செய்திகள் :

'ஆம் ஆத்மி மாடல்; தவெகவுக்கு 2 கோடி ஓட்டு இருக்கு! - தவெகவின் 'பலே' கணக்கு!

post image

தவெகவின் செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மகாபலிபுரத்தில் நடந்து வருகிறது. இந்த நிகழ்வில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பேசியவை.

நிர்மல் குமார்
நிர்மல் குமார்

அவர் பேசியதாவது, '1977 யைப் போல 2026 லும் ஆட்சிமாற்றம் ஏற்படும். சமீபத்தில் திமுகவுக்காக வேலை செய்பவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர், 'உங்களுக்கு (தவெக) எவ்வளவு வாக்கு கிடைக்கும்?' என்றார். 'நீங்களே சொல்லுங்கள். எங்களுக்கு எவ்வளவு வாக்குகள் இருக்கிறது?' என்றேன். அவர், 'வீட்டுக்கு ஒரு வாக்கு இருக்கிறது' என்றார்.

தமிழ்நாட்டில் 2.25 லட்சம் ரேஷன் அட்டைகள் உள்ளது. வீட்டுக்கு ஒரு ஓட்டு என 2 கோடி வாக்குகள் கிடைத்தாலும் நமக்கு 40% க்கும் மேல் வாக்கு கிடைத்துவிடும். கரூர் சம்பவத்தின் போது தலைவர் தவித்த தவிப்பை எங்களால் மறக்கவே முடியாது. ஒரு நல்லவர் அரசியலுக்கு வந்திருக்கிறார். இந்தியாவுக்கே முன்னுதாரணமான அரசாக 2026 இல் ஒரு அரசு அமையும்' என்றார்.

அருண்ராஜ்
அருண்ராஜ்

கொள்கைப்பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் பேசியதாவது, ''விசில் எப்போது அடிப்பார்கள். போட்டியில் எதாவது தவறு நடக்கையில்தான் விசில் அடிப்பார்கள். இந்த ஆட்சியில் ஊழல் செய்வது யார்? தவறு செய்வது யார்? இங்கே முதல்வர் ஸ்டாலினே தவறு செய்யத்தான் செய்கிறார்? உள்துறை அமைச்சராக இருந்துகொண்டு பொறுப்பு டிஜிபியை கூட அவர் நியமிக்கவில்லையே. தமிழகத்தில் கஞ்சாவே இல்லையென சுகாதாரத்துறை அமைச்சர் பேசுகிறார். எப்படி இப்படியெல்லாம் பேசுகிறார்கள். தமிழ்நாட்டின் ஒவ்வொரு பெண்களும் தவெகவை ஆதரிக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால், வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தால் 1000 ரூபாய் கொடுப்பதை நிறுத்தி விடுவார்களோ எனப் பயப்படுகிறார்கள்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மக்கள் மனதை வென்று ஆட்சியைப் பிடித்தது. டெல்லி மக்களை விட தமிழக மக்களுக்கு அரசியல் அறிவு குறைவா? மக்கள் ஒரு வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். நம்முடைய செயல்பாடுகளை அவர்களிடம் சரியாக எடுத்துச் சென்றால் வென்றுவிடலாம்" என்றார்.

மொழிப்போர் தியாகிகள்: ``மரியாதை செலுத்த உங்கள் காங்கிரஸ் ஏன் வரவில்லை?" - கேள்வி எழுப்பும் தமிழிசை

இந்தி திணிப்பை எதிர்த்து போராடி உயிர் ஈந்தவர்களை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், மொழிப்போர் தியாகிகள் நினைவ... மேலும் பார்க்க

”வைத்திலிங்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுங்கள்”- திமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட கே.என்.நேரு!

அதிமுகவின் முகமாக இருந்து சோழமண்டல தளபதியாக வலம் வந்த வைத்திலிங்கம் ஒற்றைத் தலைமை பிரச்னைக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்துடன் பயணித்து வந்தவர், கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தா... மேலும் பார்க்க

"சுயசார்பு கனடாவை உருவாக்குவோம்" - மிரட்டிய ட்ரம்ப்; வீடியோ வெளியிட்ட கனடா பிரதமர்

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, பல்வேறு நாடுகள் மீது ட்ரம்ப் அதிரடியாக வரி விதித்து வருகிறார். அமெரிக்காவின் வரி விதிப்பில் இருந்... மேலும் பார்க்க

'எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அடிமை ஆகமாட்டேன்!' - விஜய் உறுதி!

தவெகவின் செயல் வீரர்கள் கூட்டம் மகாபலிபுரத்தில் நடந்திருந்தது. தமிழகம் முழுக்கவிருந்து வந்திருந்த நிர்வாகிகள் மத்தியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியவை.விஜய்அவர் பேசியதாவது, 'நம்முடைய அரசியல் பயணத்த... மேலும் பார்க்க

பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்குமா? - திருமாவளவன் சொன்ன பதில் என்ன?

தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக கூட்டணி இன்னும் முழு வடிவம் பெறாமல் இருக்கிறது. காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, முஸ்லீம் லீக், தவாக உள்ளிட்ட கட்சிகள் இருந்தாலும், தேமுதிக ம... மேலும் பார்க்க

TVK : 'விசில் சின்னத்தை கொடுத்த அதிகாரியே விஜய் ரசிகர்தான்!' - 'அடேங்கப்பா' ஆதவ்!

தவெகவின் செயல்வீரர்கள் கூட்டம் விஜய் தலைமையில் மகாபலிபுரத்தில் நடந்து வருகிறது. அந்த நிகழ்வில் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசியவை.விஜய்ஆதவ் அர்ஜூனா பேசியதாவது, 'நம்மை ... மேலும் பார்க்க