செய்திகள் :

இந்திய ரூபாய் மதிப்பு 2026-ம் ஆண்டில் ரூ.100-க்கு சரியாது, ஆனால், எது வரை போகும்?

post image

இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவது தினச் செய்தியாக மாறி வருகிறது. இந்திய ரூபாய் மதிப்பு ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ.96-க்கு கீழ் இறங்கியுள்ளது.

இவ்வளவு வேகமாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வந்தால், விரைவில் 100-ஐ தொட்டுவிடும் என்கிற பயம் இருந்து வருகிறது. அதுவும் 2026-ம் ஆண்டிலேயே ரூ.100-ஐ தொட்டுவிடும் என்கிற பேச்சு இருந்து வருகிறது.

ஆனால், அப்படியெல்லாம் கிடையாது என்று பல பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் நம்மிடம் பேசும்போது, "அடுத்த 6 மாதங்களில், இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.98 - 99 வரை செல்லலாம்.

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்
பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தால், பணவீக்கம் அதிகரித்தாலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடுகளை வெளியேற்றினாலும் இது நடக்கும்" என்று கூறினார்.

நேற்று இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96.96 வரை சென்றது. ஆனால், இந்திய ரிசர்வ் வங்கியின் தலையீட்டால் தற்போது 96.50-க்கு கீழ் வர்த்தகம் ஆகி வருகிறது.

இந்திய ரிசர்வ் வங்கியின் தலையீடு இந்திய ரூபாய் மதிப்பை இந்த ஆண்டு ரூ.100 வரை கொண்டு செல்லாது என்பதே நிபுணர்களின் நம்பிக்கை.

TVK Minister: மொபைல் கடை உரிமையாளர் டு போக்குவரத்துத்துறை அமைச்சர்! - யார் இந்த தமிழன் பார்த்திபன்?

சேலம் மாவட்டம் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் த.வெ.க வேட்பாளராக களமிறங்கிய விஜய் தமிழன் பார்த்திபன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில்... மேலும் பார்க்க

அன்று கட்சிக்குள் வெடித்த பூகம்பம்; டெல்லி நெருக்கம்! - உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதனின் பின்னணி

தமிழக வெற்றி கழகத்தின் புதிய அமைச்சர்கள் இன்று பொறுப்பேற்று இருக்கிறார்கள். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கபட்டிருக்கிறது. குறிப்பாக மேலூர் பொதுத் தொக... மேலும் பார்க்க

கடன் பெற்றவர்களுக்கு 'மரியாதை': கடன் வசூலிக்கும் ஏஜென்ட்டுகளுக்கு RBI வழிகாட்டுதல்கள்! | 15 Points

கடன் வாங்கியவர்களுக்கும், கடன் வாங்க உள்ளவர்களுக்கு உள்ள பெரும் பயமே 'கடன் கொடுத்தவர்கள் வீடு தேடி வந்து திட்டிவிடுவார்களோ' என்பது தான். இங்கே பலரால் சூழல்களால் தான் கடன் தவணையைக் கட்ட முடியாமல் போய்வ... மேலும் பார்க்க

தேனி: அரசு மருத்துவமனை வார்டுகளில் சுற்றித் திரியும் எலிகள்; நோயாளிகள் அச்சம்!

தேனி மாவட்டம், கானா விலக்கில், அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு தேனி மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், கேரளம் மாநிலத்தில் இருந்தும் நாள்தோறும்... மேலும் பார்க்க

தவெக அமைச்சரவையில் இடம்பெறும் திருமாவளவன்? திருச்சி கிழக்கில் இடைத் தேர்தலில் போட்டியா?

த.வெ.க அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெற வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்புவிடுத்த நிலையில், வி.சி.க சார்பில் அதன் தலைவர் திருமாவளவனே அமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ளார் என்கிறார்கள... மேலும் பார்க்க

ஆந்திரா: `நீண்டகாலத் திட்டமிடல் இல்லாமல் வெறுமனே...' - விவாதத்துக்குள்ளாகும் அரசின் திட்டம்!

மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டபோது, தென் மாநிலங்கள் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதால், பெரும் சிக்கலுக்கு உள்ளாகின. முன்னாள் முதல்வர் ஸ்டாலின் இந்த த... மேலும் பார்க்க