செய்திகள் :

"இன்ஸ்டா காதலை கைவிட மறுத்த தங்கை; கொலை செய்த அண்ணன்" – ஆணவக் கொலையா? - போலீஸாரின் விளக்கம் என்ன?

post image

தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் அருகிலுள்ள தெற்குமயிலோடை அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி எஸ்தர் பாலின். இவர்களுக்கு சிவஞானம் என்ற மகனும், அபிசெல்வி என்ற மகளும் உள்ளனர். இதில், பள்ளிப்படிப்பினை முடித்த அபிசெல்வி கல்லூரிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்த நிலையில், சேலத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டு பின்னர் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கயத்தார் காவல் நிலையம்

இவர்களது காதல் விவகாரம் குடும்பத்தினருக்குத் தெரியவரவே அண்ணன் சிவஞானம் கண்டித்து வந்துள்ளார். ஆனாலும், அபிசெல்வி வீட்டிற்குத் தெரியாமல் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 9-ம் தேதி அபிசெல்வி பூச்சிமருந்து குடித்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான் அந்தப் பெண்ணை காதல் விவகாரத்தில் அண்ணன் கொலை செய்ததும் அதற்கு தாயும் உடன் இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

இது குறித்து கயத்தார் காவல் நிலைய போலீஸாரிடம் பேசினோம், ”தங்கையிடம் எவ்வளவோ சொன்னேன். கேட்கல, தொடர்ந்து அந்த பையனிடம் பேசிக் கொண்டிருந்தார். இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க அவசரமாக மாப்பிளை பார்த்துக் கொண்டிருந்தோம்.

”கல்யாணம் செஞ்சா அவனைத்தான் பண்ணுவேன்” என விடாப்படியாக இருந்தாள். 9-ம் தேதி இரவும் செல்போனில் பேசிக் கொண்டிருந்தாள். கடைசியாக சொல்லிப் பார்த்தேன். அப்போதும் கேட்கல. ஆத்திரத்துல கட்டையால அடிச்சுட்டேன். தங்கையின் இறப்பை மறைக்க தற்கொலை செஞ்சுக்கொட்டதா நானும் அம்மாவும் சொன்னோம்" என  விசாரணையில் சிவஞானம் கூறினார்.

கைது செய்யப்பட்ட சிவஞானம்- எஸ்தர்

ஆனால், விசாரணையின் போது அந்த பெண்ணின் அண்ணன், அம்மா இருவருமே பதட்டமாகவேக் காணப்பட்டனர். அவர்களின் பேச்சிலும் பதட்டம் தென்பட்டது. அப்போதே எங்களுக்கு சின்ன சந்தேகம் ஏற்பட்டது. பிரேதப் பரிசோதனையின் முதல்கட்ட அறிக்கையில் பின்கழுத்து, மூக்கு பகுதில் மரக்கட்டையால் ஓங்கி அடித்ததற்கான காயங்கள் உள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருவரையும் தனித்தனியாக விசாரித்ததில் அடித்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.” என்றனர்.   

இதுகுறித்து கோவில்பட்டி டி.எஸ்.பி., ஜெகநாதனிடம் பேசினோம், ”அபிச்செல்வியின் காதல் விவகாரம் குடும்பத்தினருக்குத் தெரிந்ததும் வீட்டிற்கு தெரிந்து பிரச்சனை எழுந்துள்ளது. காதலை கைவிட மறுத்து அபி செல்வி ஏற்கெனவே ஒருமுறை மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த பிரச்னைக்கு பிறகு ஹரி பிரசாத்  அபி செல்வியுடன் பழகுவதை நிறுத்திக் கொண்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு  ஹரிபிரசாத் இன்ஸ்டாகிராம் ஐடிக்கு  அபி செல்வி மெசேஜ் அனுப்பி உள்ளார்.

தெற்கு மயிலோடை

ஆனால், ஹரி பிரசாத் அதை எதையும் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் அபி செல்வியின் செல்போன் பழுதாகிவிட  அதை சரிபார்க்க தனது சகோதரர் சிவஞானத்திடம் அவர் கொடுத்துள்ளார். அப்போது ஹரி பிரசாத்திற்கு அபி செல்வி மெசேஜ் அனுப்பி இருப்பதை பார்த்து மீண்டும் தங்கையை கண்டித்துள்ளார். அதில் ஏற்பட்ட தகராறால் அபிசெல்வி கொலை செய்யப்பட்டுள்ளார். இது ஆணவக்கொலை அல்ல. ஆணவக்கொலை என தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது” என்றார்.

”கடந்த 2017 முதல் 2025 வரை தமிழகத்தில் 59 சாதிய ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன. இந்த ஆண்டில், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தென்காசி  மாவட்டம்  செங்கோட்டையை சேர்ந்த சுபாஷ் (16.04.2026), தூத்துக்குடி மாவட்டம்,  கரடிகுளத்தைச் சேர்ந்த  சஞ்சய்  (17.05.2026), நெல்லை மாவட்டம், சுத்தமல்லியைச் சேர்ந்த ராமலட்சுமி (09.06.2026) ஆகியோருடன்   இந்த கயத்தார் அபிசெல்வி கொலையுடன் சேர்த்து கடந்த இரண்டு மாதங்களில் நான்கு ஆணவக் கொலைகள் நடந்துள்ளன.

தெற்கு மயிலோடை கிராமம்

தமிழ் நாட்டில் குறிப்பாக தென்மாவட்டங்களில்தான் ஆணவப் படுகொலைகள் அரங்கேறி வருகின்றன. ஆணவப்படுகொலைக் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திட உடனடியாக தனி சட்டம் இயற்றப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் கொலை தீர்வாகுமா?” என கவலை தெரிவிக்கின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள்.

இளம்பெண் கூட்டு பாலியல் கொடுமை வழக்கு; `எம்.எல்.ஏ சரவணனை ஏன் கைது செய்யவில்லை?' - வலுக்கும் கண்டனம்!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர், பாலமுருகன். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். அவரது நண்பர் ராமநா... மேலும் பார்க்க

`என் மகள் இறந்த மாதிரியே, நானும் சாகப் போகிறேன்!’ - ஆட்டோ ஓட்டுநரின் விபரீத முடிவு; பகீர் பின்னணி!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகேயுள்ள சக்கரகுப்பம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரஜினி (வயது 41). இவரின் மனைவி கோமதி. இவர்களின் 15 வயது மகள் தர்ஷினி, கடந்த ஏப்ரல் மாதம் ... மேலும் பார்க்க

சென்னை: "ஐயா, என் மனைவிய கொன்னுட்டேன்" - 54 வயது பெண்மணியைக் கொடூரமாகக் கொன்ற 68 வயது முதியவர்

சென்னை அண்ணாநகர் கிழக்கு சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் (68). இவரின் மனைவி சாந்தி (54). கடந்த 2010-ம் ஆண்டு ஏகாம்பரம் தற்கொலை செய்து கொண்டார். அதனால் சாந்தி, 2016-ம் ஆண்டு முதல் அதே பகுதியை... மேலும் பார்க்க

விழுப்புரம்: சிறுமியை மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமை; கதறிய குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் பெற்றோரை இழந்த 14 வயது சிறுமி ஒருவர், தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவா என்ற நபர், அந்தச் சிறுமி... மேலும் பார்க்க

போலீஸ்காரரிடமே தங்க செயின், செல்போன் திருட்டு - வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் அலறும் பயணிகள்!

காஞ்சிபுரம் டவுன் வ.உ.சி நகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் அக்‌ஷய்பிரதீப் (வயது 32). செங்கல்பட்டு காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் அண்மையில், உறவினரின் வீ... மேலும் பார்க்க

கோவை: கடத்தப்பட்ட இளைஞர்கள்; ரூ.50 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த காவலர்கள் - அதிர்ச்சி சம்பவம்

கோவை மாவட்டம், போத்தனூரை அடுத்த சித்தண்ணபுரம், இந்திரா நகரைச் சேர்ந்தவர் நவீன் (29). இவர் வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பகுதியில் தங்கியிருந்து ஆன்லைன் டிரேடிங் செய்து வந்துள்ளார். கடந்த 8-ஆம் தேதி மதியம்,... மேலும் பார்க்க