செய்திகள் :

`அதிக நாள் இருக்க மாட்டார்' - மூத்தவருடன் நேரம் செலவிட வந்து, டெல்லி தீ விபத்தில் பலியான 8 பேர்

post image

டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள மால்வியா நகரில் ஹோட்டல் ஒன்றில் நேற்று திடீரென தீப்பிடித்துக்கொண்டதில் 21 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அவர்களில் அதிகமானோர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆவர். இந்த தீவிபத்தில் குருகிராமை சேர்ந்த ஆடிட்டர் விவேக் அகர்வால் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தீவிபத்து ஏற்பட்ட ஹோட்டலுக்கு அருகில் இருக்கும் மேக்ஸ் மருத்துவமனையில் விவேக் அகர்வாலில் தந்தை ராதேஷ்யாம்(75) சிகிச்சை பெற்று வந்தார். அவரை காண உறவினர்கள் வந்திருந்தனர். ராதேஷ்யாம் அதிக நாட்களுக்கு உயிரோடு இருக்க வாய்ப்பு இல்லை என்று டாக்டர் தெரிவித்துவிட்டார். இதையடுத்து அவர் உயிரோடு இருக்கும் சில நாட்களில் அதிகமான நேரத்தை அவருடன் செலவிட அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

இதற்காக குடும்ப உறுப்பினர்கள் ராஜஸ்தான், பெங்களூரு மற்றும் குர்கானில் இருந்து டெல்லிக்கு வந்து மருத்துவமனையில் இருந்தனர். ராதேஷ்யாமின் மனைவி பிரேம்லதா (75), மகன் விவேக் (48), மருமகள் தர்ஜனி (47), பேத்தி வர்யா, முத்து (16) ஆகியோர் குர்காவில் இருந்து வந்திருந்தனர்.

அவரது மூத்த பேத்தி ஜிவிஷா (20) சம்பவத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு பெங்களூரில் இருந்து விமானம் மூலம் வந்திருந்தார். அவர்கள் அனைவரும் தீ விபத்தில் பலியாகிவிட்டனர். ஜிவிஷா பெங்களுருவில் பிடெக் படித்து வந்தார்.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் இருந்து வந்த பிரேம்லதாவின் சகோதரி கம்லா, அவரது சகோதரர் அசோக் மற்றும் மைத்துனர் ஜாவேரி ஆகியோரும் அந்த ஹோட்டலில் தங்கியுள்ளனர். அவர்கள் முன்னதாகவே வீடு திரும்ப திட்டமிட்டிருந்தனர், ஆனால் அவர்கள் தங்கியிருப்பதை நீட்டிக்க குடும்பத்தினர் அவர்களை வற்புறுத்தினர். கமலா மற்றும் அசோக் தீயில் இறந்தனர். ஜாவேரி இன்னும் காணவில்லை. இது குறித்து ராதேஷ்யாமின் உறவினர் ஒருவர் கூறுகையில்,"சில நாட்களாக நாங்கள் இங்கு இருந்தோம், அப்போது ராதேஷ்யாமின் அதிக நாட்கள் உயிரோடு இருக்கமாட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து குடும்பத்தினர் அவருடன் முடிந்தவரை அதிக நேரம் செலவிட முடியும் என்று கருதி அருகில் உள்ள ஹோட்டலில் அறைகள் முன்பதிவு செய்திருந்தோம்" என்று 59 வயதான லதா அகர்வால் கூறினார். இந்த சோகம் குறித்து குடும்பத்தினர் இதுவரை சிகிச்சை பெற்று வரும் ராதேஷ்யாமிற்கு தெரிவிக்கவில்லை. இப்போது குடும்பத்தில் ராதேஷ்யாம் மட்டும் உயிரோடு இருக்கிறார்.

பீகார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அதிகாலையில் தீ விபத்து: 4 நோயாளிகள் உயிரிழப்பு

டெல்லியில் நேற்று ஹோட்டலில் தீவிபத்து ஏற்பட்டு 21 பேர் உயிரிழந்த நிலையில், இன்று பீகார் மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பீகாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 நோய... மேலும் பார்க்க

பள்ளிக்கரணையில் பயங்கர தீ: காவல்துறையினர் பறிமுதல் செய்த வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தீ விபத்து!

சென்னை பள்ளிக்கரணையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எங்கு? பள்ளிக்கரணையில் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது... மேலும் பார்க்க

ஹெலிகாப்டர் விபத்து: `6 மணி நேரம் என் மார்பில் கிடந்தார்'- திருமணமான சில மணி நேரத்தில் பலியான மணமகன்

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டாவில், திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மணமகன் மற்றும் ஹெலிகாப்டர் பைலட் ஆகிய இருவர் பரிதாபமாக உய... மேலும் பார்க்க

மியான்மரை அதிர வைத்த வெடிவிபத்து: கட்டடம் தரைமட்டமாகி குழந்தைகள் உட்பட 45 பேர் பரிதாப பலி!

மியான்மர் நாட்டின் எல்லையோரக் கிராமம் ஒன்றில் உள்ள ஒரு பெரிய கட்டடத்தில், திடீரென ஏற்பட்ட வெடிவிபத்து ஒட்டுமொத்த உலகையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுரங்க வேலைகளுக்காக அந்தப் பெரிய கட்டடத்திற்குள்... மேலும் பார்க்க

கேரளம்: பொழுதுபோக்கு பூங்கா ராட்டின விபத்து; காயம் அடைந்தவர்கள் குப்பை எடுக்கும் வாகனத்தில் மீட்பு?

கேரள மாநிலம் திருவனந்தபுரம் வெம்பாயம் பகுதியில் ஹேப்பிலேண்ட் கேளிக்கை பூங்கா உள்ளது. அங்கு விடுமுறையில் ராட்டினங்கள் உள்ளிட்டவற்றில் பொழுதுபோக்கவும் கேரளம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்... மேலும் பார்க்க

புனே: லிப்ட் கதவில் 1.5 மணி நேரம் சிக்கி 7 வயது சிறுவன் உயிரிழப்பு; என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள சின்காட் ரோடு பகுதியில் உள்ள ரித்தி சித்தி குடியிருப்பு கட்டிடத்தில் சைலேஷ்(7) என்ற சிறுவன் தனது பெற்றோடு வசித்து வந்தான். அவன் கட்டிடத்திற்குக் கீழே வந்து தனது நண்பர... மேலும் பார்க்க