செய்திகள் :

"ஆடம்பர செட்கள், பெரிய பட்ஜெட்கள், மார்க்கெட்டிங்" - பாலிவுட் சினிமா குறித்து பிரகாஷ் ராஜ் காட்டம்

post image

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஜனவரி 22-ம் தேதி தொடங்கிய கேரள இலக்கியத் திருவிழா நேற்று (ஜன.27) முடிவடைந்தது.

இதில் கலந்துகொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ் பாலிவுட் சினிமாவை விமர்சித்துப் பேசியிருக்கிறார்.

பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ்

"பாலிவுட் சினிமா அதன் ஆன்மாவை இழந்துவிட்டது. அவை இப்போது மெழுகு அருங்காட்சியகத்திலுள்ள பிளாஸ்டிக் சிலைகளைப் போல இருக்கின்றன. பார்க்க அழகாக இருக்கும், ஆனால் அவற்றில் உயிர் இருக்காது.

இன்றைய இந்திப் படங்கள் வெறும் ஆடம்பர செட்கள், பெரிய பட்ஜெட்கள் மற்றும் மார்க்கெட்டிங் மூலம் பணம் சம்பாதிப்பதில் மட்டுமே குறியாக இருக்கின்றன.

அவற்றில் கதைக்கோ அல்லது உணர்வுகளுக்கோ இடமில்லை. தென்னிந்திய சினிமாக்களை குறிப்பாக தமிழ் மற்றும் மலையாளப் படங்களைப் பாருங்கள், அவை இன்னும் மண்ணின் வாசனையோடு இருக்கின்றன.

நடிகர் பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ்

சாமானிய மக்களின் வாழ்க்கையையும், சமூகப் பிரச்னைகளையும் அவை தைரியமாகப் பேசுகின்றன.

'ஜெய் பீம்', 'மாமன்னன்' போன்ற படங்கள் சமூக மாற்றத்திற்காகக் குரல் கொடுக்கின்றன. ஆனால் பாலிவுட் இன்னும் வணிக வலையில் சிக்கிக்கிடக்கிறது" என்று விமர்சித்திருக்கிறார்.

Aamir Khan: "நான் விவாகரத்து செய்ததற்கு அதுவும் ஒரு காரணம்" - ஆமீர் கான் ஓப்பன் டாக்

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் இரண்டு முறை விவாகரத்து ஆனவர். தற்போது நேர்காணல் ஒன்றில் தனது வெற்றி தோல்விகள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.சமீபத்தில் பத்திரிகை ஆசிரியர் ராஜ் ஷாமானியுடனான உரையாடலில்... மேலும் பார்க்க

Mouni Roy: "'சார் உங்களின் கையை எடுங்கள்' எனச் சொன்னதால் ஆபாச வார்த்தையில் திட்டினர்!" - மெளனி ராய்

பல்வேறு பாலிவுட் படங்களில் நடித்த மௌனி ராய், தமிழ் மக்களுக்கு 'நாகினி' தொடர் மூலம் பெரியளவில் பரிச்சயமானார். சமீபத்தில் அவர் பங்கேற்ற நிகழ்வு ஒன்றில், அவருக்கு ஏற்பட்ட மோசமான சம்பவத்தை அவருடைய இன்ஸ்டா... மேலும் பார்க்க

Sikandar: "முதலில் கதை சுவாரஸ்யமானதாக இருந்தது; ஆனால், பிறகு நடந்தவை.!" - ராஷ்மிகா மந்தனா

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடந்தாண்டு 'மதராஸி', 'சிக்கந்தர்' என இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'மதராஸி' படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. ஆனால் பாலிவுட் படமான 'சிக்... மேலும் பார்க்க

``அதிகாரத்தில் இருப்பவர்கள் மௌனம் காப்பதும் கவலையளிக்கிறது" - ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கனிமொழி ஆதரவு

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பாலிவுட் குறித்துப் பேசியிருந்தார். அவரின் பேட்டி சமூக ஊடகங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து, பாலிவுட் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தவறாகப் பேசிய... மேலும் பார்க்க

``ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து அவருக்கு பொருத்தமானதல்ல" - தஸ்லிமா நஸ்ரீன்

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில், பாலிவுட் குறித்து பேசியிருந்தார். அவரின் பேட்டி சமூக ஊடகங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து, பாலிவுட் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தவறாக பேசியிர... மேலும் பார்க்க

"என் மகள் கட்டாயப்படுத்தினார்" - முன்னாள் மனைவி, பிள்ளைகளோடு மராத்தானில் பங்கேற்ற ஆமீர் கான்!

மும்பையில் நேற்று டாடா மராத்தான் போட்டி நடந்தது. இதையடுத்து தென்மும்பையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இப்போட்டியில் பங்கேற்க வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தடகள வீரர்கள், வீராங்கனைகள... மேலும் பார்க்க