செய்திகள் :

"2026 தேர்தலில் இபிஎஸ்ஸின் துரோகத்திற்கு இறுதித் தீர்ப்பு எழுதப்படும்" - டிடிவி தினகரன் உறுதி

post image

அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் அக்கட்சியில் இருந்து விலகி அண்மையில் (நவ.27) தவெக-வில் இணைந்தார்.

அன்று சென்னையிலிருந்து கோபிசெட்டிபாளையத்துக்கு வந்த செங்கோட்டையனுக்கு அவரது ஆதரவாளர்கள் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். அப்போது, செங்கோட்டையன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாகத் தாக்கிப் பேசியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இதற்குப் பதிலடியாக எடப்பாடி பழனிசாமி கோபிசெட்டிபாளையத்திலேயே ஒரு கூட்டம் போட்டு, "கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால், அதையும் மீறி நீக்கப்பட்டவர்களுடன் சேர்ந்துகொண்டு அவர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் எனத் தலைமைக்கு 10 நாள் கெடு விதித்தார். அதனால்தான், அவரது பொறுப்பை எடுத்தோம்.

ஆனால், அவர் திருந்தியபாடில்லை. சீனியர் என்பதால் கண்டுகொள்ளாமல் இருந்தோம். உச்சமாக தேவர் ஜெயந்தியன்று கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்ஸைச் சந்தித்தார். அதனால்தான் தலைமைக்கழக நிர்வாகிகளுடன் பேசி, செங்கோட்டையனை நீக்கினோம். கடந்த மூன்று ஆண்டுகளாக கட்சிக்குள் இருந்து கொண்டு துரோகம் செய்தவர் செங்கோட்டையன்.

2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று கோபிசெட்டிபாளையத்தில்தான் வெற்றி விழா கொண்டாடப்படும்" என்று பேசியிருந்தார்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

செங்கோட்டையன் - எடப்பாடி பழனிசாமி இருவரின் இந்த மோதல்போக்குதான் கடந்த சில நாள்களாக தமிழக அரசியலில் பெரும் விவாதமாக வெடித்துக் கொண்டிருந்தது.

இந்நிலையில் இன்று, மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், "அமமுக 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. கூட்டணி குறித்து இனிதான் முடிவெடுக்க வேண்டும். அது நிச்சயம் வெற்றிக் கூட்டணியாக இருக்கும்.

2017-ஆம் ஆண்டு முதல் பழனிசாமி செய்த துரோகத்திற்கு இப்போது ஆண்டவன் தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மாவின் ஆட்சி தொடர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் அதிமுக தொண்டர்கள் பழனிசாமிக்கு ஆதரவளித்து வந்தனர். ஆனால் அதிமுகவை நாசம் செய்துகொண்டிருக்கிறார் பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார் டிடிவி தினகரன்.
டிடிவி தினகரன்

இரட்டை இலை சின்னத்தைத் தன் கையில் வைத்துக்கொண்டு அகம்பாவத்தில் ஆடிக்கொண்டிருக்கிறார். அண்ணா திமுக கட்சியை, எடப்பாடி பழனிசாமி திமுக கட்சியாக மாற்றிவிட்டார். 2026 தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மூலம் அவர் செய்த துரோகத்திற்கு இறுதித் தீர்ப்பு எழுதப்படும்" என்று பேசியிருக்கிறார் டிடிவி தினகரன்.

’உதயநிதி முதல்வராக வருவார்’ என்ற பிறகும் என்னை ஏற்க மறுக்கிறார்கள் – நாஞ்சில் சம்பத்

கருஞ்சால்வையை இழுத்துவிட்டபடி மேடையில் மைக் பிடித்து நின்றால், தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது வைகோவா நாஞ்சில் சம்பத்தா எனத் தெரியாது. அந்தளவு மதிமுக மேடைகளில் முக்கியத்துவம் பெற்று முழங்கி வந... மேலும் பார்க்க

``இந்தப் பிரச்னை குறித்து விவாதிப்போம்: இது நாடகமல்லவே" - பிரதமர் மோடிக்கு பிரியாங்கா காந்தி பதில்!

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் 15 அமர்வுகள் இருக்கும் எனக் கூறப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (... மேலும் பார்க்க

``இது நாடகத்துக்கான இடமல்ல... பேசுவதற்கான இடம்" - எதிர்க்கட்சிகளை விமர்சித்த பிரதமர் மோடி

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற அலுவலகம் வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது, "சில எதி... மேலும் பார்க்க

டிரம்ப்பின் நெருக்கடியில் இந்திய ரஷ்ய உறவுகள் - புடின் பயணம் எதை சாதிக்கும் ?

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)முன்னாள் ஆசிரியர், பிபிசி உலகசேவை, லண்டன்மணிவ... மேலும் பார்க்க

'தள்ளிப்போகும் தேதி' - SIR படிவத்தை சமர்ப்பிக்கும் தேதி நீட்டிப்பு; அவசரம் வேண்டாம் மக்களே

பெரும்பாலானோர் SIR படிவத்தை நிரப்பிக் கொடுத்திருப்பீர்கள். இன்னும் சிலர் சில சந்தேகங்களால் எஸ்.ஐ.ஆர் படிவத்தைக் கொடுக்காமல் வைத்திருக்கலாம். இன்னும் 4 நாள்கள் தானே உள்ளது என்கிற அவசரம் இனி உங்களுக்கு ... மேலும் பார்க்க

``கஜானா சாவி என்னிடம்தான், எங்களுக்கு ஓட்டுப்போட்டால்தான் நிதி'' - தேர்தல் பிரசாரத்தில் அஜித்பவார்

மகாராஷ்டிராவில் நாளை உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொள்ளாமல் ஒதுங்கிக்கொண்ட நிலையில் ஆளும் கட்சி தலைவர்கள்தான் ஒவ்வொரு இடமும் சென்று தீவிர பிரசாரம் ... மேலும் பார்க்க