சேலம்: `10 வருஷமாகியும் குழந்தைக்கு பிறப்பு சான்று கிடைக்கல'- அலட்சிய அதிகாரிகள்...
"இந்தப் படத்தில் இருந்துதான் எனக்கு எல்லாமே தொடங்கியது" - 'மௌனம் பேசியதே' குறித்து நெகிழும் த்ரிஷா
இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் சூர்யா, த்ரிஷா, லைலா நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'மௌனம் பேசியதே'.
காதலர் தினத்தை முன்னிட்டு இப்படம் வரும் பிப். 13 ஆம் தேதி ரீ- ரிலீஸ் ஆகிறது.
சில தினங்களுக்கு முன்பு 'மௌனம் பேசியதே' ரீ-ரிலிஸ் குறித்து சூர்யா லைலா வீடியோ வெளியிட்டிருந்தனர்.

தற்போது த்ரிஷா வீடியோ வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "என்னுடைய முதல் படமான மௌனம் பேசியதே' பிப். 13 ஆம் தேதி ரீ- ரிலீஸ் ஆகப்போகிறது.
கண்டிப்பாக எல்லோரும் தியேட்டருக்கு சென்று பாருங்கள். காதலர் தின வாரத்தில் வெளியாவதால் இந்தப் படம் ஸ்பெஷலாக இருக்கிறது.
எப்போதுமே இந்தப் படம் எனக்கு ஸ்பெஷலான படம் தான். ஏனென்றால் இந்தப் படத்தில் இருந்துதான் எனக்கு எல்லாமே தொடங்கியது.
என்னுடைய முதல் வருட சினிமாவில் அமீர் சாருடன் பணியாற்றி இருக்கிறேன்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் வீட்டில் இருப்பது போலவே உணர்ந்தேன்.
என்னுடைய முதல் ரிலீஸ் சூர்யாவுடன் தான் நடந்திருக்கிறது. இப்போது என்னுடைய அடுத்த படத்தின் (கருப்பு) ரிலீஸும் சூர்யாவுடன் தான் நடக்கிறது.

லைலாவுடன் பணியாற்றியதும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகள்.
படத்தைப் பாருங்கள். என்ஜாய் பண்ணுங்கள்" என்று நெகிழ்ச்சியாக வீடியோ வெளியிட்டிருக்கிறார்.





















