் போனில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது.

சைபர் குற்றங்களில் ஈடுபடும் கும்பல்கள் சிம் கார்டுகளை பயன்படுத்தாமல் இண்டர்நெட்டை மட்டும் பயன்படுத்தி வாட்ஸ்ஆப் கால்களில் பேசி மக்களை ஏமாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அத்தகைய மோசடிகளைத் தடுக்கும் நோக்கில் இத்திட்டம் அமலுக்கு வர இருக்கிறது.
சமீப காலமாக டிஜிட்டல் கைது மூலம் அதிக அளவில் பணமோசடி நடைபெற்று வருகிறது. இம்மோசடிக்கு வாட்ஸ்அப் வீடியோ கால்கள்தான் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
புதிய சேவையைப் பயன்படுத்தும் பயனாளிகள் தொடர்பான தகவல்களை செயலி நிறுவனங்கள் நான்கு மாதத்திற்குள் தொலைத்தொடர்பு துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.















