செய்திகள் :

'அதானிக்காக பரந்தூரை காலி செய்ய வேண்டாமென ஸ்டாலினிடம் வலியுறுத்தினோம்... ஆனால்!'- அமைச்சர் வன்னிஅரசு

post image

நேற்று சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் '110' விதியின் கீழ் பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இந்நிலையில் பரந்தூரை சேர்ந்த விவசாயிகள் இன்று முதல்வர் விஜய்யை சந்தித்து நன்றி கூறியிருந்தனர். முதல்வரை சந்தித்துவிட்டு அமைச்சர் வன்னிஅரசுவையும் சந்தித்து பேசியிருந்தனர். விவசாயிகளுடனான சந்திப்பு முடிந்ததற்கு பிறகு அமைச்சரிடம் பரந்தூர் விவகாரம் குறித்து பேசினோம்.

வன்னி அரசு
வன்னி அரசு

அமைச்சர் வன்னி அரசு பேசியதாவது, ``இது பெரும் மகிழ்ச்சியான நாள். நான்காண்டுகளாக பரந்தூர் மக்கள் தங்களின் நிலத்தை விட்டுக் கொடுக்கமாட்டோம் என போராடிக் கொண்டிருந்தனர். அவர்களின் போராட்டம் வென்றிருக்கிறது. நான்காண்டுகளாக அந்த மக்கள் பெருந்துயருக்கும் இன்னலுக்கும் ஆளாகியிருந்தனர்.

பரந்தூருக்குள் யாரும் எளிதில் நுழைந்துவிட முடியாது. சொந்த ஊருக்குள் நுழைய அந்த மக்களிடம் காவல்துறை ஆதார் கார்டு கேட்டது. அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க செல்கையில் எங்களையே விடமாட்டார்கள். நாங்களே டூவிலரில்தான் செல்வோம். வளர்ச்சி என்ற பெயரில் மக்களை விரட்டியடிப்பதுதான் வளர்ச்சியா? நம்முடைய மக்களை சொந்த ஊரிலேயே அகதி ஆக்கிவிட்டு, வெளிமாநிலத்துக்காரர் யாருக்கோ விமான நிலையத்தை கொடுப்பது தரகு வேலைதானே?

வன்னி அரசு
வன்னி அரசு

இதை முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடமே கூறினோம். அதானிக்காக நம் மக்களை ஏன் விரட்ட வேண்டும்? அவருக்காக கால்வாய், ஏரிகள் என நீர் நிலைகள் நிறைந்த பரந்தூரை ஏன் காலி செய்ய வேண்டும்? எனக் கேட்டோம். அவர்களுடன் கூட்டணியில் இருந்த போதிலும் எங்களுக்கு மக்களின் நலனே முக்கியமாகப்பட்டது. பரந்தூரில் விமானம் நிலையம் இல்லாமல் போனால் தமிழ்நாடு வளர்ச்சியே பெறாது என்பது பாஜகவின் நரேட்டிவ். ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரங்கள்தான் இப்படி பேசிக் கொண்டிருக்கின்றனர். தேசப்பற்று, வளர்ச்சி என்பதற்கு எதிராக பேசினால் நக்சல் என முத்திரை குத்துகிறார்கள். திமுகவும் முன்பிருந்தே இந்தத் திட்டத்தில் உறுதியாக இருந்தது. அவர்கள் பிடிவாதமாக இருந்தார்கள். ஆனால், இப்போதைய முதல்வர் மக்களின் எண்ணங்களை உணர்ந்து சரியான முடிவை எடுத்திருக்கிறார்' என்றார்.

மணல் கடத்தலில் ரூ.1000 கோடி ஊழல்? - மராத்தா இட ஒதுக்கீடு போராட்டக்காரர் மனோஜ் ஜராங்கே மீது புகார்

மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருபவர் மனோஜ் ஜராங்கே பாட்டீல். ஏற்கனவே பல முறை இதற்காக உண்ணாவிரதம் இருந்துள்ளார். தற்போது மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது மனோ... மேலும் பார்க்க

"தியாகி இமானுவேல் சேகரன், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக தன் உயிரைத் தந்தவர்" - குடியரசு துணைத்தலைவர்

"தியாகி இமானுவேல் சேகரனைப் போன்ற தேசிய உள்ளம் கொண்ட மகத்தான மனிதர்களைப் போற்றுவது இந்தத் தேசத்திற்கே பெருமை" என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.இமானுவேல் சேகரன் நினைவிடம்வி... மேலும் பார்க்க

“சுயநலத்தை மறுத்து நாட்டின் நலனைப் பார்த்தால் தடை?” - BRICS-ல் ட்ரம்ப் மீது புதின் மறைமுகத் தாக்கு!

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். இந்தியப் பிரதமர் மோடி உடனான தனிப்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, பிரிக்ஸ் வணிக மன்றத்தின் தலைவர்கள் அமர்வில் ப... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் அசைவ உணவு சர்ச்சை: கோயிலில் மீன் வறுவல் சாப்பிட்ட முதல்வர்; என்ன சொல்கிறது பாஜக?

நாட்டின் பிற பகுதிகளில், கோவிலில் அசைவ உணவு உண்பது அனுமதிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் சில கோயில்களில் அசைவ உணவு போடப்படுகிறது. கோயில்களில் அசைவ உணவுக்கு இருக்கும் நடைமுறையை மாற்றும் ... மேலும் பார்க்க

BRICS: "ஒரு நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பும், பிராந்தியப் பாதுகாப்பும் தனித்தனியல்ல" - ஈரான் அதிபர்

டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் பல்வேறு உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள். அதில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் ஒருவர். இன்று மாநாட்... மேலும் பார்க்க

"பிரிக்ஸ் தொழில்முறைக் கவுன்சிலிடம் எனக்கு 'மூன்று' வேண்டுகோள்கள்!" - BRICS மாநாட்டில் மோடி பேச்சு

தற்போது டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு பிரிக்ஸ் தலைமை சுழற்சி முறையில் இந்தியாவிற்கு வந்துள்ளதால், இந... மேலும் பார்க்க