செய்திகள் :

அடுத்தடுத்து 2 திருமணங்கள்; நகை, பணம் மோசடி; தலைமறைவான இளம்பெண் - நடந்தது என்ன?

post image

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜீவ்நகரைச் சேர்ந்தவர் கார்த்திகா. இவருக்கும், தஞ்சாவூர் மாவட்டம், உப்புண்டார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சித்தார்த்தன் என்பவருக்கும் கடந்த 13.09.2026 அன்று தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.  இடைத்தரகர்கள் மூலமாக பெண் பார்க்கப்பட்டு, சித்தார்த்தன் கார்த்திகாவைத் திருமணம் செய்துள்ளார். இதற்காக இடைத்தரகர்களுக்கு ரூ.3 லட்சம் பணம் கொடுத்ததுடன், மணப்பெண்ணுக்கு 3 பவுன் தங்க நகைகளையும் மாப்பிள்ளை சித்தார்த்தன் தரப்பினர் வழங்கியுள்ளனர்.

முதல் கணவர் சித்தார்த்துடன் கார்த்திகா

மேலும், சுமார் ரூ.15 லட்சம் செலவு செய்து திருமணத்தை மிகவும் பிரமாண்டமாகவும் நடத்தியுள்ளனர். திருமணம் முடிந்த இரண்டாவது நாளில், தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவரைப் பார்த்துவிட்டு வருவதாகவும் கார்த்திகா கூறியுள்ளார். இதனை நம்பிய புதுமாப்பிள்ளை சித்தார்த்தன், அவரை அனுப்பி வைத்ததுடன், மருத்துவச் செலவுக்காகப் பணமும் கொடுத்துள்ளார். ஆனால், அதன்பிறகு கார்த்திகா ஊருக்குத் திரும்பி வரவில்லை. ஒவ்வொரு முறையும் சித்தார்த்தன், கார்த்திகாவையும் அவரது பெற்றோர் என்று கூறியவர்களையும் தொடர்புகொண்டு கேட்டபோது, இன்று வந்துவிடுவார், நாளை வந்துவிடுவார் எனக் கூறி சமாளித்து வந்துள்ளனர்.

தலைத் தீபாவளி என்பதால் மனைவியை வருமாறு சித்தார்த்தன் அழைத்தபோதும், மருத்துவமனை, சிகிச்சை எனத் தொடர்ந்து காரணங்களைக் கூறி வந்துள்ளாராம்.  இதனால் பொறுமையிழந்த சித்தார்த்தன், தனது உறவினர்களுடன் கோவில்பட்டியில் உள்ள கார்த்திகாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு கார்த்திகா இல்லை. அவரது பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாததால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ரத்தம் வாங்குவதற்காக கார்த்திகா மதுரைக்குச் சென்றிருப்பதாகவும், கார்த்திகாவின் பெற்றோர் என்று கூறிய முனீஸ்வரி - மாரியப்பன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

முதல் திருமணத்தில்

அப்போது, நாமக்கல் மாவட்டம் பூச்சத்திரம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர், தனது மனைவி கார்த்திகா எங்கே என்று கேட்டு அங்கு வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சித்தார்த்தன் குடும்பத்தினர், நீங்கள் கார்த்திகாவின் கணவரா? என்று கேட்டுள்ளனர். அதற்கு ரஞ்சித்குமார், ஆம் என்றும், கடந்த 01-11.2026 ம் தேதி தங்கள் ஊரில் உள்ள கோயிலில் தனக்கும் கார்த்திகாவுக்கும் திருமணம் நடைபெற்றதாகவும் கூறியுள்ளார். இதைக்கேட்ட சித்தார்த்தன் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

இதையடுத்து, ரஞ்சித்குமார் நீங்கள் யார் என்று திரும்பக் கேட்க, கடந்த செப்டம்பர் மாதம் கார்த்திகாவுக்கும் தனக்கும் திருமணம் நடைபெற்றதாக அவர் தெரிவித்துள்ளார். அப்போதுதான் ஒரே பெண் இரண்டு பேரைத் திருமணம் செய்து இரு தரப்பினரும் ஏமாற்றப்பட்டிருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இரு மாப்பிள்ளைகளும், கார்த்திகாவின் பெற்றோர் என்று கூறி பெண் பார்ப்பது முதல் திருமணம் வரை உடனிருந்த முனீஸ்வரி - மாரியப்பனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

பெற்றோர் எனக்கூறிய புரோக்கர்களுடன் கார்த்திகா - ரஞ்சித்குமார்

அதற்கு முனீஸ்வரி, மிகவும் சாதாரணமாக, அவளுக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டாள். நாங்கள் என்ன செய்ய முடியும்? நீங்கள் வேண்டுமானால் காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள். அங்கு வந்து நாங்கள் பதில் சொல்கிறோம் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இரு மாப்பிள்ளைகளும் அந்த வீட்டிற்குள் அமர்ந்ததுடன், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.  கார்த்திகாவின் பெற்றோர் எனக் கூறியவர்கள், இரு மாப்பிள்ளை வீட்டாரிடமும் தங்களது உண்மையான பெயர்களைக் கூறாமல் வேறு பெயர்களைக் கூறி அவர்கள் ஏமாற்றியிருப்பது தெரியவந்தது.

கார்த்திகா யார் என்று போலீஸார் விசாரித்தபோது, அவர் முனீஸ்வரியின் அக்கா மகள் என்றும், தற்போது மலேசியாவில் இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதனால் இரு மாப்பிள்ளை வீட்டாருக்கும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி ஏற்பட்டது. முதலில் போலீசாரிடம் தன்னை புரோக்கர் என்று கூறிய மாரியப்பன், சிறிது நேரத்திற்குப் பிறகு முனீஸ்வரிக்கு தான்தான் கணவர் என்று தெரிவித்துள்ளார்.

மேற்கு காவல் நிலையம் கோவில்பட்டி

பெற்றோரும் போலி, அம்மா - அப்பாவும் போலி. எல்லாம் சரி, திருமணப் பெண் எங்கே? என்று போலீசார் கேட்டபோது, அவர் ரத்தம் வாங்குவதற்காக மதுரைக்குச் சென்றிருப்பதாக முனீஸ்வரி தெரிவித்துள்ளார். சித்தார்த்தன் மற்றும் ரஞ்சித்குமார் அளித்த புகார்களின் அடிப்படையில், கார்த்திகா, மாரியப்பன், முனீஸ்வரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார்த்திகா தற்போது எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை.

இதற்கிடையில் மதுரையைச் சேர்ந்த ஒருவருக்கும் கார்த்திகாவைத் திருமணம் செய்து வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இடைத்தரகர்கள் மூலமாக கார்த்திகாவின் புகைப்படத்தை மாப்பிள்ளை வீட்டாருக்கு அனுப்பி வைப்பது மட்டுமின்றி, பெண் பார்க்க வருபவர்களை கோவில்பட்டியில் உள்ள ஏதாவது ஒரு கோயிலுக்கு வரவழைத்து கார்த்திகாவைப் பார்க்க வைப்பதும் இந்தக் கும்பலின் வழக்கமாக இருந்துள்ளது. 

முதல் கணவருடன் கார்த்திகா

கார்த்திகா, முனீஸ்வரி, மாரியப்பன் ஆகிய மூவர் மட்டுமே இத்தகைய மோசடியில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை என்றும், இவர்களுக்குப் பின்னால் மிகப்பெரிய மோசடி நெட்வொர்க் செயல்பட்டிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.  கார்த்திகா பிடிபட்ட பின்னரே உண்மையில் அவர் பெயர் அதுதானா? இல்லையா என்பதும்,இதுகுறித்து முழுமையான விசாரணை முடிவடைந்த பின்னரே இந்தத் திருமண மோசடியின் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளிவரும்.

ஈரோடு: பள்ளி மாணவிகள் 4 பேருக்கு பாலியல் தொல்லை; போக்சோ வழக்கில் கைதான சமூக அறிவியல் ஆசிரியர்!

ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையத்தை சேர்ந்தவர் 45 வயதான விஜயசாரதி. ஈரோட்டில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி ஒன்றில் சமூக அறிவியல் ஆசிரியராயாக பணியாற்றி வந்திருக்கிறார். பள்ளியில் பயிலும் 13 வயது மாணவிகள் நால... மேலும் பார்க்க

"என் சாவுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ தான் காரணம்"- கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த டிரைவர்!

கன்னியாகுமரி அருகே வட்டக்கோட்டை - பால்குளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் சுதாகர். லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த... மேலும் பார்க்க

`புதுக் காதலனுடன் தனிமையில் சந்தித்ததால் ஆத்திரம்’ - திருப்பத்தூர் இரட்டைக் கொலையில் `திடுக்’ தகவல்

திருப்பத்தூர் மாவட்டம், திப்பசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவருக்கும், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் திரு.வி.க நகரைச் சேர்ந்த மாலினி என்பவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ... மேலும் பார்க்க

காதல் விவகாரத்தில் சந்தேகம்; பள்ளி மாணவியைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற இளைஞர் - நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகிலுள்ள செபத்தையாபுரம், சோலைபுதூர் வேதமாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காசிபாண்டியன். இவரது மகன் முத்துராஜ். இவர் செபத்தையாபுரம் பகுதியில் உள்ள ஒரு வெல்டிங் பட்டற... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: நகைக்காக தாயைக் கொன்ற மகள் கைது - ஆண் நண்பரிடமும் போலீஸ் தீவிர விசாரணை!

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்திருக்கும் தென்கடப்பந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த 54 வயதான பெண் கீதா. இவரது கணவர் ரவி, லாரி ஓட்டுநராக சென்னையில் வேலைச் செய்து வருகிறார். இவர்களுக்கு சரண்யா, சுக... மேலும் பார்க்க

ரயில் பெட்டிக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை... கொலை - தனியாகச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து கடந்த 11-ம் தேதி நாகர்கோவில் வந்த பயணிகள் ரயிலில் ஹேண்ட்ப்ரேக் பழுதானதால் சரி செய்வதற்காக ரயில் நிலைய யார்டில் நிறுத்தி சரி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோட... மேலும் பார்க்க