செய்திகள் :

இண்டிகோ விமானத்துக்குள் பறந்த புறா; விரட்டி பிடித்த பணிப்பெண்கள் - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

post image

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகளால் இண்டிகோ விமான சேவை ஏற்கனவே நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பயணிகள் முன்பதிவு செய்திருந்த ரூ.600 கோடிக்கும் அதிகமான பணத்தை இண்டிகோ நிறுவனம் திரும்ப கொடுத்திருக்கிறது.

இந்நிலையில் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து வதோதராவிற்கு புறப்பட இண்டிகோ விமானம் ஒன்று தயாராகிக்கொண்டிருந்தது. பயணிகள் வந்து இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தனர். அந்நேரம் திடீரென புறா ஒன்று விமானத்திற்குள் நுழைந்துவிட்டது.

அந்த புறா உள்ளே நுழைந்தவுடன் எப்படி வெளியில் செல்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தது.

புறாவை பிடிக்க விமான பணிப்பெண்களும், ஊழியர்களும் ஓடினர். அனைவருக்கும் புறா தண்ணி காட்டி ஓடிக்கொண்டிருந்தது.

விமான பணிப்பெண்களோடு சேர்ந்து சில பயணிகளும் புறாவை பிடிக்க முயன்றனர். விமான ஊழியர்கள் புறாவை ஓடி ஓடி பிடிக்க முயற்சி செய்ததை பயணிகள் தங்களது மொபைல் போனில் வீடியோ எடுத்தனர்.

எப்படியோ போராடி புறாவை வெளியில் விரட்டினர். அந்த வீடியோவை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி இருக்கிறது.

அதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ஜோக்காக தங்களது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். ஒருவர் தனது பதிவில், புறா 900 கிலோமீட்டர் வேகத்தில் பறக்க முடிவு செய்துவிட்டதாக குறிப்பிட்டு இருந்தார்.

இண்டிகோ ஏர்லைன்ஸ் கடந்த ஒரு வாரத்தில் ஆயிரக்கணக்கான விமான சேவைகளை ரத்து செய்து இருக்கிறது. நேற்று 650 சேவைகளை ரத்து செய்திருந்தது.

பைலட்களுக்கு மத்திய அரசு கொண்டு வந்த புதிய விதிகளை சரியாக கணிக்க தவறிவிட்டதாக இண்டிகோ விமான நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.

இண்டிகோ நிறுவனம்
இண்டிகோ நிறுவனம்

புதிய விதிகளுக்கு தக்கபடி விமானங்களை இயக்க சரியாக திட்டமிடாதது குறித்து இண்டிகோ நிறுவனத்திற்கு மத்திய அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

அதோடு இண்டிகோ விமான சேவை பாதித்து இருப்பதால் விமான கட்டணம் வெகுவாக அதிகரித்து இருக்கிறது. இதனால் விமான கட்டணத்திற்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு விதித்து இருக்கிறது. வரும் 10-ம் தேதிக்குள் விமான சேவை சரியாகிவிடும் என்று இண்டிகோ ஏர்லைன்ஸ் உறுதியளித்து இருக்கிறது.

பழைய கர்சீஃப்களை வைத்து இப்படியொரு சட்டையா? - இணையத்தை கலக்கும் ‘விண்டேஜ்’ டிசைன்!

ஃபேஷன் என்ற பெயரில் பல்வேறு விஷயங்களை செய்துவருகின்றனர். பழைய காலத்து ஆடைகளை நவீனமாக மாற்றுவதும், வித்தியாசமான பொருட்களை வைத்து ஆடைகளை வடிவமைப்பதும் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. அந்த வகையில், கைக்குட்... மேலும் பார்க்க

``வழுக்கை தலையில் முடி வளர மருந்து, சோதனையில் நல்ல பலன்'' - அயர்லாந்து மருந்துக் கம்பெனி சொல்வதென்ன?

ஆண்களுக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கையாக மாறுவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. சிலருக்கு 70 வயதான பிறகும் முடி உதிர்ந்திராதிருக்கலாம். ஆனால் சிலருக்கு 20 வயதிலேயே முடி உதிர்ந்து வழுக்கையாகி இருப்பார... மேலும் பார்க்க

நிலநடுக்கத்தின்போது உயிரை காப்பாற்றிய ராணுவ வீரரையே திருமணம் செய்துகொள்ளும் பெண் - அடடே லவ் ஸ்டோரி

சீனாவில் ஏற்பட்ட கோர நிலநடுக்கத்திலிருந்து மீட்கப்பட்ட ஒரு பெண் 15 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது உயிரை காப்பாற்றிய ராணுவ வீரரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். 2008ஆம் ஆண்டு சீனாவின் வென்சுவான் மாகாணத்தில்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: சட்டமன்றம் செல்ல ரயில், காரில் பயணம்; இண்டிகோ விமானம் ரத்தால் அமைச்சர்கள் திண்டாட்டம்

நாட்டில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், எம்.பி.க்களும் தப்பவில்லை. மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் குளிர்கால கூ... மேலும் பார்க்க

களம்காவல்: `மொழி கடந்து பார்த்த ரசிகர்களுக்கு.!" - வைரலாகும் நடிகர் மம்மூட்டி வீடியோ

74 வயதிலும் அதே வேகத்துடனும், விவேகத்துடனும் திரையுலகில் பயணித்து வருபவர் நடிகர் மம்மூட்டி. கடந்த சில வருடங்களில் இவர் நடித்தப் படங்கள் காதல் தி கோர், பிரமயுகம், பீஷ்ம பர்வம் போன்ற படங்களும், கதைத் தே... மேலும் பார்க்க