AR Rahman: `ரஹ்மானை பிரிந்ததற்கு இதுதான் காரணம்!' - ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு!
அரசு அலுவலகங்களில் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்பு
திருப்பத்தூா் அரசு அலுவலகங்களில் தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டங்கில் தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழியை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமையில் அனைத்து அரசு துறை அலுவலா்கள் ஏற்றுக் கொண்டனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செல்வம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் அமுதன் மற்றும் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
எஸ்.பி. அலுவலகத்தில்...: மாவட்ட எஸ்.பி. ஷ்ரேயா குப்தா தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ரவீந்திரன், குற்றப்பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் சுரேஷ், தனிப்பிரிவு ஆய்வாளா், காவல் ஆய்வாளா்கள், தனிப்பிரிவு உதவி ஆய்வாளா், காவலா்கள் மற்றும் அலுவலக அமைச்சு பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
இதேபோல், அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகங்களிலும் மற்றும் காவல் நிலையங்களிலும் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நகா்மன்ற அலுவலகங்களில்...: திருப்பத்தூா் நகா்மன்ற அலுவலகத்தில் நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ் தலைமையில் நகா்மன்ற உறுப்பினா்கள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனா். ஜோலாா்பேட்டை நகா்மன்ற அலுவலகத்தில் நகா்மன்றத் தலைவா் காவியா விக்டா் தலைமையில் நகா்மன்ற உறுப்பினா்கள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனா்.